Nov 18, 2012

பங்கு வர்த்தகம் மலர் -161



 நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  வெள்ளியன்று சரிந்து முடிவடைந்தது .நேற்று   5648.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5664.00 வரை உயர்ந்தது 5568.00 வரை கீழே சென்று 5580.55 -ல் முடிவடைந்தது.

  • பொருளாதார நிலை மோசமாக இருப்பது குறித்த பல்வேறு புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது இதன் பின் தொடர்ச்சியாகவும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காதது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் சரிவு தொடர்கிறது
  • கடந்த இரு மாதங்களாக தற்போது உள்ள நிபிட்டி நிலையே தாழ்வு ஆகும் .
  • கடந்த வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.984 கோடி நம் சந்தையில் முதலீடு செய்துள்ளனர் .
  • சமாஜ்வாதி கட்சி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை திடீரென வெளியிட்டது. தேசிய அரசியல் சூழலில் குழப்பமான நிலை நிலவுவதையே  இது குறிப்பதாகக் கருதப்படுகிறது .
  •  2ஜி அலைக்கற்றைக்கு நடத்தப்பட்ட புதிய ஏலம் எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டித் தரவில்லை. இதுவும்  பங்குச் சந்தையின் சரிவிற்கு ஒரு  காரணமாயிற்று.
  •  

  •   வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் பிரதமர் திரு .மன்மோகன் சிங் தலைமயிலான ஐக்கிய

    முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார் .

  • இந்த சம்பவங்கள் பங்கு வர்த்தகத்தில் ஒரு ஸ்த்திர தன்மை இல்லாத போக்கையும் ,சரிவிற்கும் காரணமாக அமையும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5590 STAYED ABOVE 5600TARGETS ,,5614,,5626,5640,,

THEN 5670,,5696,,,,,,

SUPPORT LEVELS 5570,,5560.,,,


SELL BELOW 5552 STAYED WITH VOLUME

-5535,TARGETS 5520,5505,,5490,,


THEN 5470,,5450,,,

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

 

 

 

                     

8 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றிங்க தனபாலன் சார்

      Delete
  2. உபயோகமான தகவல்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் ,மிக்க நன்றிங்க ரமணி சார்

      Delete
  3. தகவலுக்கு நன்றிங்..

    ReplyDelete
    Replies
    1. முத்தண்ணே வாங்க வணக்கம் ! நன்றி !

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்