Sep 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -139





நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5583.85 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5735.55 வரை உயர்ந்தது 5583.85 வரை கீழே சென்று 5707.05 முடிவடைந்தது.
  •  நம் நாட்டில்  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வேகம்  அடைந்துள்ளன .இதன் தொடர்ச்சியாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடிற்கு அனுமதி மற்றும் விமான சேவை துறைக்கு அனுமதி வழங்கியதை நாம் அறிந்ததே .
  • தொடர்ந்து மருத்துவ துறை மற்றும் ஆயுள் காப்பிட்டு துறைக்கும் , அனுமதி அளிக்கபட உள்ளது .
  • வெள்ளியன்று நமது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார் .
  • அதாவது வெளி நாடுகளில் கடன் திரட்டும் இந்திய  நிறுவனங்களுக்கான வரியை 2010 ஜூலை மாதத்திலிருந்து 2015 ஜூன் மாதம் வரை 5 % குறைத்துள்ளார் ,இந்த வரி விகிதம் முதலில் 20 % மாக இருந்தது குறிப்பிடத்தக்கது .இந்த சலுகையால் வெளிநாட்டு நிதி அதிக அளவில் நம் நாட்டிற்குள் வரும்.
  • வெளிநாட்டு வணிக கடன்களை கொண்டு ஏற்கனவே வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த உள்நாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக இருக்கும் .இதனை தொடர்ந்து நம் சந்தை அதிக அளவில் ஏற்றம் கண்டது .
  • மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் அந்நிய முதலீடு அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது .
  • நேற்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.92 அதிகரித்து 53.75 ல் முடிவடைந்த்தது .
  • அந்நிய செலாவணி வரத்து மேலும் அதிகாரிக்கு நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .
  • ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது 
  • இந்த அறிவிப்பின் படி ஓராண்டில் ரூ .50,000 முதலீடு செய்யலாம் .இந்த முதலீட்டில் ரூ .25,000 வரை வரி சலுகை பெற இயலும் .இதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது , 
  • அவை 100 முன்னணி நிறுவங்களில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள வேண்டும் .மற்றும் வாங்கிய பங்குகளை 3 ஆண்டுகளுக்கு விற்க கூடாது போன்ற சில நிபந்தனைகளும்  விதிக்க பட்டுள்ளது .
                                        
    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5720 STAYED ABOVE 5736 TARGETS ,,5748,,5763,5777,,

    THEN 5801,,5827,,,,,,

    SUPPORT LEVELS 5684,,5674 .,,,


    SELL BELOW 5660 STAYED WITH VOLUME -5650,TARGETS 5640,5632,,5616,,


    THEN 5591,,5571,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



    1 comment:

    கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்