Nov 8, 2009

முதியவர்கள் மேல் கோபம்


முதுமை என்பது தவிர்க்க இயலாத ஒன்று .இறப்பு என்பதும் தவிர்க்க இயலாத ஒன்று.ஆனால் முதுமையில் தற்கால முதியவர்கள் படும்பாடு காண இயலாத ஒன்றாக உள்ளது .இன்றைய பிள்ளைகள் பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து பலர் தவறி வருகின்றனர் .இதற்கு உதாரணம் பெருகி வரும் வர்த்தக மற்றும் சமுக நல முதுமை காப்பகங்கள்.மற்றும் முதுமை காரண தற்கொலைகள் அடிக்கடி பத்திரிகை செய்திகளில் காண நேர்கிறது .
முதியவர்களை பார்த்துக்கொள்வது என்பது சற்று கடினம் ஏனென்றால் அவர்களது உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ,ஒத்துழையாமை .அதற்கு நமக்கு தேவை மிக மிக பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை .பொதுவாக இளையவர்கள் (சிலர்) திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தவுடன் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று தனியாக சென்று விடுகின்றனர் .இதற்காக தான் பெற்றோர் தோளிலும்,மார்பிலும் ,சுமந்தார்களா !!!!!!

எனக்கும் என் நபருக்கும் கடந்த வாரம் நடை பெற்ற ஒரு உரையாடல் :

நான் :என்ன நண்பரே நலமா ?
நண்பர்:நலம் நீங்க எப்படி இருக்கீங்க ?
நான்: நானும் நலம் .
நண்பர்:நான் தனியாக வீடு பார்த்து இருக்கேங்க
(நண்பரை பற்றிய சிறு தகவல் அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை உடன் பிறந்தோர் யாரும் இல்லை .நண்பரின் பெற்றோர் எழுபதை கடந்தவர்கள் ,அதிலும் நண்பரின் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு விபத்தில் முதுகெலும்பு உடைந்து சிகிச்சை பெறுபவர் .இனிமேல் நண்பரின் தந்தை தான் அவரால் முடிந்தோ ,முடியாமலோ அவர் உழைத்து தான் அவர் குடும்பம் நடத்த வேண்டும் .அதுவும் அவர் தினசரி கூலி தொழிலாளி.)
நான் :(அதிர்ச்சியுடன்)என்னங்க உங்க அப்பா ,அம்மாவை ,யார் பார்த்துக்குவாங்க
நண்பர் :அப்பா அம்மாவ பார்த்துக்குவாங்க, அம்மா அப்பாவ பார்த்துக்குவாங்க

நான்:என்னங்க இந்த வயசான காலத்துல தனியா எப்படிங்க வாழமுடியும் !
நண்பர்:என்னங்க புரியாம பேசறிங்க. நான் என் குடும்பத்தை பார்க்க வேண்டாமா .அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது .என் வாழ்க்கை நான் வாழவேண்டாமா .அவர்களை பார்த்தால் போதுமா .என்ன ஒரு மாதத்திற்கு ஒரு முறை அவர்களை பார்த்து விட்டு வந்தால் போயிற்று .
நான்:(கனத்த மனதுடன் ) பெற்றோரை பார்த்துகொள்ளுங்கள் என்ற கேள்வியே தவறோ என்ற மன பாரத்துடன் விடைபெற்றேன் .

இப்போது சொல்லுங்கள் சமுதாயம் எங்கு செல்கிறது என்று .இந்த பதிவில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரை தாய் ,தந்தைக்கும் மேல் தாங்கள் விரும்பும் குழந்தைகளாக ஏற்றுகொள்ளும் மனபக்குவம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .
இந்த பதிவில் நான் யாரையும் குறிப்பிட்டோ ,புண்படுத்தவோ எழுதவில்லை .என் மனதில் உள்ள ஆதங்க பதிவு.
முதியவர்களை காப்போம் !
இயன்ற உதவி செய்வோம் !

Oct 19, 2009

மீனவ நண்பர்களின் அவல நிலை



வணக்கம் ,
நமது மீனவ நண்பர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவதும் கொல்லபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது .கடந்த தீபாவளி அன்று கடலுக்குள் சென்ற நமது மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியா இலங்கை அரசுக்கு ஈழ தமிழர் பகுதிகள் மேம்படுத்தவும், ஈழ தமிழர் உதவிக்கு என்று கூறி ரூ.500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.இந்த நிதி உதவி சரியான முறையில் ஈழ தமிழர்களுக்கு சென்றடைகிறதா ?என்று ஒரு கேள்வி அடுத்து தொடர்கதையாக நடத்த பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் இலங்கை , இன்னொரு பக்கம் பங்களாதேஷ் ,இப்படி எல்லா பக்கமும் அடி வாங்குகிறோம் .இதற்கு பதிலாக நமது மதிப்பிற்குரிய பிரதமர் ஐயாவோ அல்லது மதிப்பிற்குரிய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரோ பத்திரிகை மற்றும் தொலைகாட்சியில் "இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது இந்தியா இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது "என்கின்ற அறிக்கை மட்டும் காணலாம் .இந்நிலைமை என்று மாறும் ??????????
http://www.newkerala.com/nkfullnews-1-133360.html