Jul 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -93



நண்பர்களே வணக்கம் ,
                                
தேசிய NIFTY JULY (FUTURE) சரிந்து முடிவடைந்தது . நேற்று 5175.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5261.05 வரை உயர்ந்தது 5175.05 வரை கீழே சென்று 5206.85 ல் முடிவடைந்தது.


  • நேற்று பணவீக்கம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது கடந்த அறிக்கையை விட இந்த முறை 7.25 % என்ற அளவில் சற்று முன்னேற்றமாக வெளிவந்தது .
  • பொய்த்துவரும் பருவ  மழை   காரணமாக சந்தையில் ஒரு மந்த நிலை நிலவுகிறது .மேலும் இரண்டு வாரங்களுக்கு   மழை  பொய்த்தால்  சந்தையில் பெரும் மாற்றம் காணலாம் .கடுமையான வாகன புகை மற்றும் மாசுபட்ட சுற்று  சூழ்நிலை மாற்ற ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரங்கள்  நட வேண்டுமென்று உறுதிஎடுப்போம்
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5219 STAYED ABOVE 5232 TARGETS ,,5244 ,,5260,5278,,

THEN 5294,,5317,,,

SUPPORT LEVELS 5170,,5160 .,,,


SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5138,TARGETS 5128, 5114,5101,,,,,


THEN 5082,,5062,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Jul 15, 2012

பங்கு வர்த்தகம் மலர் -92

MARKET 



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று  சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5256.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5276.90 வரை உயர்ந்தது 5228.80 வரை கீழே சென்று 5240.45 ல் முடிவடைந்தது.
  • கடந்த ஜூன் மாதத்தில் இந்திய நாட்டின் ஏற்றுமதி 5.45 % சரிவடைந்து உள்ளது .ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் சர்வதேச பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவும் ,ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்குடன்  மத்திய அரசு  வட்டி சலுகையை ஓராண்டிற்கு நீடித்தும் ,ஏழுஅம்ச திட்டதையும் அறிவித்துள்ளது .
  • நாட்டின் தொழில் துறை உற்பத்தி சென்ற மே மாதம் 2.4 % என்ற அளவில் உள்ளது .இதே சென்ற வருடம் மே மாதத்தில் 6.4 % இருந்தது என்பது கவனிக்கதக்கது .  
  • இம்மாதம் 31 ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள காலாண்டு நிதி ஆய்வு கொள்கை அறிக்கையில் REPO RATE விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன .( ஆனால் பணவீக்கத்தை மனதில் கொண்டே  ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் )
  • மத்திய அரசு தங்க டெபாசிட் திட்டம் கொண்டு வர உள்ளது .இதன் மூலம் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமா ? எனவும் ஆலோசனை செய்துவருகிறார்கள் .அதாவது டெபாசிட் செய்யப்படும் தங்கத்திற்கு அதிக வட்டி தருவதாக இருந்தால் இந்த திட்டம் நடைமுறையில் சத்தியமாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .
  • வரும் நாட்களில் வெளிவர உள்ள  நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் எதிர் நோக்கி உள்ள  பருவ மழையின் அளவு நன்றாக இருக்கும் பட்சத்தில் நம் பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது . 
  • நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு 680 கோடி டாலர் அளவிற்கு குறைந்துள்ளது .
  • சீனாவில் வெளிவந்த காலாண்டு முடிவுகளில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.6 % குறைந்துள்ளது .மேலும் சீனாவின் தொழில் துறை வளர்ச்சியும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5251 STAYED ABOVE 5264 TARGETS ,,5280,,5294,5308,,

THEN 5328,,5351,,,


SUPPORT LEVELS 5210,,5200 .,,,


SELL BELOW 5190 STAYED WITH VOLUME -5177,TARGETS 5166, 5153, 5136,,,,,


THEN 5120,,5105,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது