வெள்ளியன்று பங்கு சந்தையில் நடந்து என்ன ? என்பது பற்றிய அலசல் பதிவு
Freak Trade : 05/10/2012 இந்த நாள் பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் நண்பர்களுக்கு நீண்ட காலம் நினைவிருக்கும். காரணம் நீங்கள் மேலே காணும் அந்த வாசகம். சரியாக காலை 9.43 மணிக்கு தேசிய பங்குசந்தையை ஒரு சுனாமி தாக்கியது என்றால் அது மிகையாகது. கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு தேசிய பங்குசந்தையில் வர்த்தகம் முடக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து தரப்பு மக்களின் முதலீடான பத்து லட்சம் கோடி ரூபாய் சில நொடிகளில் கேள்விக்குறியாகி நின்றது.
Automated position square off என்ற ப்ரோக்ராம் காரணமாக தின வர்த்தகர்கள் பலர் நட்டம் அடைந்தனர். மேலும் பலருக்கு சந்தையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இவ்வளவும் அந்த பதினைத்து நிமிடங்களில். அதன் பிறகு சிலமணி நேரங்கள் கழித்து தேசிய பங்கு சந்தையில் இருந்து வந்த அறிவிப்பில், இணைத்து செயல்படும் ஒரு தரகு நிறுவனம் (EMKAY global) செய்த தவறு காரணமாக இந்நிகழ்வு நடந்தது, எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணக்கு தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது. இனி எந்த பிரச்னையும் இல்லை என்றது.
Freak trade என்பதனை ‘erroneous’ execution of trade என்று சொல்லலாம். அதாவது கண்ணை மூடிக்கொண்டு கைக்கு கிடைத்த விலையில் , தாறுமாறாக பங்குகளை விற்பனை செய்வது. அதுவும் சாதாரண தொகை அல்ல. அந்நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர்களது மதிப்பு வாய்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் 650 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யும் வேளையில் இந்த தவறு நிகழ்ந்தது என்றனர்.
இந்த தவறால் தேசிய பங்குசந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பங்குகளில் 59 மதிப்பு வாய்ந்த பங்குகளின் விலை தாறுமாறாக சரிந்து பின்னர் சரி செய்யப்பட்டது. நிப்டியின் நிலை 900 புள்ளிகள் இறக்கம் கண்டது. அந்த பதினைந்து நிமிடங்கள், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை எதோ குழந்தையின் கையில் இருக்கும் விளையாட்டு பொருள் போல் ஆட்டம் கண்டது என்றால் மிகையல்ல.
இந்த தவறுக்கு , அந்த தரகு நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டாலும், தேசிய பங்கு சந்தையின் பாதுக்காப்பு தன்மையே கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்த நிகழ்வு பற்றி இந்திய பங்குசந்தைகளின் இயக்க அமைப்பான செபி, விசாரணை ஆரம்பித்துள்ளது. ஆகவே இது பற்றி மேலும் தகவல்கள் வரும் வரை நாம் காத்திருப்போம்.
மத்திய அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்புகளுக்கு பின், சந்தை உற்சாகமாக புதிய உயரங்களை தொடும் நேரத்தில், இந்த திருவிளையாடல் நடந்ததன் காரணம்.
10% உயர்ந்தோ அல்லது சரிந்தோ சந்தைகள் வர்த்தகம் ஆனால், அணைத்து விதமான வர்த்தகங்களும் சிலமணி நேரங்களுக்காவது முடக்கப்பட வேண்டும், ஆனால் அதுவும் நிகழவில்லை. காரணம்.
19,000 கோடி ருபாய் அந்நிய முதலீடு கடந்த மாதத்தில் சந்தைகளுக்குள் பாய்ந்த பொழுது கூட ஏற்பாடாத சீற்றம், இந்த 650 கோடி ருபாய் மூலம் உருவானதின் காரணம்.
தேசிய பங்குச்சந்தை சில நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு முன் நடந்த சில நொடி வர்த்தகம், அங்கீகரிக்கப்பட்டதன் காரணம்.
இதன் மூலம் நட்டமடைந்த சிறுமுதலீட்டாலர்களின் நிவாரணம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததன் கரணம்.
இவ்வாறு பல கேள்விகள் நமது மனதில் எழுந்தாலும், எதற்கும் இந்த நிமிடம் வரை விடையில்லை. கூடிய விரைவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் செபி அமைப்பு நடவடிக்கை எடுக்கும். தகுந்த பதில் அளிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே மீந்துள்ளது.
|
Tweet |
அவசியமான பதிவு.............
ReplyDeleteமிக்க நன்றி ராம் சார்
Deleteமிகவும் தேவையான பகிர்வு...
ReplyDeleteநன்றி...
நன்றிங்க தனபாலன் சார்
Deleteஓ,, ஓ,,, என்ன காத்து கம்மியா வீசுது..?
ReplyDeleteவணக்கம் தொழிற்களம் சார் ,
Deleteதென்றல் மட்டுமே வீசுகிறது
ஜி, செபி நடவடிக்கை எடுக்கும் என்பது ஒரு கண்துடைப்புத்தான்...
ReplyDeleteவழிப்பறிக்கும் வெள்ளிகிழமை நிகழ்வுக்கும் பெருசா வித்தியாசம் இருக்குற போல தெரியல ... :)
ReplyDeleteவாங்க பாலு ஜி !
Deleteசெபியின் நடவடிக்கையும் ,சுறுசுறுப்பும் ,நமக்கு தெரிந்த்தது தானே .இந்த வழிப்பறி கொள்ளையில் இழந்தவர்கள் தினவர்த்தகர்கள் ( CASH ) மட்டுமே . STOP LOSS போடாமல் TRADE செய்தவர்கள் கதி அதோ கதி தான் .கண் மூடி கண் திறப்பதற்குள் கணக்கில் உள்ள பணம் காணாமல் போய் இருக்கும் .
இந்த சிக்கலுக்கு SEBI மட்டுமே தீர்வு காண முடியும் ,நல்ல தீர்வு வரும் என்று நம்புவோம் .