Sep 16, 2012

பங்கு வர்த்தகம் மலர் -136



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5530.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5597.70 வரை உயர்ந்தது 5530.05 வரை கீழே சென்று 5584.90 முடிவடைந்தது.
  • பணவீக்கம் 7.55 % அதிகரித்துள்ளது , தொழில்துறை உற்பத்தியிலும் ,எதிர்பார்த்த அளவில்  பெரிய  முன்னேற்றம் ஏற்படவில்லை ( 0.1 % ) என்பது குறிப்பிடத்தக்கது .
  • பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது ரிசர்வ் வங்கி ,வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்பது நம் கருத்து .(  பலமுறை பணவீக்க உயர்வை ரிசர்வ் வங்கி காரணம் கட்டி உள்ளது குறிப்பிட வேண்டிய விசயமாகும் ).
  • கடன்களுக்கான வட்டி விகிதம் மிகவும் உயர்ந்துள்ளது ,இதனால் முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகிறது என்பதை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளவேண்டும் .
  • அமெரிக்க நாட்டின் மத்திய வங்கி பொருளாதாரத்தை வலுபடுத்தும் வகையில் 2015 -ம் ஆண்டு வரை  ஒவ்வொரு மாதமும் 4000 கோடி டாலர் அளவிற்கு அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை வாங்கிகொள்வதாக அறிவித்தது ,இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன ,இதன் தாக்கமாக நம் சந்தையும் உயர்வை சந்தித்தது .

  • பார்தி ஏர்டெல் 
  • பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது துணை நிறுவனமான பார்தி இன்ப்ரா டெல் பங்கு வெளியிட்டிற்கு அனுமதி வேண்டி SEBI-யிடம் விண்ணபித்துள்ளது .

  • பத்தனம்திட்டா பாப்புலர் பைனான்ஸ், பாப்புலர் டிரேடர்ஸ் என்ற பெயரில் கேரளாவை சேர்ந்த நிதி நிறுவனம் பொது மக்களிடமிருந்து வைப்பு நிதியை பெற்று வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு ,மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கிளைகள் கொண்டுள்ளது , ஆனால் இது ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு என்று மத்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • டீசல் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு உயர்ந்துள்ளது . டீசல் விலை உயர்வுக்கே ரூபாய் மதிப்பு அதிகரித்துவிட்ட நிலையில் இந்தியா அதிரடியாக மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முக்கிய அம்சமான அன்னிய முதலீட்டுக்கு அனுமதியால் ரூபாய் மதிப்பு இன்னமும் அதிகரிக்கலாம் என செய்திகுறிப்பு தெரிவிகின்றன .
  • டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை 0.2 சதவீதம் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது.
  • நம் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 158 கோடி டாலர் (8,690 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,204 கோடி டாலராக (16,06,220 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
  • வெளிநாட்டில வாழும் இந்தியர்கள் நம் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யும் அளவு ஆறு மடங்கு உயர்ந்துள்ளது என செய்தி குறிப்புகள்  தெரிவித்துள்ளன .
  • இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5602 STAYED ABOVE 5617 TARGETS ,,5633,,5652,5677,,

THEN 5694,,5714,,

SUPPORT LEVELS 5553,,5540 .,,,


SELL BELOW 5530 STAYED WITH VOLUME -5520,TARGETS 5507,5493,,5476,,


THEN 5457,,5439,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


4 comments:

  1. ஆஹா பூசார் மிகவும் உசாராய் இருப்பதைக் காண
    மகிழ்ச்சியாய் உள்ளது சகோதரரே .நான் பங்கு வர்த்தக
    கணக்கையும் சேர்த்தேதான் சொன்னேன் :) மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ,நன்றி சகோதரி ,தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. மதிப்பு உயர்ந்தால் சரிதான்..

    பத்தனம்திட்டா... அட அப்படியா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல ,பத்தனம் திட்டா உஷார்,யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்களோ ?ம்ம்ம்ம்ம்ம்ம் பாவம்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்