Jun 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -72




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து  முடிவடைந்தது . வெள்ளியன்று   5075 .15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5156.00வரை உயர்ந்தது 5072 .80 வரை கீழே சென்று 5147 .70 ல் முடிவடைந்தது.

  • முதல் காலாண்டிற்கு   பல நிறுவனங்கள்  செலுத்தி உள்ள முன் கூட்டிய வரி அதிகரித்துள்ளது ஒரு நல்ல செய்தியாகும்  .இது நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதற்கு ஒரு சான்றாகும் .
  • தகவல் தொழில்நுட்பம் ,வங்கி மற்றும் சிமென்ட் துறை  நிறுவனங்கள் சற்று அதிக வரி செலுத்தி  உள்ளன .
  • இருப்பினும் சில  நிறுவனங்கள் கடந்த காலாண்டை விட சற்று குறைவாக செலுத்தி உள்ளன .
  •                                
  • வங்கிகளுக்கான வட்டி விகிதம் ( CRR  ) குறையும் நிலையில் , இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது .குறிப்பாக வங்கி,வாகன துறை ,ரியல் எஸ்டேட் ,கட்டுமான துறை பங்குகள் மேலே உயரும் .
  • இந்திய வங்கிகளில் அதிக  வட்டி கிடைப்பதால் வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள்   நம் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது .
  • நம் நாட்டின் அதிக ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளையும்  சார்ந்து  உள்ளது.அங்கு குழப்ப நிலை நிலவுவதால்  ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளது .
  • கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 % மாக குறைந்துள்ளது இதை சரிசெய்யும் பொருட்டு மத்திய அரசும் ,RBI-யும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
  • மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மானிய சுமை  அதிகரித்தது  ஒரு தடையாகவும் , மானிய சுமையை உள்நாட்டு உற்பத்தியில் 2 % கீழாக  1.75 % மாக குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை  90 டாலர் என்ற அளவில் இருப்பதால் ,இறக்குமதி செலவீனங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும்,இதனால் RBI அறிவிக்கும் REPO RATE  குறைய  வாய்ப்புள்ளதாகவும்  நிதி அமைச்சர் தெரிவித்தார் .
  • அமெரிக்க  டாலருக்கு   எதிரான இதர நாட்டின் செலவாணிகளின் வெளிமதிப்பு சரிந்ததை அடுத்து நம் கையிருப்பில் உள்ள  அன்னிய செலாவணி கையிருப்பு ,  மற்றும் அன்னிய செலாவணி சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் RBI அறிவித்துள்ளது .
       நாளைய சந்தை மேலே பயணிக்க வாய்ப்புள்ள காரணிகள் 
  • வங்கி வட்டி விகிதம் குறையும் எதிர்பார்ப்பு ,
  • கிரிஸ் நாட்டின் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கிரிஸ் நாடு தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் நீடித்து இருக்கும் பட்சத்தில் ,
  •  அந்நிய நிதி நிறுவங்கள் நம் நாட்டில் அதிக முதலீடு செய்யும் பட்சத்தில்  சந்தை நன்றாக இருக்கும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5160 STAYED ABOVE 5174 TARGETS ,,5192 ,,5216,5228,,

THEN 5252,,5274,,,

SUPPORT LEVELS 5121,,5090 .,,,


SELL BELOW 5080 STAYED WITH VOLUME -5068,TARGETS 5058, 5046,5035,,,,,


THEN 5020,,5002,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்