Jul 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -87





நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE)  சற்று சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5334.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5340.00 வரை உயர்ந்தது 5297.40 வரை கீழே சென்று 5327.20 ல் முடிவடைந்தது.



  • இந்தியாவில்  அன்னிய  நாட்டின் நேரடி முதலீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% அதிகரிக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது .
  • நம் வங்கிகளில் அன்னிய செலாவணியின் சொத்து மதிப்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது .
  • நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 - 8.5 % வளர்ச்சியடையும் என நம் நாட்டின் திட்ட கமிஷனின் துணை தலைவர் திரு .மாண்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
  • பரஸ்பர நிதி நிறுவனங்களின் சுணக்க நிலையை போக்கவும் ,ஊக்குவிக்கவும் , " செபி " ஆலோசனை மேற்கொண்டு வருகிறது மேலும் சில விதி முறை தளர்த்தவும் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது .
  •                  
  • ரூ .10 கோடிக்கு மேல் வெளியிடப்படும் புதிய பங்கு வெளியீடுகள் மின்னணு முறையில் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமும் வெளிவர உள்ளது .
  • பொது நிறுவனமான ராஷ்டிரிய இஸ்பத் நிகம் இந்த மாதம் புதிய பங்கு வெளியீடு வெளியிட உள்ளது .
  • கடந்த 4 வருடங்களாக நம் நாட்டின் இரும்பு தாது ஏற்றுமதி சரிந்து வருகிறது வரும் ஆண்டில் மேலும்  சரியும்   வாய்ப்புகள் உள்ளது .காரணம் , இரும்பு தாது ஏற்றுமதி மீது விதிக்கப்படும் சரக்கு போக்குவரத்தின் கட்டண உயர்வு ,அதிக சுங்க வரி ,போன்றவை முக்கிய காரணங்களாக திகழ்கின்றன ஆகவே நம் மத்திய அரசு கவனம் கொள்ளவேண்டும் .
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது .இதற்கு முக்கிய காரணமாக அன்னிய நிதி நிறுவனங்கள் நம் பங்கு சந்தையில் அதிகரித்துவரும் முதலீடுகளும் ,பல ஏற்றுமதியாளர்கள் டாலரின் மதிப்பு மேலும் குறையும் என்ற கண்ணோட்டத்தில் விற்று வருவதும் நம் ரூபாய் மதிப்பு உயர காரணமாக உள்ளது .
  • வரும் வாரம் முதல் இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கை வெளியாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் .



இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5335 STAYED ABOVE 5347 TARGETS ,,5360,,5375,5392,,

THEN 5406,,5425,,,

SUPPORT LEVELS 5297,,5270 .,,,


SELL BELOW 5255 STAYED WITH VOLUME -5240,TARGETS 5226, 5215, 5195,,,,,


THEN 5180,,5161,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

3 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்