Dec 6, 2012

பங்கு வர்த்தகம் மலர் -164


                       

நண்பர்களே வணக்கம் , 
தேசிய  NIFTY (FUTURE) நேற்று   5945.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5958.85 வரை உயர்ந்தது 5928.10 வரை கீழே சென்று 5940.45 -ல் முடிவடைந்தது.
  •  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ஓட்டெடுப்பில் லோக்சபாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .
  • நாட்டின் பொருளாதார சீர்ததிருத்தத்திற்காக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பா.ஜ. உள்ளிட்ட எதிர்‌கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அன்னிய முதலீட்டினை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.
  •  இதையடுத்து தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துடன் ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி இன்று பாராளுமன்ற லோக்சபாவில் நடந்த ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. 
                                         
  • பா.ஜ. கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ஓட்டெடுப்பில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்தன. இரு கட்சிகளின் 43 எம்.பி.க்கள் ஓட்டளிக்கவில்லை.
  • ஆளும் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை  சந்தை மேல் நோக்கி பயணிக்கும் .ஆனால் ராஜ்ய சபை வோட்டெடுப்பில் வெற்றி பெறுமா என்பது?????????????????????

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5956 STAYED ABOVE 5970 TARGETS ,,5995,,6005,6015,,

THEN 6040,,6083,,,,,,

SUPPORT LEVELS 5915,5905.,,,


SELL BELOW 5890 STAYED WITH VOLUME -5880,TARGETS 5869,5955,,5942,,


THEN 5825,,5804,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     
நன்றி :தினமலர் 

Dec 4, 2012

மனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்??????



நண்பர்களே , எங்கே செல்கிறது இன்றைய நம் சமுதாயம் ஏன் இவ்வளவு கேவலமான எண்ணங்களும் ,கேவலமான மனநிலைகளும் உள்ளது நம் மனித சமுதாயத்தில் ??????

நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் மிகவும் மனதை நெருடுவதாகவும் ,மனித சமுதாயத்தின் மேல் கோபமும் பட வைத்துவிட்டது .மிருகங்களுக்கு உள்ள மனிதாபமும் இல்லாமல் ,இந்த சமுதாயம் மிருகத்தை விட கேவலமான திகழ்கிறது .

நேற்று நடந்த ஒரு சம்பவம் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் !


அழகிய மரங்களும் ,பூக்களும் ,வயல்களும் நிறைந்த கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண் சற்று மன நிலை பாதித்த நிலையில் மரத்தின் அடியில் தன்  உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாத நிலையில் ,தன் உடலில் துணி இல்லை என்ற உணர்வும் அற்ற  நிலையில் நிர்வாணமாக அமர்ந்துள்ளார் .

                                        

அந்த இளம் பெண்ணை சுற்றி காமுகர்கள் கூட்டம் அருகில் நின்று ரசித்துக்கொண்டும் ,கண்களால் ருசித்துகொண்டும் ,,ஏன் சிலர் தன் கைப்பேசியில் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டும் உள்ளனர் .

அருகில் உள்ள வீட்டினரோ " நமக்கேன் " என்றும், எனக்கு என்ன தேவை ? என்ற நிலையில் தன்  வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர் .

அந்த அப்பாவி பெண்ணோ சமுதாயத்தினர் யாரும் உதவி செய்யாத நிலையில் அந்த நிர்வாண அபலை பெண் கூடி நின்று  வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு திரு திரு வென முழித்து கொண்டுள்ளாள் ,,,.தெய்வமே !

இந்நிலையில் அந்த சாலை வழியாக இரு இளைஞர்கள் அவர்கள் வாகனத்தில் கடக்கிறார்கள் .அந்த கூட்டத்தை கண்டு   நின்ற இருவரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த இருவரும் அந்த இளம் பெண்ணின் அவல நிலையை கண்டு திகைப்பும் ,பதறி துடித்து போகிறார்கள் .



உடனே அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்த அனைவரையும் திட்டி துரத்தி விட்டு அருகில் உள்ள வீட்டினரிடம் அப்பெண்ணை பற்றி விசாரிகின்றனர் .அப்போது ,அந்த இளம் பெண்  அந்த பகுதியிலேயே வசிப்பவர் என்றும் மன நிலை பாதித்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்கின்றனர் .

உடனே அருகில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்ணிடம் உடைகளை வாங்கி அந்த பெண்ணின் மானம் காத்து அப்பெண்ணின் வீட்டில் விட்டு விட்டு அந்த பெண்  வீட்டாரிடம் அறிவுரையும் கூறிவிட்டு மன நிறைவுடன் நகர்கிறார்கள் .

அந்த பெண்ணின் மானம் காத்த நண்பர்களில் ஒருவர் திரு .அருண்குமார் ,மற்றோரு நண்பர்  திரு .மகி.மகேந்திரன்  .நமது நண்பர்கள் இருவரும் இந்த சம்பவம் பற்றியோ ,பெயரோ எழுத வேண்டாம் என வேண்டிகொண்டனர் . ஒரு விழிப்புணர்வுக்காகவே உங்களுடன் இந்த பகிர்வை பகிர்கிறேன் .



சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழம் இந்த  இளைஞர்களை நாம் மனதார வாழ்த்துவோம் !

நண்பர்களே ,இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் ,நமக்கேன் என்று வேடிக்கை பார்க்காமல் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் !



பெண் என்பவள் தெய்வம் ! நம்மை ஈன்றவரும் பெண் தான் ! நம் உடன் பிறந்த சகோதரியும் பெண் தான் !

                                  

பிறகு ஏன் சமுதாயமே ! நம் மனித சமுதாயத்தில் பிறந்த சக பெண்ணிடம் இவ்வளவு வக்கிரம் !


அந்த இளம் பெண்ணின் வருங்காலத்தை கருதி அந்த இடத்தையோ ,அந்த பெண்ணை பற்றியோ நான் எழுதவில்லை .