நண்பர்களே , எங்கே செல்கிறது இன்றைய நம் சமுதாயம் ஏன் இவ்வளவு கேவலமான எண்ணங்களும் ,கேவலமான மனநிலைகளும் உள்ளது நம் மனித சமுதாயத்தில் ??????
நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் மிகவும் மனதை நெருடுவதாகவும் ,மனித சமுதாயத்தின் மேல் கோபமும் பட வைத்துவிட்டது .மிருகங்களுக்கு உள்ள மனிதாபமும் இல்லாமல் ,இந்த சமுதாயம் மிருகத்தை விட கேவலமான திகழ்கிறது .
நேற்று நடந்த ஒரு சம்பவம் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் !
அழகிய மரங்களும் ,பூக்களும் ,வயல்களும் நிறைந்த கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண் சற்று மன நிலை பாதித்த நிலையில் மரத்தின் அடியில் தன் உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாத நிலையில் ,தன் உடலில் துணி இல்லை என்ற உணர்வும் அற்ற நிலையில் நிர்வாணமாக அமர்ந்துள்ளார் .
அந்த இளம் பெண்ணை சுற்றி காமுகர்கள் கூட்டம் அருகில் நின்று ரசித்துக்கொண்டும் ,கண்களால் ருசித்துகொண்டும் ,,ஏன் சிலர் தன் கைப்பேசியில் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டும் உள்ளனர் .
அருகில் உள்ள வீட்டினரோ " நமக்கேன் " என்றும், எனக்கு என்ன தேவை ? என்ற நிலையில் தன் வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர் .
அந்த அப்பாவி பெண்ணோ சமுதாயத்தினர் யாரும் உதவி செய்யாத நிலையில் அந்த நிர்வாண அபலை பெண் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு திரு திரு வென முழித்து கொண்டுள்ளாள் ,,,.தெய்வமே !
இந்நிலையில் அந்த சாலை வழியாக இரு இளைஞர்கள் அவர்கள் வாகனத்தில் கடக்கிறார்கள் .அந்த கூட்டத்தை கண்டு நின்ற இருவரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த இருவரும் அந்த இளம் பெண்ணின் அவல நிலையை கண்டு திகைப்பும் ,பதறி துடித்து போகிறார்கள் .

உடனே அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்த அனைவரையும் திட்டி துரத்தி விட்டு அருகில் உள்ள வீட்டினரிடம் அப்பெண்ணை பற்றி விசாரிகின்றனர் .அப்போது ,அந்த இளம் பெண் அந்த பகுதியிலேயே வசிப்பவர் என்றும் மன நிலை பாதித்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்கின்றனர் .
உடனே அருகில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்ணிடம் உடைகளை வாங்கி அந்த பெண்ணின் மானம் காத்து அப்பெண்ணின் வீட்டில் விட்டு விட்டு அந்த பெண் வீட்டாரிடம் அறிவுரையும் கூறிவிட்டு மன நிறைவுடன் நகர்கிறார்கள் .
அந்த பெண்ணின் மானம் காத்த நண்பர்களில் ஒருவர் திரு .அருண்குமார் ,மற்றோரு நண்பர் திரு .மகி.மகேந்திரன் .நமது நண்பர்கள் இருவரும் இந்த சம்பவம் பற்றியோ ,பெயரோ எழுத வேண்டாம் என வேண்டிகொண்டனர் . ஒரு விழிப்புணர்வுக்காகவே உங்களுடன் இந்த பகிர்வை பகிர்கிறேன் .
சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழம் இந்த இளைஞர்களை நாம் மனதார வாழ்த்துவோம் !
நண்பர்களே ,இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் ,நமக்கேன் என்று வேடிக்கை பார்க்காமல் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் !
பெண் என்பவள் தெய்வம் ! நம்மை ஈன்றவரும் பெண் தான் ! நம் உடன் பிறந்த சகோதரியும் பெண் தான் !
பிறகு ஏன் சமுதாயமே ! நம் மனித சமுதாயத்தில் பிறந்த சக பெண்ணிடம் இவ்வளவு வக்கிரம் !
அந்த இளம் பெண்ணின் வருங்காலத்தை கருதி அந்த இடத்தையோ ,அந்த பெண்ணை பற்றியோ நான் எழுதவில்லை .