Aug 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -121


                




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5412.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5414 .00 வரை உயர்ந்தது 5385.05 வரை கீழே சென்று 5402.70 முடிவடைந்தது.
  • அந்நிய முதலீட்டாளர்கள் இந்த மாதம் ரூ.6746 கோடி  ருபாய்  மதிப்புள்ள பங்குகளில் முதலீடுகள் செய்துள்ளன .
  • சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7.8 % சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 3 நிதியாண்டுகளில், சராசரியாக 11 % என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.

  • தனிநபர் வருவாய் வளர்ச்சியில் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு மிகவும் சரிவடைந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதி யாண்டில், இந்திய குடும்பங்களின் நிகர நிதி சேமிப்பு 6.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 7.13 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு நிதியாண்டுகளில், இந்திய குடும்பங்கள் மேற்கொண்ட மொத்த சேமிப்பு, 2.3 சதவீதம் பின்னடைவை கண்டு, 9.91 லட்சம் கோடியிலிருந்து, 9.69 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களிலிருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில் 39,900 கோடி ரூபாய் அளவிற்கு, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்திய குடும்பங்கள், ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மேற்கொண்ட முதலீடு, 1.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 2,23,428 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,20,734 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில்,இந்திய குடும்பங்களின் முதலீடு, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.எடுத்துக்காட்டாக,சென்ற நிதியாண்டில், வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட், 4,92,672 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 4,40,465 கோடி ரூபாயாக இருந்தது. இது,10.6 சதவீத வளர்ச்சியாகும். மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஈர்த்துள்ள டெபாசிட், 70.4 சதவீதம் அதிகரித்து, 4,392 கோடியிலிருந்து, 14,854 கோடி ரூபாயாக நல்ல அளவில் உயர்ந்து உள்ளது.

  • வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், டெபாசிட் டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. கடந்த ஓராண்டில், பெரும்பாலான வங்கிகள்,1-3 ஆண்டு டெபா சிட்டுகளுக்கான வட்டியை, 2 சதவீதம் அதிகரித்து, 9.25-9.5 சதவீதமாக உயர்த்திஉள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வங்கி சாரா நிதி நிறுவனங்களும், டெபாசிட்டிற்கான வட்டியை அதிகரித்துள்ளன. இதனால், இந்நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.சென்ற நிதி யாண்டில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களிலிருந்து,6,508 கோடி ரூபாய், முதலீட்டாளர்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டில், இவற்றில், 1,729 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டிருந்தது.இவை தவிர, சென்ற நிதியாண்டில், சேம நல நிதி மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் ஈர்த்த தொகை, 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,38,975 கோடியிலிருந்து, 1,51,612 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
    ரொக்க கையிருப்பு:அதே சமயம், இதே காலத்தில், இந்திய குடும்பங்களின் ரொக்க கையிருப்பு 25.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,37,131 கோடியிலிருந்து, 1,09,022 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்திய குடும்பங்கள் தங்கத்தில் மேற்கொள்ளும் முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வங்கிகளில் மேற்கொள்ளும் குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி சரிவடைந்து வருகிறது. உதாரணமாக, 2006-07 மற்றும் 2008-09ம் நிதி ஆண்டுகளில், 23.1 சதவீதம் என்ற அளவில் இருந்த, குறித்த கால டெபாசிட்டுகளின் வளர்ச்சி, 2009-10 மற்றும் 2011-12ம் நிதி ஆண்டுகளில் 16.7 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.        
                                       
  •  மத்திய எண்ணெய் நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக பெட்ரோல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
    சமீப காலமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்து விட்டது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எண்ணை நிறுவனங்கள் அதிகம் செலவழிக்க வேண்டியதுள்ளது.
    இந் நிலையில் மத்திய அரசின் மானியம் தாமதமானதால் எண்ணை நிறுவனங்களுக்கு வட்டி செலவினமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
    கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 22,451 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 9,249 கோடியும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு ரூ. 8,240 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இதே நிலை தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியைத் தாண்டிவிடும்.
    இதனால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு உடனடியாக ரூ. 1.37 உயர்த்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவாரத்தில் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5416 STAYED ABOVE 5430 TARGETS ,,5445 ,,5458,5474,,

THEN 5492,,5528,,

SUPPORT LEVELS 5377,,5360 .,,,


SELL BELOW 5345 STAYED WITH VOLUME -5334,TARGETS 5320,5304,,5299,,


THEN 5276,,5258,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


2 comments:

  1. விரிவான விளக்கங்கள்... நன்றி சார்...

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்