Sep 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -143




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5714.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5766.05 வரை உயர்ந்தது 5711.00 வரை கீழே சென்று 5729.55 முடிவடைந்தது.
  •  இந்திய  அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் 29,397 கோடி டாலர் சரிந்துள்ளது .
  • அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் ,நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்தும் வகையிலும்  அரசு பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .( இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது .)
  • இந்த நடவடிக்கையை தொடர்ந்து அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது .
  • மத்திய அரசு கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளது .
  • ஐரோப்பிய நாடுகள் நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்த தீவிரம் கட்டி வருகின்றன. இதனை  தொடர்ந்து ஆசிய சந்தையும் நமது சந்தையும் உயர்ந்தன .
  • சிமெண்ட் துறை சேர்ந்த  பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது,இதில் பல சிமெண்ட் நிறுவன பங்குகள் 52 வார உயர்வை எட்டின .
  • ஏனெனில் ,முதலீட்டளர்கள்  மற்ற துறைகளை விட சிமெண்ட் துறையில் முதலீடிற்கு அதிக ஆர்வம் கட்டுவதும் ,சிமெண்ட் துறைகளின் முதலீடு  கணிசமான ஆதாயம் மற்றும் வளர்ச்சிஅடைந்துள்ளன . ( சில மாதங்களில் சுமார் 40 % மேல் ) . குறிப்பு : பரஸ்பர நிதி நிறுவனங்களும் இந்த துறையில் குறிப்பிட  தக்க அளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன .
  • ஏற்றுமதி நிறுவங்களுக்கு மீண்டும் சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ .1600 கோடி அளவிற்கு சலுகைகள் வழங்க பட்டது குறிப்பிடத்தக்கது .
  • உலக நாடுகளில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை ,மற்றும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக நமது ஏற்றுமதி பெரும் சரிவை கண்டது .இதனை சரி செய்ய மீண்டும் சலுகை திட்டம் அறிவிக்க பட்டுள்ளது .
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்துள்ளது .

    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5740 STAYED ABOVE 5754 TARGETS ,,5766,,5783,5797,,

    THEN 5821,,5846,,,,,,

    SUPPORT LEVELS 5710,,5700 .,,,


    SELL BELOW 5691 STAYED WITH VOLUME -5680,TARGETS 5668,5554,,5543,,


    THEN 5618,,5598,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    Sep 27, 2012

    பங்கு வர்த்தகம் மலர் -142




    நண்பர்களே வணக்கம் , 

    தேசிய  NIFTY (FUTURE)  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5663.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5678.25 வரை உயர்ந்தது 5643.60 வரை கீழே சென்று 5669.85 முடிவடைந்தது.
    •  இன்று இம்மாத ஊக வணிகத்தின் இறுதி நாள் என்பதால் ஏற்ற ,இறக்கங்கள் காணப்படும் என்பதை நினைவில்  கொள்ளவும் .
    • சில்லறை வர்த்தகத்தில் அந்நியர்கள் நுழைவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் நமது மத்திய அரசு FDI -கள் நம் நாட்டில்  இன்சூரன்ஸ் துறைகளில் கால் பதிக்க சுமார் 49 % வரை ஒப்புதல் வழங்கி உள்ளனர் .
    • வால்-மார்ட் நிறுவனம் நம் நாட்டில் சுமார் 12 முதல்  18 மாதங்களுக்குள் தனது நிறுவங்களை துவங்க உள்ளது .
    • SBI-வங்கியை தொடர்ந்து HDFC-வங்கியும் தனது அடிப்படை வட்டி விகிதத்தை குறைக்க தீர்மானித்துள்ளது .ரிசர்வ் வங்கி CRR எனப்படும் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை 0.25 % குறைத்து 4.5 % மாக நிர்ணயித்ததை தொடர்ந்து இந்த வட்டி குறைப்பு செய்யபட்டுள்ளது .
    • இதனை தொடர்ந்து மற்ற வங்கிகளும்  கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கும் என மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது .

      இன்றைய NIFTY FUTURE LEVELS :

      BUY ABOVE 5690 STAYED ABOVE 5704 TARGETS ,,5720,,5732,5744,,

      THEN 5762,,5787,,,,,,

      SUPPORT LEVELS 5646,,5638 .,,,


      SELL BELOW 5625 STAYED WITH VOLUME -5615,TARGETS 5604,5590,,5573,,


      THEN 5558,,5540,,,


      DISCLAIMER:


      இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


      Sep 26, 2012

      பங்கு வர்த்தகம் மலர் -141



      வணக்கம் நண்பர்களே ,

      நேற்றைய நிலைகளே இன்றும் தொடரும் 


      இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

      BUY ABOVE 5695 STAYED ABOVE 5711 TARGETS ,,5726,,5740,5754,,

      THEN 5770,,5792,,,,,,

      SUPPORT LEVELS 5660,,5652 .,,,


      SELL BELOW 5640 STAYED WITH VOLUME -5628,TARGETS 5614,5601,,5584,,


      THEN 5560,,5514,,,


      DISCLAIMER:


      இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

      Sep 25, 2012

      பங்கு வர்த்தகம் மலர் -140



      இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

      BUY ABOVE 5695 STAYED ABOVE 5711 TARGETS ,,5726,,5740,5754,,

      THEN 5770,,5792,,,,,,

      SUPPORT LEVELS 5660,,5652 .,,,


      SELL BELOW 5640 STAYED WITH VOLUME -5628,TARGETS 5614,5601,,5584,,


      THEN 5560,,5514,,,


      DISCLAIMER:


      இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


      Sep 23, 2012

      பங்கு வர்த்தகம் மலர் -139





      நண்பர்களே வணக்கம் , 

      தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5583.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5735.55 வரை உயர்ந்தது 5583.85 வரை கீழே சென்று 5707.05 முடிவடைந்தது.
      •  நம் நாட்டில்  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வேகம்  அடைந்துள்ளன .இதன் தொடர்ச்சியாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடிற்கு அனுமதி மற்றும் விமான சேவை துறைக்கு அனுமதி வழங்கியதை நாம் அறிந்ததே .
      • தொடர்ந்து மருத்துவ துறை மற்றும் ஆயுள் காப்பிட்டு துறைக்கும் , அனுமதி அளிக்கபட உள்ளது .
      • வெள்ளியன்று நமது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார் .
      • அதாவது வெளி நாடுகளில் கடன் திரட்டும் இந்திய  நிறுவனங்களுக்கான வரியை 2010 ஜூலை மாதத்திலிருந்து 2015 ஜூன் மாதம் வரை 5 % குறைத்துள்ளார் ,இந்த வரி விகிதம் முதலில் 20 % மாக இருந்தது குறிப்பிடத்தக்கது .இந்த சலுகையால் வெளிநாட்டு நிதி அதிக அளவில் நம் நாட்டிற்குள் வரும்.
      • வெளிநாட்டு வணிக கடன்களை கொண்டு ஏற்கனவே வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும் .இதனை தொடர்ந்து நம் சந்தை அதிக அளவில் ஏற்றம் கண்டது .
      • மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் அந்நிய முதலீடு அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது .
      • நேற்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.92 அதிகரித்து 53.75 ல் முடிவடைந்த்தது .
      • அந்நிய செலாவணி வரத்து மேலும் அதிகாரிக்கு நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
      • ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது 
      • இந்த அறிவிப்பின் படி ஓராண்டில் ரூ .50,000 முதலீடு செய்யலாம் .இந்த முதலீட்டில் ரூ .25,000 வரை வரி சலுகை பெற இயலும் .இதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது , 
      • அவை 100 முன்னணி நிறுவங்களில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள வேண்டும் .மற்றும் வாங்கிய பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்க கூடாது போன்ற சில நிபந்தனைகளும்  விதிக்க பட்டுள்ளது .
                                              
        இன்றைய NIFTY FUTURE LEVELS :

        BUY ABOVE 5720 STAYED ABOVE 5736 TARGETS ,,5748,,5763,5777,,

        THEN 5801,,5827,,,,,,

        SUPPORT LEVELS 5684,,5674 .,,,


        SELL BELOW 5660 STAYED WITH VOLUME -5650,TARGETS 5640,5632,,5616,,


        THEN 5591,,5571,,,


        DISCLAIMER:


        இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



        Sep 21, 2012

        பங்கு வர்த்தகம் மலர் -138




        நண்பர்களே வணக்கம் , 

        தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5552.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5594.60 வரை உயர்ந்தது 5551.25 வரை கீழே சென்று 5571.00 முடிவடைந்தது.
        • உலக வர்த்தக சந்தைகளில் தொடர்ந்த தாக்கத்தால் நம் சந்தை கீழே சரிந்தது .
        • தொடர்ந்து உயர்வையே சந்தித்து வந்த நம் சந்தைகளில் லாபத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் பங்குகளை விற்றதால் நம் சந்தையில் பங்குகள் சரிந்தன .
        • மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியதாலும் ,சில்லறை வர்த்த்தத்தில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நாடு முழுவது பெரும் எதிர்ப்பும் ,மத்திய அரசில் பங்கு வகித்த திரிணாமுல்  காங்கிரஸ்  கட்சி தந்து ஆதரவை விளக்கி கொண்டதாலும் மத்திய அரசு நிலை தடுமாறி உள்ளது .
        • நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்பட்டது ,மேலும் உள்நாட்டு அரசியலில் நிலவி வரும் மாற்றங்களை தொடர்ந்து சந்தை கீழ் நோக்கி பயணித்தது .
        • அரசியல் குழப்பங்களில் நம் சந்தை பயணிப்பதால் சாதகமான செய்திகள் வரும் வரை நம் சந்தை மேல் செல்வது சற்று கடினம் .
                                 

          இன்றைய NIFTY FUTURE LEVELS :

          BUY ABOVE 5581 STAYED ABOVE 5592 TARGETS ,,5604,,5617,5632,,

          THEN 5649,,5668,,,,,,

          SUPPORT LEVELS 5553,,5542 .,,,


          SELL BELOW 5531 STAYED WITH VOLUME -5520,TARGETS 5508,5494,,5479,,


          THEN 5463,,5444,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Sep 18, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -137




          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5670.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5670.10 வரை உயர்ந்தது 5593.50 வரை கீழே சென்று 5616.70 முடிவடைந்தது.
          • FINANCIAL TECHNOLOGIES INDIA LTD நிறுவனத்தின் பங்குகளை BLACKSTONE GPV CAPITAL PARTNERS என்ற நிறுவனம் 6 % அளவிற்கு வாங்கி உள்ளது .
          • அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதால்  PANTALOON RETAIL ,KINGFISHER AIRLINES ,SPICEJET,மற்றும் JET AIRWAYS நிறுவனங்கள் நல்ல ஏற்றம் கண்டன .
          • ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய கடன் கொள்கையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரேப்போவில் எவ்வித மாற்றமும் இல்லை .ஆனால் வங்கிகளின் பண கையிருப்பு விகிதம் ( CRR ) மட்டும் 0.25 % குறைந்து தற்போது 4.5 % மாக மாறியமைந்துள்ளது.
          • இதனால் வங்கி துறைக்கு ரூ . 17,000 கோடி கிடைக்கும் இந்த நடை முறை வரும் 22 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கபட்டுள்ளது .
          • இன்றைய NIFTY FUTURE LEVELS :
          BUY ABOVE 5630 STAYED ABOVE 5644 TARGETS ,,5661,,5652,5673,,

          THEN 5687,,5707,5726,

          SUPPORT LEVELS 5601,,5586 .,,,


          SELL BELOW 5571 STAYED WITH VOLUME -5560,TARGETS 5550,5533,,5523,,


          THEN 5505,,5480,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Sep 17, 2012

          சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல்




           சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடாக 51 % வரை நம் நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ள  மத்திய அரசு அவசரமாக அனுமதி வழங்கி உள்ளது . ஏன்?

          மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பெரும் எதிர்ப்பு நாடு முழுவதும்  கிளம்பி உள்ளது .சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் பெரும் பாதகமும் ,நம் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பபடுகிறது .

          நாம் அறிந்த வகையில் ஒரு உதாரணம் காண்போம் : 

                                            

          நாம் சில ஆண்டுகளுக்கு முன்பாக கடைகளில் காளிமார்க் " , " வின்சென்ட் " போன்ற இந்திய தயாரிப்பு குளிர்பானங்களை சுதேசி ) பருகி இருப்போம் ! என்பதை நினைவுபடுத்தி பாருங்கள் !
          அதுவே இன்று அந்நிய தயாரிப்புகளான ( விதேசி ) " பெப்சி " , " கோகோ - கோலா போன்ற குளிர்பானங்களை மட்டுமே கடைகளில் அதிகமாக பார்க்க முடிகிறது .
          அந்நிய தயாரிப்பு நிறுவங்கள் நம் நாட்டில் காலடி வைத்த பிறகு நம் தயாரிப்பு குளிபானங்கள் காணாமல் போய்விட்டது என்பதை நாம் அறிவோம் .! 
          அதையே நாம் தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்த வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம் .இந்த மாற்றம் ,இந்த நிர்பந்தம் ,  அனைத்துமே அந்நிய தயாரிப்புகள் உள்ளே வந்ததன் விளைவே காரணமாகும் .இதே போன்ற நிர்பந்தங்களுக்கு இனி மேலும் மேலும் நாம் அறியாமலேயே தள்ளபடுகிறோம்.

          மேற்கண்ட சிறு உதாரணம் மூலம் அந்நிய சில்லறை வர்த்தகத்தின் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம் .

          நம்   அறிவுஜீவிகள் சிலரின் கருத்துபடி அந்நிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் வேலை வாய்ப்பு பெருகும் ,இடைத்தரகர்கள் நீக்க படுவார்கள் ,நியாயமான விலையில் பொருட்கள் மக்களை சென்றடையும் ,நாட்டின் பொருளாதாரம் உயரும் ,என்பதே அவர்கள் கருத்து .

           அமெரிக்காவில் சில மாகாணங்களில் வால் -மார்ட்  போன்ற நிறுவங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறியுங்கள் !  

                                                    

          அந்நிய முதலீடுகளை அனுமதி வழங்கி வரவேற்ற ஐரோப்பியா , அமெரிக்கா ,போன்ற மேலும் பல நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதை நம் அறிவு ஜீவிகள் உணர்வார்களா ?

           நேற்று வரை நம் பிரதமரை கையாலாகாத பிரதமர் என்று கூறிய அமெரிக்க பத்திரிகைகள் ,அமெரிக்க நிறுவனங்களுக்கு வரவேற்பு கொடுத்ததால் பாரத பிரதமர் ரொம்ப நல்லவர் அவர்கள் நாட்டு பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளன .யாருக்கு வேண்டும் அவர்கள் பாராட்டும் ,ஏளன பேச்சும் .

                                                       

          ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டை பிடித்தார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் !அட பயப்பட வேண்டாம் சாமி ! சில காலங்கள் கழித்து அவன் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும் .அந்நியர்கள் சம்பாதிக்க நாம் பட்டு கம்பளம்  விரிக்க வேண்டுமா ? சிந்தியுங்கள் !!

          நம் மத்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்போ ? அச்சுறுத்தலோ ? இல்லை .தேவையற்ற பயம் தேவை இல்லை என்று கூறினாலும் ,நம்மை தொடரும் சந்ததிகள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தள்ளபடுவார்களா ?

          என்ன வளம் இல்லை ! நம் பாரத  தாய் திருநாட்டில் !



          Sep 16, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -136



          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5530.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5597.70 வரை உயர்ந்தது 5530.05 வரை கீழே சென்று 5584.90 முடிவடைந்தது.
          • பணவீக்கம் 7.55 % அதிகரித்துள்ளது , தொழில்துறை உற்பத்தியிலும் ,எதிர்பார்த்த அளவில்  பெரிய  முன்னேற்றம் ஏற்படவில்லை ( 0.1 % ) என்பது குறிப்பிடத்தக்கது .
          • பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது ரிசர்வ் வங்கி ,வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்பது நம் கருத்து .(  பலமுறை பணவீக்க உயர்வை ரிசர்வ் வங்கி காரணம் கட்டி உள்ளது குறிப்பிட வேண்டிய விசயமாகும் ).
          • கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் உயர்ந்துள்ளது ,இதனால் முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகிறது என்பதை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளவேண்டும் .
          • அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி பொருளாதாரத்தை வலுபடுத்தும் வகையில் 2015 -ம் ஆண்டு வரை  ஒவ்வொரு மாதமும் 4000 கோடி டாலர் அளவிற்கு அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை வாங்கிகொள்வதாக அறிவித்தது ,இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன ,இதன் தாக்கமாக நம் சந்தையும் உயர்வை சந்தித்தது .

          • பார்தி ஏர்டெல் 
          • பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பார்தி இன்ப்ரா டெல் பங்கு வெளியிட்டிற்கு அனுமதி வேண்டி SEBI-யிடம் விண்ணபித்துள்ளது .

          • பத்தனம்திட்டா பாப்புலர் பைனான்ஸ், பாப்புலர் டிரேடர்ஸ் என்ற பெயரில் கேரளாவை சேர்ந்த நிதி நிறுவனம் பொது மக்களிடமிருந்து வைப்பு நிதியை பெற்று வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு ,மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கிளைகள் கொண்டுள்ளது , ஆனால் இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
          • டீசல் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு உயர்ந்துள்ளது . டீசல் விலை உயர்வுக்கே ரூபாய் மதிப்பு அதிகரித்துவிட்ட நிலையில் இந்தியா அதிரடியாக மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சமான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியால் ரூபாய் மதிப்பு இன்னமும் அதிகரிக்கலாம் என செய்திகுறிப்பு தெரிவிகின்றன .
          • டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை 0.2 சதவீதம் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது.
          • நம் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 158 கோடி டாலர் (8,690 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,204 கோடி டாலராக (16,06,220 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
          • வெளிநாட்டில வாழும் இந்தியர்கள் நம் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யும் அளவு ஆறு மடங்கு உயர்ந்துள்ளது என செய்தி குறிப்புகள்  தெரிவித்துள்ளன .
          • இன்றைய NIFTY FUTURE LEVELS :
          BUY ABOVE 5602 STAYED ABOVE 5617 TARGETS ,,5633,,5652,5677,,

          THEN 5694,,5714,,

          SUPPORT LEVELS 5553,,5540 .,,,


          SELL BELOW 5530 STAYED WITH VOLUME -5520,TARGETS 5507,5493,,5476,,


          THEN 5457,,5439,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Sep 14, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -135



          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5450.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5454.95 வரை உயர்ந்தது 5435.35 வரை கீழே சென்று 5450.70 முடிவடைந்தது.
          • சந்தையின் நகர்வுகள் FED-அறிவிப்பை தொடர்ந்து இருக்கும்.
          • FED -அறிவிப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ,இன்று வெளிவர உள்ள பண வீக்கம் பற்றிய அறிவிப்பு சாதகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
          • FED மற்றும் பணவீக்கம் ( INFLATION ) சாதகமாக இருக்கும் நிலையில் வெளிவர உள்ள RBI -அறிவிப்பில் நீண்ட கால எதிர்பார்பான வட்டி விகித குறைப்பு இருக்கும் வாய்ப்பு உள்ளது .
          • எல்லாம் சாதகமாக அமையும் பட்சத்தில் சந்தையின் நகர்வுகள் மேல் நோக்கி இருக்கும் .
          • டீசல் விலை ரூ .5 உயர்த்தபட்டுள்ளதால்  இந்தியாவின் கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது என நமது பிரதம மந்திரியின் நிதி ஆலோசனை குழு தலைவரான திரு C.ரங்கராஜன் அறிவித்துள்ளார் .
          •   
          • இன்றைய NIFTY FUTURE LEVELS :
          • நேற்றைய  நிலைகளே இன்றும் தொடரும் ,,,,,,,

          BUY ABOVE 5460 STAYED ABOVE 5476 TARGETS ,,5485,,5502,5520,,

          THEN 5537,,5556,,

          SUPPORT LEVELS 5421,,5412 .,,,


          SELL BELOW 5401 STAYED WITH VOLUME -5390,TARGETS 5376,5362,,5350,,


          THEN 5332,,5320,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Sep 13, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -134





          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5423.20 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5452.90 வரை உயர்ந்தது 5402.45 வரை கீழே சென்று 5446.95 முடிவடைந்தது.
          •  கோவாவில் இயங்கும் இரும்புதாது எடுக்கும் 93 நிறுவனங்களுக்கு  அரசு தற்காலிக தடை உத்தரவு  பிறப்பித்துள்ளது .
          • ஜெர்மனியின் நீதிமன்றத்தில் ஐரோ  bailout க்கு சில  நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்து அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உலக சந்தைகளை தொடர்ந்து நம் சந்தையும் உயர்ந்தது .
          • தேசிய சென்செக்ஸ் 6 மாதம் கழித்து புதிய உயர்வை தொட்டது (closing ).
          • ICICI BANK , HDFC BANK , AXIS BANK போன்ற வங்கிகள் DEPOSIT மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன .
          • விமான துறை பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கும் விவகாரம் தொடர்பாக விமானத்துறை அமைச்சர் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து விமான துறை பங்குகள் மேலே சென்றன .
          • தொழில்துறை உற்பத்தியில் நேற்று வெளிவந்த அறிக்கையில் வளர்ச்சி சற்று உயர்ந்து வெளிவந்துள்ளது .
          • இன்றைய NIFTY FUTURE LEVELS :

          BUY ABOVE 5460 STAYED ABOVE 5476 TARGETS ,,5485,,5502,5520,,

          THEN 5537,,5556,,

          SUPPORT LEVELS 5421,,5412 .,,,


          SELL BELOW 5401 STAYED WITH VOLUME -5390,TARGETS 5376,5362,,5350,,


          THEN 5332,,5320,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


          Sep 12, 2012

          பங்கு வர்த்தகம் மலர் -133




          நண்பர்களே வணக்கம் , 

          தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5359.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5409.00 வரை உயர்ந்தது 5335.00 வரை கீழே சென்று 5405.35 முடிவடைந்தது.
          •  எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெணெய் விலை உயர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக விவாதிக்க இருந்த மத்திய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.ஆகவே தற்போது விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .


          • இன்று காலை 11.00 மணியளவில் தொழில்துறையின் உற்பத்தி DATA வெளிவர உள்ளது .சமீபமாக தொடர்ந்து சரிந்த நிலையிலேயே உற்பத்தி வளர்ச்சி உள்ள நிலையில் இம்மாத அறிக்கை எதிர்பார்ப்புடன் உள்ளது .


          • ஜெர்மனி நீதிமன்றத்தில் ஐரோ புதிய BAILOUT fund அங்கீகாரம் தொடர்பான விவாதமும் உள்ளதால்,உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன ஆகவே  உலக சந்தையை பொறுத்தே நம் சந்தையின் நகர்வுகளும் இருக்கும் .


          • இன்றைய NIFTY FUTURE LEVELS :

          BUY ABOVE 5414 STAYED ABOVE 5428 TARGETS ,,5439,,5460,5477,,

          THEN 5495,,5510,,

          SUPPORT LEVELS 5388,,5376 .,,,


          SELL BELOW 5365 STAYED WITH VOLUME -5352,TARGETS 5338,5324,,5303,,


          THEN 5286,,5270,,,


          DISCLAIMER:


          இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது