Nov 25, 2012

ரயில் பயணம் செய்பவரா ? டிசம்பர் 1 முதல் கவனம் !


மறவாதீர் ! மறவாதீர் ! மறவாதீர் ! 

         


 டிசம்பர் 1ம் தேதியில்  முதல்  முன்பதிவு வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் பயணத்தின்போது புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதன் அடையாள அட்டைகளாக :

            

  • வாக்காளர் அடையாள அட்டை, 
  • பாஸ்போர்ட், 
  • பான் கார்டு, 
  • டிரைவிங் லைசென்ஸ்,
  • வரிசை எண்களுடன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள், 
  • பென்ஷன் பே ஆர்டர், 
  • புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு,
  • சீனியர் சிட்டிசன் கார்டு, 
  • பிபிஎல் கார்டு, 
  • போட்டோவுடன் கூடிய இஎஸ்ஐ கார்டு, 
  • சிஜிஎச்எஸ் கார்டு 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, 
  • கல்லூரிகளில் இருந்து வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை, 
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ் புத்தகம், 
  • லேமினேட் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய வங்கிகளின் கிரடிட் கார்டு,
  •  ஆதார் அடையாள அட்டை, 
  • வரிசை எண்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை
ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

               

ஒரே டிக்கெட்டில் பலர் குழுவாக பயணித்தாலும் அனைவரிடமும் செல்லுபடியாகக்கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


குடும்ப சகிதமாக பயணம் மேற்கொண்டால், ஒருவர் மட்டும் அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது என்றும், மற்ற எந்த பிரிவில் சென்றாலும், தனித்தனி அடையாள அட்டைகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டும், விபத்து நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளர் கண்டறியும் நோக்கத்தோடும், இந்த புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Nov 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -163


                                     

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5611.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5616.65 வரை உயர்ந்தது 5555.55 வரை கீழே சென்று 5583.85 -ல் முடிவடைந்தது.

  • பொது துறை வங்கிகளிடையே  போட்டி அதிகரித்துள்ளதால் வீடு ,வாகன கடன்களுக்கான வட்டி மேலும் குறையும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன .
  • வீட்டு வசதிக் கடன் பெற்றவர்கள், அக்கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தி வருவதால், இப்பிரிவில், பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அளவும் குறைந்து வருகின்றது .
  • நம் நாட்டின் நிலக்கரி பற்றாகுறை 18.50 கோடி டன்னாக இருக்கும் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன .நிலக்கரி மூலம் எடுக்கப்படும் மின் உற்பத்தி பற்றாக்குறைக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவன தலைவர் திரு நரஸிங்  ராவ் தெரிவித்துள்ளார் .
  • சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொண்டு வந்த அந்நிய முதலீடிற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது .



இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5594 STAYED ABOVE 5605 TARGETS ,,5617,,5630,5646,,

THEN 5661,,5680,,,,,,

SUPPORT LEVELS 5563,5553.,,,


SELL BELOW 5542 STAYED WITH VOLUME -5531,TARGETS 5518,5502,,5488,,


THEN 5467,,5446,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது