தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் வெட்டு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது .கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 10 ௦ மணி நேரம் மின்சாரம் இருப்பது இல்லை.தொழில் நகரமான கோவை மக்கள் சொல்ல முடியாது துயரமும் மன வருத்தமும் அடைத்துள்ளனர் .
பல தொழிலாளர்கள் பகல் முழுவதும் மின்சாரம் இல்லாதிருப்பதால் இரவு நேரம் பணிகள் செய்கின்றனர் .எத்தனை நாட்கள் இப்படி செய்யமுடியும் .எல்லா தொழில்களும் முடங்கி கிடக்கிறது .பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்து வருகிறது .
சில இடங்களில் காலை வேலைகளில் மின்சாரம் இருப்பதில்லை. காலையில் சமைக்க முடியாமல் பல இல்லத்தரசிகள் அவதியடைகிறார்கள்.பள்ளி செல்லும் குழந்தைகள் உணவு எடுத்து செல்லமுடியாமலும்,மாலை வேலைகளில் படிக்க முடியாமலும் திணறுகிறார்கள் .
இப்படி எண்ணிலடங்கா பல இன்னல்கள் பலர் சந்திக்க வேண்டியுள்ளது .
தொடர் மின்வெட்டை கண்டித்து கோவையில் காந்திபுரத்தில் தொழில் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10000 அதிகமான மக்கள் கூடியதால் பரபரப்பும் ,போராட்டமும் வெடித்தது .
கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் .இதில் மக்கள் சிலர் மற்றும் பத்திரிகையாளர் சிலர் லேசான காயமடைந்ததாக தெரிகிறது .
இதற்கு முடிவு தான் என்ன ?????????????
அரசு போர் கால நடவடிக்கை எடுக்காவிட்டால் மேலும் மக்களின் எதிர்ப்பை பலமாக சந்திக்க நேரிடும் .
அரசு அவசர கால கூட்டம் கூட்டி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க படவேண்டும்
இனி மார்ச் முதல் வெயில் காலம் ஆரம்பம் என்பதால் மின்சார உபயோகம் அதிகரிக்கும் காலங்கள்
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கபட்டால் அனைத்து சிக்கல்களும் ஒரு முடிவுக்கு வரும்
தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தா விட்டால் கை தூக்கிய கொங்கு மண்டலத்தின் எதிர்ப்பை சந்திக்கவும் ,அவப்பெயர் பெறவும் நேரிடும் .
படங்கள் உதவி -தின மலர் நாளிதழ்
நன்றி
|
Tweet |
முடிவினை எடுக்கும் அதிகாரிகள் ஏ.சி.ரூமில் இருந்துகொண்டு திட்டம் போட்டால் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும.அதிகாரிகள் வீட்டில் இவ்வாறு மின்தடை ஏற்படுத்திப்பாருங்கள். ஒழுங்கான திட்டம் வரும்..நாம் இருவர் புலம்பி என்ன பயன்?
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
சரியான பதில் அண்ணா ,
ReplyDeleteஎல்லோரும் ஏ.சி.ரூமில் இருந்துகொண்டு திட்டம் போட்டால் விளைவுகள் இவ்வாறுதான் இருக்கும.
நம்ம மாதிரி யாராவது உயர் அதிகாரிங்க அல்லது அரசியல்வாதிங்க கஷ்டபட்டா தான் அவங்களுக்கு புரியும் .
யார நல்லவங்கனு நம்பரறது இளிச்சவாயன் பொது மக்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்
நட்புடன் ,
கோவை சக்தி