Oct 5, 2012

பங்கு வர்த்தகம் மலர் -145





நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5785.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5842.00 வரை உயர்ந்தது 5780.00 வரை கீழே சென்று 5825.70 முடிவடைந்தது.
  • ஏறக்குறைய 1 .5 ஆண்டுகளுக்கு  பிறகு சென்செக்ஸ் 19000 புள்ளிகள் என்ற  உச்சத்தை தொட்டது .
  • மத்திய அரசு மேற்கொண்டுள்ள இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நம் சந்தை உச்சத்தை நோக்கி பறந்தது .
                  
  • சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்சூரன்ஸ் துறையில் ( FDI ) அந்நிய நேரடி முதலீட்டாளர்களை 26% திலிருந்து  49 % வரை  முதலீடுகள் மேற்கொள்ள மத்திய மந்திரி சபை அனுமதித்து உள்ளது .
  • ஒய்ஊதிய துறைகளில் ( PENSION FUNDS ) 26 % வரை முதலீடுகள் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கி உள்ளது .
  • இந்த திட்டம் நீண்ட காலமாக அரசியல் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் கிடந்தது .தற்போது நிறைவேறி உள்ள இத்திட்டத்திற்கு எந்த அளவு எதிர்ப்பு மற்றும் ஆதரவு இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம் .
  • இத்திட்டங்களால் வங்கி துறை சார்ந்த பங்குகள் மேல் நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது .
                 
  • மிக மூத்த குடிமக்களாகிய ( 80 வயதிற்கு மேல் ) உள்ளவர்களுக்கு மூல வரி பிடித்தம் தொடர்பான ஆவணங்கள் அளிக்கும் சிக்கல்களிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்க வழி  வகை செய்யபட உள்ளது .
  • மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளதால் அந்நிய முதலீடுகள் நம் நாட்டில் குவிய தொடங்கி உள்ளன .இதன் தாக்கமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது நம் சந்தைக்கு மற்றும் நம் நாட்டு பொருளாதார   வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாகும் .

    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5836 STAYED ABOVE 5848 TARGETS ,,5861,,5878,5895,,

    THEN 5914,,5933,,,,,,

    SUPPORT LEVELS 5807,,5796.,,,


    SELL BELOW 5785 STAYED WITH VOLUME -5774,TARGETS 5761,5747,,5732,,


    THEN 5716,,5698,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    7 comments:

    1. ஒரே கொண்டாட்டம் தானா...?

      தகவலுக்கு நன்றி சார்...

      ReplyDelete
      Replies
      1. ஆம் தனபாலன் சார் ,நம் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தால் மிக்க சந்தோசம் .நன்றிங்க

        Delete
    2. This comment has been removed by the author.

      ReplyDelete
    3. இறுதி பாராவிற்கு மேல் ஒரே விசயத்தை ரெண்டு தடவை சொல்லிருக்கீங்க...முதலீட்டாலர்களுக்கு இரட்டிப்பு சந்தோசமா ! ?

      ReplyDelete
      Replies
      1. தவறை திருத்திக்கொள்ள உதவிய குமரன் சார் ,
        உங்களுக்கு நன்றிகள் பல ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

        Delete
    4. நடத்துங்க.....நல்லது நடந்தா சர்தான்

      ReplyDelete
      Replies
      1. வாங்க மாம்ஸ் ,வணக்கம் ,
        நல்லது நடக்கும் என்று நம்புவோம் .

        Delete

    கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்