மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு பெரும் எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பி உள்ளது .சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் பெரும் பாதகமும் ,நம் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பபடுகிறது .
நாம் அறிந்த வகையில் ஒரு உதாரணம் காண்போம் :
நாம் சில ஆண்டுகளுக்கு முன்பாக கடைகளில் " காளிமார்க் " , " வின்சென்ட் " போன்ற இந்திய தயாரிப்பு குளிர்பானங்களை ( சுதேசி ) பருகி இருப்போம் ! என்பதை நினைவுபடுத்தி பாருங்கள் !
அதுவே இன்று அந்நிய தயாரிப்புகளான ( விதேசி ) " பெப்சி " , " கோகோ - கோலா " போன்ற குளிர்பானங்களை மட்டுமே கடைகளில் அதிகமாக பார்க்க முடிகிறது .
அந்நிய தயாரிப்பு நிறுவங்கள் நம் நாட்டில் காலடி வைத்த பிறகு நம் தயாரிப்பு குளிபானங்கள் காணாமல் போய்விட்டது என்பதை நாம் அறிவோம் .!
அதையே நாம் தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்த வேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்படுகிறோம் .இந்த மாற்றம் ,இந்த நிர்பந்தம் , அனைத்துமே அந்நிய தயாரிப்புகள் உள்ளே வந்ததன் விளைவே காரணமாகும் .இதே போன்ற நிர்பந்தங்களுக்கு இனி மேலும் மேலும் நாம் அறியாமலேயே தள்ளபடுகிறோம்.
மேற்கண்ட சிறு உதாரணம் மூலம் அந்நிய சில்லறை வர்த்தகத்தின் தாக்கத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம் .
நம் அறிவுஜீவிகள் சிலரின் கருத்துபடி அந்நிய முதலீடு சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் வேலை வாய்ப்பு பெருகும் ,இடைத்தரகர்கள் நீக்க படுவார்கள் ,நியாயமான விலையில் பொருட்கள் மக்களை சென்றடையும் ,நாட்டின் பொருளாதாரம் உயரும் ,என்பதே அவர்கள் கருத்து .
அமெரிக்காவில் சில மாகாணங்களில் வால் -மார்ட் போன்ற நிறுவங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறியுங்கள் !
அந்நிய முதலீடுகளை அனுமதி வழங்கி வரவேற்ற ஐரோப்பியா , அமெரிக்கா ,போன்ற மேலும் பல நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்ந்து நிலவிவருகிறது என்பதை நம் அறிவு ஜீவிகள் உணர்வார்களா ?
நேற்று வரை நம் பிரதமரை கையாலாகாத பிரதமர் என்று கூறிய அமெரிக்க பத்திரிகைகள் ,அமெரிக்க நிறுவனங்களுக்கு வரவேற்பு கொடுத்ததால் பாரத பிரதமர் ரொம்ப நல்லவர் அவர்கள் நாட்டு பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளன .யாருக்கு வேண்டும் அவர்கள் பாராட்டும் ,ஏளன பேச்சும் .
ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டை பிடித்தார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் !அட பயப்பட வேண்டாம் சாமி ! சில காலங்கள் கழித்து அவன் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும் .அந்நியர்கள் சம்பாதிக்க நாம் பட்டு கம்பளம் விரிக்க வேண்டுமா ? சிந்தியுங்கள் !!
நம் மத்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பாதிப்போ ? அச்சுறுத்தலோ ? இல்லை .தேவையற்ற பயம் தேவை இல்லை என்று கூறினாலும் ,நம்மை தொடரும் சந்ததிகள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தள்ளபடுவார்களா ?
என்ன வளம் இல்லை ! நம் பாரத தாய் திருநாட்டில் !
|
Tweet |
மிகவும் பயன் வுள்ள பதிவு
ReplyDeleteஅருமை நண்பரே ........
மிக்க நன்றி ராம் சார்
Deleteஎங்கள் ஊரில் எப்போதும் காளிமார்க் தான் அதிகம்...
ReplyDeleteயோசிக்க வேண்டிய பகிர்வு... நன்றி சார்...
ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே ! நம் நாடும் ஒரு காலத்தில் சுதந்திர நாடாய் இருந்தது ,என்று சொல்லும் நிலை வந்துவிட வேண்டாம் .
Deleteநன்றி தனபாலன் சார்
மிக நேர்த்தியான பதிவு மாஸ்டர். இன்னும் சிறிது காரமாக எதிர்பார்த்தேன்... நீங்கள் கூறுவது போல், தாரளமயமாக்கல் கொள்கையில் பல வித குளறுபடிகள் உள்ளன. எட்டு வருட காலமாக தூங்கிக்கொண்டிருந்த நமது மாண்புமிகு பாரத பிரதமர், ஒரே நாளில் துள்ளி எழ காரணம் என்ன. இதற்கு பல உள் காரணங்கள் காற்றில் உலா வருகிறது.
ReplyDeleteஉதாரணமாக கிங் பிசெர் விமான நிறுவனத்தை காப்பாற்ற, நமது அரசு சார்பு வங்கிகள் குடுத்த கடன் திரும்பி வருமா என்ற நிலை. லட்சகணக்கான மக்களிடம் பெறப்பட்ட முதலீடுகள் இப்படி அரக்க நிறுவனங்களில்.. தனி நபர் வாங்கிய கடனை கத்தியை காட்டி மிரட்டி வசூல் செய்யும் இவ்வங்கிகள், இவ்வாறான பண முதலைகளின் காலில் விழுந்து புலம்புகிறது.
இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் அரசாங்கம் செய்த அவசர முடிவே காரணம். எப்படி GAAR என்ற இரட்டை வரி விதிப்பு முறை காற்றில் பறந்ததோ, அதே போல், இங்கு உள்ள பண முதலாளிகள் லாபம் பெற உள்நாடு மற்றும் வெளிநாடு முதலீட்டலர்களிடமிருந்து வந்த நெருக்குதலே காரணம்.
எளிதாக சொல்வதென்றால் ஆளுபவர்களில் அவசரத்தால், இந்திய நாடு இரண்டாம் முறை அடமானம் போயுள்ளது.
வாங்க சிம்பா வணக்கம் ,
Deleteதங்களின் விரிவான விளக்கம் அருமை ,நன்றி ,நம் ஆட்சியாளர்கள் நம்மை மொத்தமாக அடகு வைக்க போகிறார்கள் .ஆட்சியாளர்களை சொல்வதை விட அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் தான் ஒன்று கூடி விளக்கம் கேட்கவேண்டும் .இல்லாவிட்டால் நாமும் அடிமைகளாய் சுற்ற வேண்டியது தான்.நம் வாழ்க்கை நம் கையில் ,,,,,,,,,,,,,,,
சரியா சொன்னீர்கள் நண்பா - சிந்திக்கவும்
ReplyDeleteரொம்ப நன்றி அண்ணா ,
Deleteஎல்லோரும் சிந்திப்போம்,,,,,,,,,,,
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு = நம்ம வீட்ல திருடன் மற்றும் கொலைகாரன அனுமதிக்கும் செயல்
ReplyDeleteவாங்க பாலா ஜி ,
Deleteரொம்ப சரியா சொன்னிங்க !இதை நம் ஆட்சியாளர்களுக்கு புரிய வைப்பது யார் ?அவர்களுக்கா புரியாமல் இருக்கும் ?????????????
manmohan is american agent. SONIA you all know
ReplyDeletewelcome friend,
DeleteThank you for your comment .