Mar 17, 2013

சமூக முன்னோடி பத்திரிகையாளர் திரு .வி.பழனியப்பன்


நல்ல விஷயம் ஆனாலும் சரி,தீய விஷயம் ஆனாலும் சரி அது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிக்கை நிருபர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அத்தகைய பத்திரிக்கை நிருபர்களால் ,அவர்களுடைய எழுத்துக்களால்  சமூகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் அந்த மாற்றங்கள் எல்லாம் உண்மையான நேர்மையான  எழுத்துக்களாக  பிரசவிக்கப்படுவது  நல்ல  நிருபர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லாத உண்மை .

அப்படிப்பட்ட சிறந்த ஒரு  நிருபரை  மக்களுக்கு அறிமுகப்படுத்தும்  முயற்சிதான்  இந்த பதிவு .


கோவையை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ,இளம் புயல் ,இளம் முன்னோடி ,நேர்மையானவர் சமூக சிந்தனையாளர் ,சமூக  சேவகர் ,போன்ற பாராட்டுகளை  ஒருங்கே பெற்ற இளைஞரை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை .திரு .வி.பழனியப்பன்  என்ற இளம் பத்திரிக்கையாளர் இளைஞரை நம் பதிவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் .


இவர் பல சமூக சேவகர்களையும் ,சாதனையாளர்களையும்  இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரை சாரும் .
பல சமூக சேவகர்களும் ,பல நல்ல சமூக அமைப்புகளும் உருவாக இந்த இளைஞர் காரணமாக திகழ்கிறார்  என்பது உலகறியாத ஒன்று .


திரு .வி.பழனியப்பன் சிறந்த பத்திரிக்கையாளர் மட்டுமன்றி மிக சிறந்த புகைப்பட ஆர்வலருமாவார் .பத்திரிகை துறையை தன் உயிர் மூச்சாக கருதுபவர் .

சமூக அவலங்களை கண்டும் காணாமலும் செல்லும் நபர் இவரல்ல பல சமூக அவலங்களை தன் புகைப்படங்கள் மூலமும் தன்  வலிமையான எழுத்துக்களின் வல்லமையாளும் ,சமூகத்தையும் ,அரசு அதிகாரிகளின் பார்வையையும் ,கவனத்தையும் ஈர்த்து அந்த அவலங்களை களைய போராடியவர்போராடி கொண்டிருப்பவர் .


பலர் தன் குடும்பத்தை விட்டு விலகி பல ஆண்டுகளாக தான் யாரென்றே தெரியாத நிலையில் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்தை தேடி அவர்களின் குடும்ப கூட்டில் இணைத்துள்ளார் .


 இவர் இயற்கை வளங்களை காப்பதிலும் ,அதிக அக்கறை கொள்பவர் ,வன விலங்குகள் மேல் தீராத பாசமும் ,அக்கறையும் ,கொண்டுள்ளவர்.வன விலங்குகளின் நலனுக்காக பல நல்ல விஷயங்களை தன் எழுத்துக்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் .

          
பேனா என்ற சீவிய முனை கொண்டு சிந்தனைகளை மாற்றியவர் .இவரின் சீரிய சிந்தனைகளையும் ,எழுத்துகளையும்  போற்றும் வகையில் பல அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன .



நண்பரின் செய்தி படைப்புகளை காண இங்கே சொடுக்கவும் "க்ளிக்"

 நாமும் இந்த இளைஞரை நம் மனதார வாழ்த்தி ,தன்  வாழ்நாளில் இதே சீர் நோக்குடன் ,பல சாதனைகள் ,சேவைகளை பல புரிய வாழ்த்தும் ,பாராட்டுகளும் தெரிவிப்போம் .

நன்றி "


Jan 29, 2013

யானைகள் -மனித இன மோதல்



                                    
                                                http://www.greenosai.org/

ஓசை சுற்று சூழல் அமைப்பு கடந்த ஜனவரி- 2000 வருடம் ,முதல்  உயர்திரு கே .காளிதாஸ் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டு இன்று வரை 13 வருடங்களாக பல நல்ல செயல்கள் புரிந்து வருகின்றனர் .காடுகளின் பாதுகாவலனாகவும் ,வனவிலங்குகளின் நண்பர்களாகவும் ,வன விலங்குகள் ,பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாகவும் ,மலைவாழ் மக்களின் மேம்பட்டிற்காகவும் ,பல ஆய்வுகளுக்கு மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுடன்   ,இன்று சுற்று சூழலினால்  அழிந்து வரும் நிலையை காக்கவும் ,பல முயற்சிகளில் வெற்றி கண்டும் ,சுற்று சூழல் பாதுகாக்க மேலும் பல  முயற்சிகள் செய்து வருகின்றனர் .

கடந்த ஞாயிறு   28/01/2013 அன்று மாலை   கோவையில் தமிழ்நாடு ஹோட்டலில் ஓசை சுற்று சூழல் அமைப்பு சார்பாக   யானைகள் மற்றும் மனித மோதல்கள் ஏன் அடிக்கடி நடக்கிறது ?,இதனை எவ்வாறு தடுப்பது ?என்பது குறித்த ஒரு கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது .

                              

இந்த கருத்தரங்கில் திரு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் " யானைகள் மற்றும் மனித மோதல்கள் " குறித்து   WWF அமைப்பின்  "துணை மேலாளர் " திரு .ஜி.சிவசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
                             
                              

உடன் எழுத்தாளர் திரு ,ஞானி ஐயா ,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .







அழியும் காடுகள் 
  • காடுகள் பெரும்பான்மையான அளவு அழிக்கபட்டு ,நகர்புற மயமாக்கல் என்ற பெயரில் புதிய புதிய வீட்டு மனைகளும் ,சாலைகளும் ,வீடுகளும் ,தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வருவதே காரணமாகும் .
           
  • புற்றீசல் போல பல கல்வி நிறுவனங்கள் மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் இங்கு மலிவான விலையில் விவசாயிகளிடமிருந்தும் ,காட்டை அடுத்துள்ள நிலங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர் .

  • மனதை புண்படுத்தும் விஷயம் என்னவென்றால் பாதுகாவலர்களான சில தவறான அதிகாரிகளும் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் ,துணை போவதே இத்தனை அவலங்களுக்கும் முக்கிய காரணமாகும் .

  • காட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை  பாயும் வரை இந்த ஆக்கிரமிப்புகள் தொடரும் .

  • நாளடைவில் காட்டு விலங்குகள் அழிவதோடு மட்டும் அல்லாமல் ,வன விலங்குகள் நகர் புறம் நோக்கி நகரும் அபாயம் அதிகம் உள்ளது .

  • இந்த பிரச்சனை யை தவிர்க்க ,தடுக்க அரசு தீவிர அவசர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் .ஒரு நிபுணர் குழு அமைக்கபட்டு ஆக்கிரமித்துள்ள காடுகளையும் ,நிலங்களையும் ,மீட்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் .

  •  யானைகள் -மனித மோதல்கள் ஏன் ?

  • மலைவாழ் மக்கள் பல வருடங்களாக காடுகளில் வசித்து வருகின்றனர் அந்த காலகட்டங்களில் யானைகள் இந்த அளவு மனிதர்களை தாக்கியதாக தெரியவில்லை காரணம் அன்று யாரும் யானைகளை துன்புறுத்தியதில்லை .மலைவாழ் மக்களுக்கும் விலங்குகள் பற்றிய அறிவு இருந்தது .

  • ஆனால் நகர்புற  மனிதனுக்கு விலங்குகள் பற்றிய அறிவு இல்லாததும் ,தீவிர பயமும் ஒரு காரணம் இவர்கள் யானைகளை தாக்குவதும் யானைகள் இவர்களை தாக்குவது இயல்பாகிவிட்டது .

  • இன்றோ  யானைகளின் இடங்களை மனிதர்கள் பிடித்ததோடு மட்டும் அல்லாமல்  யானைகளை ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் ,பல வகைகளில் யானைகளை துன்புறுத்துவதால் மனிதர்களை கண்டாலே துரத்துகின்றன .

  •  காடுகள் அழிக்கபடுவதால் விலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பறிக்கபடுகின்றன .ஆகவே யானைகள் உணவு,நீர் தேடி நகர்புறம் வருகின்றன .

  • யோசித்து பார்த்தால் கடந்த 5 முதல் 10 வருடங்களாக  தான் இந்த மோதல்கள் நிகழ்கின்றன .இதற்க்கு முக்கிய காரணம் காடுகளை அழித்த மனிதன் ,மனிதன், மனிதன் மட்டுமே .

  • யானைகளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் ?

  • மலையோர கிராம விவசாயிகள் யானைகள் விரும்பும் பயிர்களை தவிர்த்து ,அதற்க்கு பிடிக்காத பயிர் வகைகளை பயிரிடலாம் .(அப்படிப்பட்ட  அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட விவசாய ஆய்வு கழகங்கள் உதவ வேண்டும் )

  • யானைகள் சுற்றி வரும் இடங்களில் மனிதர்கள் மாலை இருட்டிய பிறகும் ,அதிகாலை நேரங்களில் நடமாடுவதை  தவிர்க்க வேண்டும் .

  • யானைகளை விரட்ட வன அலுவலர்கள்  துணையுடன் தனி நபராக செல்லாமல் குழுவாக செல்லவேண்டும் .

  • யானைகள்   நீண்ட தூரம் தொடர்ந்து துரத்தாது  அதிக பட்சம் 100மீ முதல் 150 மீ வரை துரத்தலாம் .

  • யானைகளுக்கு கண் பார்வை குறைவு .மோப்ப சக்தி அதிகம் .

  • யானைகளை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கலாம் .ஒரு வேளை சாலைகளில் துரத்தினால் அதன் கண்களில் படும்படி நேராக ஓடாமல் மறைவில் பதுங்கி கொள்வது நல்லது .

  • முடிவு :-

  • யானைகளுக்கு மனிதனை தாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை மாற்றாக அவைகள் உணவு மற்றும் குடிக்க நீர் தேடி மட்டுமே வருகின்றன .
                                

  • நாம் யானைக்கு எதிரியா ? அல்லது யானை நமக்கு எதிரியா ? என்று  பார்த்தால் காடுகளை அழித்த வகையில் நாமே அதன் எதிரிகள் .
  • ஒரு வகையில் பார்த்தால் யானைகள் இருப்பதால் தான் அதன் மீது கொண்டுள்ள பயம் காரணமாக , மேலும் காடுகள் அழிவை நோக்கி செல்லாமல் மனிதர்களிடமிருந்து  காக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை .

  • இனி வரும் காலங்களில் யானைகள் மனித மோதலை தடுக்க காடுகள் காக்க  படவேண்டும் .
மேற்கண்ட தகவல்களை பகிர்ந்த ஓசை சுற்று சூழல் அமைப்பின் தலைவர் திரு.கே. காளிதாஸ்  அவர்களுக்கும் , WWF திரு .ஜி.சிவசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள் .

விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு அழைத்த கோவை பதிவர் சகோதரி எழில் அவர்களுக்கும்  ,முகநூல் நண்பர் திரு .சசி குமார் அவர்களுக்கும் நன்றி .