Jan 7, 2013

பங்கு வர்த்தகம் மலர் -172




நண்பர்களே வணக்கம் , 

தேசிய NIFTY (JANUARY FUTURE)  6031.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 6052.50 வரை உயர்ந்தது 6012.50 வரை கீழே சென்று 6048.00 -ல் முடிவடைந்தது.



  • பேசல் 3 விதிகளின் படி மூலதனம் இருப்பு விகிதம் தொடர்பான வழிகாட்டுதலை முதலில் வங்கிகள் ஜனவரி 1 ம் தேதி முதல் அமல் படுத்துவதாக இருந்தது ,ஆனால் ரிசர்வ் வங்கி இதனை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது .
  • நிறுவன வரி வசூல்  4.94 % அதிகரித்து .ரூ.2.70 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது .
  • நிறுவனங்கள் செலுத்திய முன் கூடிய வரி வசூல் 10.44 %  வளர்ச்சி கண்டு ரூ.78.226 கோடியாக உயர்ந்துள்ளது .
  • இதன் காரணமாக 3 வது காலாண்டில் நிறுவனங்களின் நிகர லாபம் சிறப்பான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம் .
  • பொது துறை வங்கிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் ரூ.12.000 கோடி கூடுதல் மூலதனம் அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது .
  • 12 வங்கிகளுக்கு  மத்திய அரசு ரூ 12,000 கோடி அளவிற்கு பங்கு மூலதனம் வழங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது .
  • மார்ச் மாதத்திற்கு முன்பாக இந்த கூடுதல் மூலதனம் அளிக்கப்படும் .
  • இதில் பாரத ஸ்டேட் வங்கி ரூ .3,004 கோடியை பெறு ம் என எதிர்பார்க்கபடுகிறது .


இன்றைய NIFTY FUTURE LEVELS  :


BUY ABOVE 6058 STAYED ABOVE 6071 TARGETS ,6085,,6098,6112,,

THEN 6131,,6151,,,,,,

SUPPORT LEVELS 6031,6023.,,,


SELL BELOW 6013 STAYED WITH VOLUME -6002,TARGETS 5990,5980,,5971,,


THEN 5954,,5935,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.



Jan 4, 2013

அரசு அறிவிப்பு வெளியீடு :திறந்தவெளி பட்டபடிப்பில் +2 விற்கு இணையான கல்வி தகுதிகள்



நண்பர்களே ,

 தொலைதூர கல்வியில் பிளஸ் 2 படிக்காமல் திறந்தவெளி தொலைதூர கல்வியில் பட்டபடிப்பு முடித்தால்  அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்புடையதல்ல என்ற நிலை இருந்தது .இதற்கு மாற்றாக அரசு சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது .

இதன் அடிப்படையில் கீழ்வரும் கல்வி தகுதிகள் பிளஸ் 2 விற்கு இணையாக அல்லது மாற்றாக கருதப்பட்டு திறந்தவெளி தொலைதூர கல்வியில் இளங்கலை பட்டபடிப்பு முடித்தவர்களுக்கும் , பொது பணிகளில் அரசு வேலை வாய்ப்பும்,ஏற்கனவே பதவிகளில் உள்ளோருக்கு  பதவி உயர்வு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது .



  • 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று  ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த  பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு               ( 10+3+3 ).

  • 11 ம் வகுப்பிற்கு பின் இரண்டு ஆண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்பு முடித்த பின்  திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு          ( 11+2+3 ).

  • 10 ம் வகுப்பிற்கு பின் இரண்டு  ஆண்டு  ITI ( INDUSTRIAL TRAINING INSTITUTE ) படிப்பு முடித்த  பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு           ( 10+2+3 ).

  • 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று  ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த  பின் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாண்டு  ஆண்டு திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு           ( 10+3+2 ).

அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதிபெற்றவர்கள் ,இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் .

தின மலர் நாளிதழில் வந்த அரசு அறிவிப்பு இந்த விளம்பரத்தை சேமித்து வைத்து கொள்ளவும் .




நன்றி :தின மலர் நாளிதழ் கோவை பதிப்பு