Dec 6, 2011

கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல்




முல்லை பெரியார் அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க துவங்கி உள்ளது உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாமல் கேரளா அரசு செயல்படும் இந்நிலையில் கேரளா சென்ற அப்பாவி தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல் காரணமாக கம்பம் ,குமுளி ஆகிய இடங்களில் தமிழக போலீசார் கேரளா செல்லும் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர் .

சிலர் குமுளி காவல் நிலையம் அருகிலேயே கேரளாவில் இருந்து வரும் தமிழத்தை சேர்ந்த லாரியை தடுத்து நிறுத்தி வாகனத்தை சேதபடுத்தி உள்ளனர். மேலும் கேரளத்தை சேர்ந்த சில அரசியல் கட்சியினர் அணையை உடைக்கும் எண்ணத்துடன் கடப்பாரை ,மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் .இந்த செயல் மிகவும் கண்டிக்க தக்கதாகும் .

இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப்பும் உண்டாக்கி உள்ளது .தமிழகத்தில் சில இடங்களில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது .இந்நிலை நீடிக்குமானால் இரு மாநில உறவுகள் பாதிக்கபடுவதுடன், இரு மாநில மக்களின் ஒற்றுமையும் ,அமைதியான வாழ்வு உரிமையும் சீர்குலையபடும்.

முல்லை பெரியாறு தொடர் கதையை முற்று புள்ளி வைக்க உச்ச நீதிமன்றமும் ,மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் .இல்லாவிட்டால் இந்தியாவின் மாநில அரசுகளின் நல்லுறவு ,ஒற்றுமை,கேள்விகுறியாகிவிடும் என்பது நிச்சயம்.அதுமட்டும் அல்லாமல் இரு மாநிலங்களில் வாழும் அப்பாவி மக்களின் பாதுகாப்பும் மத்திய அரசு கைகளில் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும் .

முல்லை பெரியார் அணையின் முழு பிரச்சினை விவரமும் , தீர்வும் அடங்கிய ஒரு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது இதை அவசியம் பாருங்கள் புரியும் .

முல்லை பெரியார் அணை-பகுதி -1

http://www.youtube.com/watch?v=eXti8xblCLM

முல்லை பெரியார் அணை-பகுதி -2

http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE

எச்சரிக்கை !!
வன்முறையாளர்களே வன்முறை நிரந்தர தீர்வல்ல .
பாதிக்க படபோவது இரு மாநில அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல .சிந்திப்பீர்
!!!!!!!!






Oct 31, 2011

சமையல் எரிவாயு உபயோகிப்போருக்கு நற்செய்தி






சமையல் எரிவாயு உபயோகிப்போர் மறு சிலிண்டர் பதிவு செய்ய பல மணி நேரம் போராட வேண்டிவருகிறது தொலைபேசியில் அழைத்தால் எப்போதும் என்கேஜ் டோன் வரும் .நேரில் சென்றால் கால் கடுக்க காத்திருந்து பதிவு செய்யவேண்டும் . இப்போது அந்த தொல்லைகளில் இருந்து விடுதலை விடுதலை.

அரசு புதிய முறையாக தொலைபேசியில் பதிவு செய்யும் முறை அறிமுகபடுத்தி உள்ளது .IVRS (INTERACTIVE VOICE RESPONSE SYSTEM )என்ற முறை அறிமுகபடுத்தி உள்ளது.

முதல் முறையாக சென்னையில் மார்ச் மாதமும்,இன்று முதல் கோவையிலும் அமுலுக்கு வருகிறது .கோவையில் உள்ள 4 லட்சம் பயனாளிகள் பயன்பெறலாம் .கோவையில் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் இந்த சேவையை துவக்கி வைத்தார் .


81240-24365 என்ற எண்ணுக்கு எந்த தொலை பேசியிலிருந்தும் எந்த நேரமும் ,விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம் .முதல் முறை நமது எரிவாயு எண் மற்றும் நமது தொலை பேசி எண் பதிவு செய்துவிட்டால் .அடுத்த முறை ""REFILL "" என்று டைப் செய்து மேற்கண்ட எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் பதில் SMS -ல் நமது வரிசை பதிவு எண வரும் .

மேலும் விவரங்கள் அறிய 2247396 ,2242696 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் . எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்திகொள்ளவும் .