Oct 10, 2012

பங்கு வர்த்தகம் மலர் -148




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5732.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5756.75 வரை உயர்ந்தது 5696.80 வரை கீழே சென்று 5723.90 முடிவடைந்தது.
  • IMF  -இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவிற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது ,அதாவது  4.9% மட்டுமே இந்த வருடம் இருக்கும் என்றும் ,இந்தியாவின் நிதி பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது .
  • இது தவிர ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்  என்றும் ,சீனாவின் வளர்ச்சியிலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம்  இருக்காது என்றும் தெர்வித்துள்ளது .
  • நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர தொடக்கி உள்ள இந்நிலையில் சந்தையில் ஏற்ற ,இறக்கங்கள் ,அதிக அளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன கவனம் தேவை .
  • சீனா ஏறத்தாழ சுமார் 42.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடன் பத்திரங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது .
  • GAAR- பற்றி தெளிவான மற்றும் இறுதி முடிவுகள் இன்று வெளி வரும் என்று எதிர் பார்க்கபடுகிறது .
  • GAAR-பற்றிய  முடிவுகள் பல வருடங்களாக முடிவுகள் எட்டப்படாத நிலையில் உள்ளது .இன்று என்ன நடக்க போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர் .( குறிப்பாக FII-கள்-அந்நிய முதலீட்டாளர்கள் )அந்நிய முதலீடாளர்களுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கும் என நம்பப்படுகிறது .
  • இதில் குழப்பமான நிலைபாட்டை மேற்கொண்டாலோ அல்லது முடிவுகளை எடுப்பதில் தள்ளி வைத்தாலோ சந்தை மீண்டும் தள்ளாடும் நிலைக்கு சென்று விடும் .

                 
    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5737STAYED ABOVE 5750 TARGETS ,,5760,,5774,5788,,

    THEN 5803,,5829,,,,,,

    SUPPORT LEVELS 5710,,5701.,,,


    SELL BELOW 5687 STAYED WITH VOLUME -5674,TARGETS 5657,5646,,5629,,


    THEN 5615,,5594,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    1 comment:

    1. தள்ளாடாமல் இருந்தால் சரி...

      தகவலுக்கு மிக்க நன்றி...

      ReplyDelete

    கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்