Oct 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -146




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5885.60 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5855.60 வரை உயர்ந்தது 5732.40 வரை கீழே சென்று 5766.55 முடிவடைந்தது.
  • நிதி பற்றாக்குறையை GDP யில் 5.1 % ( 5.70 லட்சம் கோடி ) அளவில் கட்டப்படுத்த சென்ற மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது ,  இருப்பினும் பல்வேறு காரணங்களால் நடைமுறைபடுத்த இயலவில்லை .
  • பற்றாக்குறை மேலும் ரூ.50,000 கோடி அதிகரித்து GDP -யில் 5.8 % வரை உயரும் என்று பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர் .
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ,வெனிசுலா நாட்டில் உள்ள பெட்ரோலியோஸ் டி வெனிசுலா ( PDVSA ) என்ற நிறுவனத்துடன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது .
  • 2008-ம் ஆண்டில்  ஏற்கனவே RIL நிறுவனம் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.தற்போது புதிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டுள்ளது .இதன்படி 15 ஆண்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பிப்பாய்களுக்கு மேல் இந்நிறுவனம்  ( PDVSA ) கச்சா எண்ணையை குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் (RIL ) எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்திற்கு வழங்க உள்ளது .
  • வெனிசுலா நாட்டில் உள்ள ஒரே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம்  ( PDVSA ) என்பது குறிப்பிடத்தக்கது .மற்றும் ஒபெக் கூட்டமைப்பில் உறுப்பினராகவும் இந்நிறுவனம் உள்ளது .
  • சென்ற மாதம் பொது துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விதி முறைகளை தளர்த்த அரசு திட்டமிட்டுள்ளது .இதன் படி குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் அடிப்படையில் துரித கடன் வசதி ஏற்படும் என்று நம்பப்படுகிறது .
  • அந்நிய செலாவணி கையிருப்பு நிறைவடைந்த வாரத்தில் 16.21 லட்சம் கோடி ருபாய் டாலர் அதிகரித்தது . எதிர்வரும் மார்ச் 2013 ம் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு முழு நிதி ஆண்டில் ,இந்திய வங்கிகளின் வசூலாகா கடன் ரூ.2,00,000 கோடியை தாண்டும் என அசோசெம் அமைப்பு அறிவித்துள்ளது .
  • வங்கிகளின் வசூலாகாத கடன் 2.94 % திலிருந்து 3.75 % உயரும் ,அதாவது 1.57 லட்சம்  கோடியிலிருந்து  ரூ . 2 லட்சம் கோடியை தாண்டும் என செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன .

    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5790 STAYED ABOVE 5805 TARGETS ,,5816,,5829,5845,,

    THEN 5869,,5901,,,,,,

    SUPPORT LEVELS 5761,,5751.,,,


    SELL BELOW 5740 STAYED WITH VOLUME -5730,TARGETS 5718,5707,,5680,,


    THEN 5660,,5636,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    Oct 7, 2012

    பங்கு வர்ததகர்களே -உஷார்


    வெள்ளியன்று பங்கு சந்தையில் நடந்து என்ன ? என்பது பற்றிய அலசல்  பதிவு 



    Freak Trade : 05/10/2012 இந்த நாள்  பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் நண்பர்களுக்கு நீண்ட காலம் நினைவிருக்கும். காரணம் நீங்கள் மேலே காணும் அந்த வாசகம். சரியாக காலை 9.43 மணிக்கு தேசிய பங்குசந்தையை ஒரு சுனாமி தாக்கியது என்றால் அது மிகையாகது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு  தேசிய பங்குசந்தையில் வர்த்தகம் முடக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து தரப்பு மக்களின் முதலீடான பத்து லட்சம் கோடி ரூபாய் சில நொடிகளில் கேள்விக்குறியாகி நின்றது.

    Automated position square off என்ற ப்ரோக்ராம் காரணமாக தின வர்த்தகர்கள் பலர் நட்டம் அடைந்தனர். மேலும் பலருக்கு சந்தையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இவ்வளவும் அந்த பதினைத்து நிமிடங்களில். அதன் பிறகு சிலமணி நேரங்கள் கழித்து தேசிய பங்கு சந்தையில் இருந்து வந்த அறிவிப்பில்இணைத்து செயல்படும் ஒரு தரகு நிறுவனம் (EMKAY global) செய்த தவறு காரணமாக இந்நிகழ்வு நடந்ததுஎனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணக்கு தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.  இனி எந்த பிரச்னையும் இல்லை என்றது. 


    Freak trade என்பதனை   ‘erroneous’  execution of trade என்று சொல்லலாம்.  அதாவது கண்ணை மூடிக்கொண்டு கைக்கு கிடைத்த விலையில் தாறுமாறாக பங்குகளை விற்பனை செய்வது.  அதுவும் சாதாரண தொகை அல்ல. அந்நிறுவனத்தின் கூற்றுப்படிஅவர்களது மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர் ஒருவரின்  650 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யும் வேளையில் இந்த தவறு நிகழ்ந்தது என்றனர்.

    இந்த தவறால் தேசிய பங்குசந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பங்குகளில் 59 மதிப்பு வாய்ந்த பங்குகளின் விலை தாறுமாறாக சரிந்து பின்னர் சரி செய்யப்பட்டது. நிப்டியின் நிலை 900 புள்ளிகள் இறக்கம் கண்டது.  அந்த பதினைந்து நிமிடங்கள்இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை எதோ குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டு பொருள் போல் ஆட்டம் கண்டது என்றால் மிகையல்ல.  

                           

    இந்த தவறுக்கு அந்த தரகு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டாலும்தேசிய பங்கு சந்தையின் பாதுக்காப்பு தன்மையே  கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த நிகழ்வு  பற்றி இந்திய பங்குசந்தைகளின் இயக்க அமைப்பான செபிவிசாரணை ஆரம்பித்துள்ளது. ஆகவே  இது பற்றி மேலும் தகவல்கள் வரும் வரை நாம் காத்திருப்போம்.

    ஆனால் இன்று நமது மனதில் எழும் கேள்விகள் சில. 

    மத்திய அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புகளுக்கு பின்சந்தை உற்சாகமாக புதிய உயரங்களை தொடும் நேரத்தில்இந்த திருவிளையாடல்  நடந்ததன்  காரணம்.

    10% உயர்ந்தோ அல்லது சரிந்தோ சந்தைகள் வர்த்தகம் ஆனால்அணைத்து விதமான வர்த்தகங்களும் சிலமணி நேரங்களுக்காவது முடக்கப்பட வேண்டும்ஆனால் அதுவும் நிகழவில்லை. காரணம்.

    19,000 கோடி ருபாய் அந்நிய முதலீடு கடந்த மாதத்தில் சந்தைகளுக்குள் பாய்ந்த பொழுது கூட ஏற்பாடாத சீற்றம்இந்த 650 கோடி ருபாய் மூலம் உருவானதின் காரணம்.

    தேசிய பங்குச்சந்தை  சில நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு முன் நடந்த சில நொடி வர்த்தகம்அங்கீகரிக்கப்பட்டதன் காரணம்.

    இதன் மூலம் நட்டமடைந்த சிறுமுதலீட்டாலர்களின் நிவாரணம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததன் கரணம். 

                  

    இவ்வாறு பல கேள்விகள் நமது மனதில் எழுந்தாலும்,  எதற்கும் இந்த நிமிடம் வரை விடையில்லை.  கூடிய விரைவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் செபி அமைப்பு நடவடிக்கை எடுக்கும்.  தகுந்த பதில் அளிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே மீந்துள்ளது.