Oct 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -155




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5711.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5727.90 வரை உயர்ந்தது 5673.45 வரை கீழே சென்று 5699.30 முடிவடைந்தது.
  • வரும் 30-ம் தேதியன்று ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ள நிதி ஆய்வு கொள்கையில் வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.25% முதல் 0.50% வரை குறைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
  • தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியும் சுணக்கம் கண்டுள்ளன ,பண வீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது .
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு " சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ( SEZ ) பங்கு முக்கிய காரணமாகும் ,கடந்த பல மாதங்களாக இம்மண்டலங்களின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளன .
  • எனவே  இம்மண்டலங்களுக்கு உடனடியாக வரி சலுகைகள் வழங்க மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
  • நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பங்கு குறிப்பிடதக்க உள்ளது.
  •  சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மீண்டும் வரி சலுகைகள் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்புகள் உயரும் என்று நம்பபடுகிறது .
  •  இம்மண்டலங்களில் பங்கு சந்தையில் படியலிட்டுள்ள பல நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
  • அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டின் 3 வது காலாண்டின் 2 % மாக அதிகரித்துள்ளது ,வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகம் செலவிட்டதாலும் நுகர்வோர் செலவீனம் உயர்ந்து வருவதாலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
  • ஏப்ரல், ஜூன் மாத காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் 1.3 % கண்டிருந்தது ,3 வது காலாண்டில் வளர்ச்சி மேலும் அதிகரித்துள்ளது ,எனினும் அங்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் அளவிற்கு வளர்ச்சி வேகம் இல்லை ,எனவே பொருளாதாரம் இன்னும் பலவீனமாகவே உள்ளது என நிபுணர்கள் தேர்வித்துள்ளனர் .
                            
  • பங்கு சந்தை தொடர்பான பல மோசடி வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவு எட்டபடாமல் நாம் எல்லோரும் அறிவோம் .
  • பங்கு சந்தைகளின் மோசடிகளை விசாரிப்பதற்கு தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும் என்று " செபி "மத்திய அரசிற்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளது .
  • மோசடி நபர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும் ,கடுமையான நடவடிக்கையுமே மேலும் மோசடியில் ஈடுபடும் நபர்கள் குற்றம் செய்யாமல் இருக்க ஏதுவாகவும் ,ஏமாந்தவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும் வழிவகையாக இருக்கும் .
  • பங்கு சந்தை பட்டியலில் உள்ள நிறுவனத்தை சார்ந்தவர்கள் சுய ஆதாயத்திற்காக ,  " உள் - வர்த்தக நடவடிக்கை ஈடுபடாமல் இருக்க கடுமையான சட்ட திருத்தங்கள்  தேவை .
  • இது போன்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் நம்மிடையே இல்லாததுவும் ஒரு முக்கிய காரணமாகும் .
  • வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமெனில் இத்தகைய நிதிபதிகள் தேவை ,தனி நீதிமன்றமும் தேவை .மேற்கூறிய கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரியபடுத்தி உள்ளதாக செபி தெரிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5709 STAYED ABOVE 5726 TARGETS ,,5737,,5751,5770,,

THEN 5794,,5832,,,,,,

SUPPORT LEVELS 5687,,5675.,,,


SELL BELOW 5664 STAYED WITH VOLUME -5652,TARGETS 5640,5630,,5615,,


THEN 5581,,5560,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

5 comments:

  1. Replies
    1. நன்றிங்க தனபாலன் சார் !

      Delete
  2. Master //தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது // you havent altered this line for so long i think.. since on last trading day mkt has had a dip.. plz verify..

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்