Dec 6, 2011
கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல்
முல்லை பெரியார் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் கேரளா அரசு செயல்படும் இந்நிலையில் கேரளா சென்ற அப்பாவி தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல் காரணமாக கம்பம் ,குமுளி ஆகிய இடங்களில் தமிழக போலீசார் கேரளா செல்லும் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர் .
சிலர் குமுளி காவல் நிலையம் அருகிலேயே கேரளாவில் இருந்து வரும் தமிழத்தை சேர்ந்த லாரியை தடுத்து நிறுத்தி வாகனத்தை சேதபடுத்தி உள்ளனர். மேலும் கேரளத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அணையை உடைக்கும் எண்ணத்துடன் கடப்பாரை ,மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் .இந்த செயல் மிகவும் கண்டிக்க தக்கதாகும் .
இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் உண்டாக்கி உள்ளது .தமிழகத்தில் சில இடங்களில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது .இந்நிலை நீடிக்குமானால் இரு மாநில உறவுகள் பாதிக்கபடுவதுடன், இரு மாநில மக்களின் ஒற்றுமையும் ,அமைதியான வாழ்வு உரிமையும் சீர்குலையபடும்.
முல்லை பெரியாறு தொடர் கதையை முற்று புள்ளி வைக்க உச்ச நீதிமன்றமும் ,மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் இந்தியாவின் மாநில அரசுகளின் நல்லுறவு ,ஒற்றுமை,கேள்விகுறியாகிவிடும் என்பது நிச்சயம்.அதுமட்டும் அல்லாமல் இரு மாநிலங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பும் மத்திய அரசு கைகளில் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும் .
முல்லை பெரியார் அணையின் முழு பிரச்சினை விவரமும் , தீர்வும் அடங்கிய ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது இதை அவசியம் பாருங்கள் புரியும் .
முல்லை பெரியார் அணை-பகுதி -1
http://www.youtube.com/watch?v=eXti8xblCLM
முல்லை பெரியார் அணை-பகுதி -2
http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE
எச்சரிக்கை !!
வன்முறையாளர்களே வன்முறை நிரந்தர தீர்வல்ல .
பாதிக்க படபோவது இரு மாநில அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல .சிந்திப்பீர் !!!!!!!!
Subscribe to:
Posts (Atom)