Sep 13, 2011

சிறை பிடிக்கப்பட்ட 110 இந்தியர்களை மீட்டார் -உயர்திரு .Dr .சைலேந்திர பாபு


பெங்களுரை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் செயல்படுகிறது, இந்நிறுவனம் தாய்லாந்து சென்று வர நபர் ஒருவருக்கு ரூபாய் 10000 ,தங்கும் இடம் ,உணவு ,சுற்றிபார்க்க எல்லாம் இலவசம் என்று அறிவித்தது .


இந்த விளம்பரத்தை பார்த்து கோவையை சேர்ந்த தம்பதியினர் இருவரும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 110 பேரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு கடந்த 8 ம் தேதியன்று புறப்பட்டு சென்றனர் .


அங்கு இவர்களை வரவேற்ற ஏஜென்ட் ஒரு ஹோட்டலில் எல்லோரையும் தங்கவைத்தனர் .மறுபடியும் ஏஜென்ட் வரவில்லை.தங்கி இருந்தவர்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டபோது இந்தியாவில் இருந்து எங்களுக்கு பணம் வரவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் தலா ரூ .30000 / = தரவேண்டும் இல்லாவிட்டால் உங்களை விடமாட்டோம் என்று எல்லோரின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டு 110 பேரையும் சிறை பிடித்தனர் .


இந்த தகவலை கோவையை சேர்ந்த நபர் தனது மகளான கல்லூரி பெண்ணிடம் நடந்தவற்றை போனில் தெரிவித்து காப்பாற்றும்படி கூறிவுள்ளார் .

உடனடியாக அப்பெண் தனது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பட்ட அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார் .கனிவுடன் விசாரித்த தற்போதைய வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு.Dr.சைலேந்திர பாபு உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.


ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் தொடர்பு கொண்டபோது அவர்கள் சுமார் பத்து லட்ச ருபாய் பெற்று கொண்டு தலை மறைவானது தெரிய வந்தது .
தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள ஏஜெண்டுகளிடம் தொடர்புகொண்ட திரு .Dr.சைலேந்திர பாபு 110 பேரும் ஏமாற்றப்பட்ட விசயமும் அவர்களை உடனடியாக இந்தியா அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுத்து "உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை அனுப்பிவைக்கிறோம் "என்று உறுதியளித்தார் .


.ஜி.திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உறுதியளிப்பை ஏற்றுகொண்ட ஏஜெண்டுகள் அனைவரையும் ஹோட்டல் அறையில் இருந்து விடுவித்தனர் .அவர்களின் பாஸ்போர்ட்டும் திருப்பி வழங்கப்பட்டு 110 பேரும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட்டும் வழங்கப்பட்டது .இன்று அவர்கள் சென்னை அடைவார்கள் . அனைத்து பயணிகளும் தாங்கள் காப்பற்றபட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சியும் நிம்மதி பெருமூச்சும் அடைந்தனர் .


பொது மக்கள் இனிமேலாவது இலவசங்களை நம்பி
ஏமாறாமல் தீர விசாரித்து பயணங்கள் தொடரவும்



வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உடனடியான அதிரடி நடவடிக்கையால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் . 110 இந்தியர்களை கடல்கடந்து இருந்தாலும் எல்லைகளை கடந்து மீட்ட உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் பாராட்டுகளும் ,நெஞ்சார்ந்த நன்றிகளும் ,தொடர்ந்து இது போன்ற பல சாதனைகள் தொடரவும் வாழ்த்துக்கள் .

ஜெய் ஹிந்த்

20 comments:

  1. திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாக நன்றியும் பாராட்டுதல்களும் உரித்தாகுக.திரு.சைலேந்திரபாபு சார் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. Dr .சைலேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. பகிர்வுக்கு நன்றிங்க சக்தி

    ReplyDelete
  3. அன்புள்ள வேலன் அண்ணா ,

    ""திரு.சைலேந்திரபாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாக நன்றியும் பாராட்டுதல்களும் உரித்தாகுக.திரு.சைலேந்திரபாபு சார் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.""
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    நன்றி அவரின் சாதனைகள் தொடரும்
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. வணக்கம் ஞானா ,

    தங்களின் வாழ்த்துகளுக்கும் ,பாராட்டிற்கும் நன்றிங்க

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. இவர் எப்பவுமே ரியல் ஹீரோ ....னு காட்டிட்டார் ...........பகிர்வுக்கு நன்றி சக்தி ஜி ......

    ReplyDelete
  6. பாலு ஜி வாங்க ,
    தாங்கள் முதல் வருகையால் மிக்க மகிழ்ச்சி .தொடர்ந்து வருகை தாருங்கள்.
    என்றும் நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  7. நல்ல விஷயம் ..தகவலுக்கு நன்றி நண்பரே..ஏமாறாமல் இருக்க வழி..

    ReplyDelete
  8. வணக்கம் டாக்டர் ,
    உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி .மக்கள் இலவசத்தை நம்பாமல் தீர விசாரித்து செயல்படுவது நல்லது .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  9. உடனடியாக அப்பெண் தனது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பட்ட அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார் .கனிவுடன் விசாரித்த தற்போதைய வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு.Dr.சைலேந்திர பாபு உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.///நன்றியும் பாராட்டுதல்களும்

    ReplyDelete
  10. வணக்கம் மாலதி மேடம் ,
    தாங்கள் வருகைக்கு நன்றி தொடர் வருகை தாருங்கள் ,
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  12. தாங்கள் வருகைக்கு நன்றி டாக்டர் ஐயா
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  13. சைலேந்திர பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    //பொது மக்கள் இனிமேலாவது இலவசங்களை நம்பி ஏமாறாமல் தீர விசாரித்து பயணங்கள் தொடரவும் // எவ்வளவு விஷயங்களைத் தான் விசாரித்து செயல் பட முடியும்? ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் ஊழல், பொய், ஏமாற்று வேலை. இந்த வேளையில் சைலேந்திர பாபுவைப் போன்ற அதிகாரிகள் நம்பிக்கையளிகிறார்கள்.

    ReplyDelete
  14. தாங்கள் வருகைக்கு நன்றி நண்பரே ,

    நீங்கள் கூறுவது உண்மை .சில சமயம் நாம் தான் மிக எச்சரிகையுடன் இருக்க வேண்டும்
    நன்றி
    கோவை சக்தி

    ReplyDelete
  15. salut for mister Dr.சைலேந்திர பாபு

    ReplyDelete
  16. தாங்கள் வருகைக்கு நன்றி நண்பரே,
    தொடர்ந்து வருகை தாருங்கள்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  17. padhivittamaikku nandri
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் ,

      மிக்க நன்றி நண்பரே !

      Delete
  18. SILENDRA BABU IS DOING A GREAT JOB...HIS SERVICE IS INCREDIBLE TO THE PUBLIC...HE IS REALLY A GEM IN POLICE DEPARTMENT ...A GREAT SALUTE SIR..

    THANKS TO SAKTHI FOR UPDATING THE CURRENT AFFAIRS...UR SERVICE IS TO BE CONTINUED....

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்