இன்று உலக ரத்த தான நாள் ""EVERY BLOOD DONOR IS A HERO "".இந்த நாள் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாகவும் ,அவர்களின் விலைமதிப்பற்ற இந்த சேவையை நினைவுகூரும் தினமாகவும் ,2005 ம் வருடம் ஜூன் மாதம் 14 ம் தேதி முதல் அனுஷ்டிக்க படுகிறது .
இந்நாள் நோபல் பரிசு பெற்றவரும் ,ஏபிஓ ரத்த தான அமைப்பை நிறுவியரும் ,மதிப்பிற்குரிய "" கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் "" அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடபடுகிறது .
ரத்த தானம் செய்வோர் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
நமது உடலில் சராசரியாக 5முதல் 6 லிட்டர் வரை உள்ளது .ரத்த தானத்தில் நாம் 200 மி முதல் 300 மி வரை கொடுக்கலாம் .நாம் குறைந்த பட்சம் 3 மாதங்கள் இடைவெளியில் ரத்த தானம் வழங்கலாம் .
நாளுக்கு நாள் அவசர சிகிச்சைகளும் ,விபத்துகளும் ,பெருகி விட்டன .ஆகவே ரத்த தானம் தேவைபடுவோரின் எண்ணிகையும் அதிகமாகிவிட்டது .
நமது ரத்தம் மிகுந்த விலைமதிப்பற்றது .பிறருடைய உயிர் காக்க உதவலாம் .
ரத்த தானம் செய்வோர் ஆண் ,பெண் ,இருவரும் தரலாம் .
50 கிலோவிற்கு மேல் எடை உள்ளவர் கொடுக்கலாம் .
ஹீமோக்ளோபின் 12 முதல் 15 வரை உள்ளவர் தரலாம் .
தொடர்ந்து மருத்துவ சேவை பெறுவோர் மருந்து உண்போர் தரகூடாது .
குறிப்பாக மது அருந்துவோர் 48 மணி நேரத்திற்கு பிறகே தரவேண்டும் .
ரத்த தானம் செய்வோருக்கு சில ஆலோசனைகள்
ரத்த தானம் செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் நல்ல உணவு எடுத்துகொள்ளுங்கள் .
ரத்த தானம் செய்வதற்கு முன் புகைத்தல் வேண்டாம் .புகைபிடிப்போர் 3 மணி நேரத்திற்கு பின் புகைக்கலாம் .
ரத்த தானம் செய்ய கண்டிப்பாக 3 மாத இடைவெளி எடுத்துகொள்ளவும் .
ரத்த தானம் செய்தவுடன் உடனே வாகனம் ஊட்டுவதை தவிர்க்கவும் .
மது அருந்துவோர் 24 மணி நேரத்திற்கு பிறகு அருந்தலாம் .
பழ ஜூஸ் அல்லது தண்ணீர் அதிகம் அருந்தவும் .
ரத்த தானம் பற்றிய சில பொதுவான கேள்விகளும் ,சந்தேகங்களும் ?
1 .ரத்த தானம் செய்வதால் ,அங்கு பயன்படுத்தும் ஊசியால் ,அல்லது மருத்துவமனையில் இருந்து ஏதாவது தொற்று நோய் வருமா ?
இல்லை .உங்களுக்காக மிக்க பாதுகாக்கபட்ட ஊசி தான் பயன்படுத்துவார்கள் .உங்களுக்கு ஏதும் தொற்று நோய் வராது .
2 . ரத்த தானம் செய்யும் பொழுது வலிக்குமா?
இல்லை வலிக்காது .ஊசி குத்தும் பொது மிக சிறிய வலி இருக்கும் அவ்வளவு தான் .
3 .ரத்த தானம் செய்தவுடன் நான் எனது வேலைகளை தொடரமுடியுமா அல்லது ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டுமா ?
தாரளமாக உங்கள் வேலைகளை தொடரலாம் .ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டியது இல்லை .
4 . ரத்த தானம் செய்வதால் என் உடல் நிலை பாதிக்கப்படுமா ?
இல்லை .பதிக்கபடாது .
5 . என்னிடமே கொஞ்சம் ரத்தம் தான் உள்ளது ?
நம் உடலில் ரத்தம் 5முதல் 6 லிட்டர் வரை உள்ளது.நம்மிடமிருந்து 200 மி முதல் 300 மி வரை மட்டுமே எடுப்பார்கள் .
6 .ரத்த தானம் செய்ய எனக்கு பயமாக உள்ளது ?
பயப்பட தேவை இல்லை .உலகில் தினமும் பல நூறு பேர் ரத்த தானம் செய்கிறார்கள் .
7 . ரத்த தானம் செய்வது என் கடமையா ?இதனால் எனக்கு என்ன பயன் ?
அவசியம், ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும் .ரத்த தானம் செய்வதால் நாம் பிறருக்கு உதவும்
திருப்தியும் ,மன சந்தோசமும் கிடைக்கும் .நம் வீட்டில் யாருக்காவது ரத்த தானம் தேவைபட்டால் நாமும் வெளியே பிறரிடம் இருந்து தான் வாங்க வேண்டும் .
8 .ரத்த தானம் செய்வதற்கு நீண்ட நீரம் ஆகுமா ?
இல்லை .10 நிமிடம் மட்டுமே ஆகும் .
9 சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,பிரசவித்து உள்ளோர் ,வேறு பெரிய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் தரலாமா ?
இவர்கள் கண்டிப்பாக ரத்த தானம் தர கூடாது ..
10 .உலகில் இத்தனை பேர் இருக்கும் பொழுது என் ரத்தம் அவசியமா ?
ஆம் .மிக அவசியம் ரத்தம் அதிக அளவில் தேவைபடுகிறது ஆகவே உலகில் ரத்த ரத்த தானம் செய்வோர் மிக அதிக அளவில் தேவைபடுகிறார்கள் .
ரத்த தானம் செய்வோம் .பிறர் உயிர் காப்போம்
ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமை என இந்நாள் உறுதி மொழி ஏற்ப்போம் .
""நான் ரத்த தானத்தின் பெருமை அறிந்து கொண்டேன் .நான் பிறருக்கு உதவும்
பொருட்டு ரத்த தானம் செய்வேன்.என உறுதிமொழி ஏற்கிறேன் . ""