Jul 15, 2012

பங்கு வர்த்தகம் மலர் -92

MARKET 



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று  சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5256.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5276.90 வரை உயர்ந்தது 5228.80 வரை கீழே சென்று 5240.45 ல் முடிவடைந்தது.
  • கடந்த ஜூன் மாதத்தில் இந்திய நாட்டின் ஏற்றுமதி 5.45 % சரிவடைந்து உள்ளது .ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் சர்வதேச பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளவும் ,ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்குடன்  மத்திய அரசு  வட்டி சலுகையை ஓராண்டிற்கு நீடித்தும் ,ஏழுஅம்ச திட்டதையும் அறிவித்துள்ளது .
  • நாட்டின் தொழில் துறை உற்பத்தி சென்ற மே மாதம் 2.4 % என்ற அளவில் உள்ளது .இதே சென்ற வருடம் மே மாதத்தில் 6.4 % இருந்தது என்பது கவனிக்கதக்கது .  
  • இம்மாதம் 31 ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள காலாண்டு நிதி ஆய்வு கொள்கை அறிக்கையில் REPO RATE விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன .( ஆனால் பணவீக்கத்தை மனதில் கொண்டே  ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் )
  • மத்திய அரசு தங்க டெபாசிட் திட்டம் கொண்டு வர உள்ளது .இதன் மூலம் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தங்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமா ? எனவும் ஆலோசனை செய்துவருகிறார்கள் .அதாவது டெபாசிட் செய்யப்படும் தங்கத்திற்கு அதிக வட்டி தருவதாக இருந்தால் இந்த திட்டம் நடைமுறையில் சத்தியமாக கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .
  • வரும் நாட்களில் வெளிவர உள்ள  நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் எதிர் நோக்கி உள்ள  பருவ மழையின் அளவு நன்றாக இருக்கும் பட்சத்தில் நம் பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது . 
  • நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்பு 680 கோடி டாலர் அளவிற்கு குறைந்துள்ளது .
  • சீனாவில் வெளிவந்த காலாண்டு முடிவுகளில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.6 % குறைந்துள்ளது .மேலும் சீனாவின் தொழில் துறை வளர்ச்சியும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5251 STAYED ABOVE 5264 TARGETS ,,5280,,5294,5308,,

THEN 5328,,5351,,,


SUPPORT LEVELS 5210,,5200 .,,,


SELL BELOW 5190 STAYED WITH VOLUME -5177,TARGETS 5166, 5153, 5136,,,,,


THEN 5120,,5105,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

1 comment:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்