Jan 1, 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்










New year glitter comments, animated newyear gif scraps, happy new year wishes
கோவை சக்தி


அனைத்துலக மக்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் இனிய 2012 -ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

புத்தாண்டு தினத்தின் தொடக்கம் உறுதிமொழியின் ஆரம்ப தினமாக இருக்க வேண்டும்.

இன்று முதல்

  • நம்மால் இயன்றவரை மற்றோருக்கு உதவியாக இருப்போம்

  • மற்றவரின் மனம் புண்படும்படி இன்சொல் கூறமாட்டோம்

  • பெரியவர்களை மதித்து நடப்போம் (முக்கியமாக பெற்றோரை )

  • முடிந்தவரை கோபப்படாமல் இருப்போம்

  • இன்றுடன் தீய பழக்கவழக்கம் இருப்பின் தொடர மாட்டோம்

  • தொழில் முன்னேற்றத்திற்கு வளர்ச்சி படிகளை திட்டமிட்டு செயல்படுவோம்

  • சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுவோம்

  • கடன் வாங்கும் பழக்கம் இருந்தால் முடிந்த அளவு கடன் வாங்காமல் சிக்கனமாக இருந்து ஆடம்பரம் தவிர்த்து நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வோம்

  • நம்மால் முடிந்த வரை ஒரு ஏழையின் படிப்பிற்கு உதவுவோம்

  • தினமும் உடற்பயிற்சி செய்ய உறுதியாய் இருப்போம் (குறைந்தது நடைபயிற்சி )
  • உடலிற்கு தீயது உண்டாக்கும் உணவினை தவிர்ப்போம்

  • குடும்பத்தினருடனும் ,சமூகத்தினருடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்

  • தீவிரவாதத்தை ஒழிப்போம்

  • சகோதரர்களாய் ,சகோதரிகளாய் இணைந்து வேறுபாடு இன்றி வாழ்வோம்
மேற்கண்ட உறுதி மொழிப்படி நான் வாழ்வேன்
நட்புடன்,,
உங்கள்
கோவை சக்தி








Dec 6, 2011

கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல்




முல்லை பெரியார் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் கேரளா அரசு செயல்படும் இந்நிலையில் கேரளா சென்ற அப்பாவி தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல் காரணமாக கம்பம் ,குமுளி ஆகிய இடங்களில் தமிழக போலீசார் கேரளா செல்லும் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர் .

சிலர் குமுளி காவல் நிலையம் அருகிலேயே கேரளாவில் இருந்து வரும் தமிழத்தை சேர்ந்த லாரியை தடுத்து நிறுத்தி வாகனத்தை சேதபடுத்தி உள்ளனர். மேலும் கேரளத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அணையை உடைக்கும் எண்ணத்துடன் கடப்பாரை ,மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் .இந்த செயல் மிகவும் கண்டிக்க தக்கதாகும் .

இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் உண்டாக்கி உள்ளது .தமிழகத்தில் சில இடங்களில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது .இந்நிலை நீடிக்குமானால் இரு மாநில உறவுகள் பாதிக்கபடுவதுடன், இரு மாநில மக்களின் ஒற்றுமையும் ,அமைதியான வாழ்வு உரிமையும் சீர்குலையபடும்.

முல்லை பெரியாறு தொடர் கதையை முற்று புள்ளி வைக்க உச்ச நீதிமன்றமும் ,மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் இந்தியாவின் மாநில அரசுகளின் நல்லுறவு ,ஒற்றுமை,கேள்விகுறியாகிவிடும் என்பது நிச்சயம்.அதுமட்டும் அல்லாமல் இரு மாநிலங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பும் மத்திய அரசு கைகளில் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும் .

முல்லை பெரியார் அணையின் முழு பிரச்சினை விவரமும் , தீர்வும் அடங்கிய ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது இதை அவசியம் பாருங்கள் புரியும் .

முல்லை பெரியார் அணை-பகுதி -1

http://www.youtube.com/watch?v=eXti8xblCLM

முல்லை பெரியார் அணை-பகுதி -2

http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE

எச்சரிக்கை !!
வன்முறையாளர்களே வன்முறை நிரந்தர தீர்வல்ல .
பாதிக்க படபோவது இரு மாநில அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல .சிந்திப்பீர்
!!!!!!!!