Jul 29, 2012

பங்கு வர்த்தகம் மலர் -103


                         

நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE)  வெள்ளியன்று  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5144.45 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5179.75 வரை உயர்ந்தது 5095.50 வரை கீழே சென்று 5123.55 முடிவடைந்தது.
                   
  • ஜூலை மாதம் 15 ம் தேதி வரை நடை பெற்ற முன் பேர வர்த்தகத்தில் ( F & O ) கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு 6.5 % உயர்ந்துள்ளதாக  F.M.C ( பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிசன் )  தெரிவித்துள்ளது  .
  • மேலும் தங்கம் மற்றும் வெள்ளியில் நடை பெற்ற  முன் பேர வர்த்தகத்தில்  கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு 10 % சரிந்துள்ளது ,கச்சா எண்ணை  முன் பேர வர்த்தகத்தில் 35 % அதிகரித்துள்ளது .தாமிரம் உள்ளிட்ட உலோகத்தில்  முன் பேர வர்த்தகம் 24 % உயர்ந்துள்ளது ,வேளாண் விலை பொருட்கள் மீதான  முன் பேர வர்த்தகம் 28 % உயர்ந்துள்ளது . 
  • வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது அதே நிலையில் டெபாசிட் வளர்ச்சி குறைந்துள்ளது .
  • சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் இந்தியாவில்  உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது .மற்றும் தொழில் துறை வளர்ச்சியும் குறைந்துள்ளது .
  • நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு சென்ற 20 ம் தேதி நிறைவடைந்த வாரத்தில் ரூ .3245 கோடி    அதிகரித்துள்ளது  .அமெரிக்க டாலருக்கு எதிரான யேன்,ஸ்டேர்லிங் , யூரோ உள்ளிட்ட செலாவணியின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் நம் கையிருப்பில் உள்ள  அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது .
  • குறைந்த பருவ மழை,சரிந்து அறிவிக்கப்பட்ட  பல நிறுவனங்கள்   காலாண்டு முடிவுகள் ,பொருளாதாரத்தை மேம்படுத்த  மத்திய அரசு எந்த சீர்திருத்தமும் மேற்கொள்ளாமல்  வேடிக்கை பார்ப்பது போன்ற நம் உள்நாட்டு காரணங்களால் நம் பங்கு சந்தை வர்த்தகம் மந்த  நிலையில் உள்ளது .
  • ஐரோப்பிய நாடுகளின்  கடன் நிதி நெருக்கடியில் சரியான தீர்வு இன்னமும் எட்டப்படாததால்,உலக நட்டு வர்த்தகர்கள் கடும்  கவலையும் ,உலக நாட்டு பங்கு வர்த்தகமும் சோர்வு அடைந்துள்ளது .இதன் தாக்கம் நம் சந்தையிலும் எதிரொலிக்கிறது .
  • ஜெர்மன் நாட்டு தலைமை அதிகாரி அங்கிளா மெர்கல் மற்றும் இத்தாலியின் பிரதம மந்திரி மரியோ மொன்டி அறிவித்துள்ள அறிக்கையில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க விரைவில் தீர்வுகள் எட்டப்படும் என்று அறிவித்துள்ளனர் .
  •  திங்களன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • IFB Agro Inds.Cholamandalam Investment & Finance Company Ltd,Heritage Foods (India) Ltd,State Bank of Travancore,National Fertilizer Ltd,Future Capital Holdings Ltd,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5132 STAYED ABOVE 5143 TARGETS ,,5156 ,,5170,5185,,

THEN 5203,,5225,,

SUPPORT LEVELS 5103,,5092 .,,,


SELL BELOW 5081 STAYED WITH VOLUME -5070,TARGETS 5058,5045 ,,,,,


THEN 5024,,5005,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


4 comments:

  1. Replies
    1. தனபாலன் சார் ,
      நன்றி ,வாழ்த்துக்கள்

      Delete
  2. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. தல வணக்கம் ,
      வாங்க ! நன்றிகள் பல

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்