Jun 10, 2012

பங்கு வர்த்தகம் மலர் -67






நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   5009.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5079.00 வரை உயர்ந்தது 4965.00 வரை கீழே சென்று 5059.40 ல் முடிவடைந்தது.
                   

  •   பங்கு வர்த்தகம் கடந்த வாரத்தில் நன்றாகவே இருந்தது .
  • பாரத பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்கும் கட்டுமான துறையில் முதலீடு மேற்கொள்ளப்படும் என்றும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்ததால் இந்த துறை பங்குகள் மேல் நோக்கி சென்றன .மற்றும் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் சூடு பிடித்தது .
  • ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது .இந்நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது .சென்ற ஆண்டு பிப்ரவரி முதல் இது வரை ரூ .1929 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது . இருப்பினும்  இந்த பங்குகள் விலை உயரவில்லை .
  • 38 வது ஆண்டு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பால் இந்த பங்கு சற்று உயர்ந்தது .
  • RBI- 18 ம் தேதி காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் ௦௦.25 %  குறையும்  என்ற கருத்து நிலவுகிறது .அவ்வாறு நடந்தால் பங்கு வர்த்தகம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வெளி மதிப்பு உயர்ந்து வருவதும் சற்று ஆறுதலான விஷயம் .
  • ஜூன் 1 ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ .240 கோடி டாலர் சரிந்து ( சுமார் 15.87 லட்சம் கோடி ) குறைந்துள்ளது .தொடர்ந்து 5 வாரம் அந்நிய செலவாணி கையிருப்பு மதிப்பு சரிவடைந்துள்ளது என்பது கவனிக்கதக்கது .
  • இன்போசிஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ரூ .10 முக மதிப்புள்ள பங்கு ஒன்றிற்கு ரூ .22  டிவிடென்ட் அறிவித்துள்ளது ,
  • ஐ .நா. அறிவிப்பு  :-  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.7 % ஆக இருக்கும் .இது முந்தைய ஆண்டைவிட 1 % குறைவு .வளர்ச்சி குறைவிற்கு உலக பொருளாதார மந்த நிலையே காரணம் என்றும் ,ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி நடப்பு ஆண்டிலும் தொடரும் என்று  ஐ .நா. எச்சரித்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5072 STAYED ABOVE 5090 TARGETS ,,5103 ,,5118,5136,,

THEN 5157,,5171,,,

SUPPORT LEVELS 5025,,4995 .,,,


SELL BELOW 4982 STAYED WITH VOLUME -4970,TARGETS 4956,4942, 4930, ,,,,,


THEN 4920,,,4907,,,,,

                                                                                                                       


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்