Nov 17, 2009

ஊட்டி நிலச்சரிவு கோர தாண்டவம் ஏன்?

எழில் அரசியின் அழகிய காட்சி


ந்த கொடிய சீற்றம் இயற்கையின் சதி என்று கூறுவதா இல்லை. பணத்தாசையால் ஏற்பட்ட ஆபத்தா.?

பேராசையால் நேர்ந்த ஆபத்து
படம் நன்றி :தினமலர் நாளிதழ்
ழகிய காடுகளாகவும் ,பசுமை மரங்களுமாக இருந்த மலை அரசியை சிறு சிறு துண்டுகளாக கூறு போட்டு சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் ,பணக்காரர்களின் ஆடம்பர பூமியாகவும் ,காடுகளை அழித்து தோட்டங்களாகவும் ,விடுதிகளின் பணம் முட்டை இடும் வாத்தாகவும், ஊட்டி மாறியதின் விளைவு தான் இந்த பேராபத்து .நில மண் அரிப்பை தடுக்கும் மரங்களை ,காடுகளை வெட்டி எஸ்டேட் என்ற பெயரிலும் ,ஏராளமான ஹோட்டல்களும் ,வீடுகளும் ,காட்டை அழித்து சாலைகளுமாக மாற்றியதன் விளைவு தான் இந்த பேராபத்து.

குற்றவாளிகளா ? யார் காரணம்?

ஏற்கனவே பல முறை இந்திய ஆய்வு துறை ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட இருக்கும் ஆபத்தை பல முறை அறிவித்து இருக்கிறது .ஆனால் இதை யாரும் காது கொடுத்து கேட்டதாய் தெரியவில்லை .
1) பேராசை பிடித்த சில மனிதர்கள்
2) பணத்தாசை கொண்ட சில வக்ர அதிகாரிகள்
3) (மரியாதைக்குரிய ) சில அரசியல்வாதிகள்
4 ) மனசாட்சியற்ற சில ______ துறைகள்
5 ) மனசாட்சியற்ற சில குத்தகைதாரர்கள்
6 ) பல ஆண்டுகளாக குற்றங்களை கண்டும் காணாமலும் விட்ட அரசுகள்

அரசிற்கு சில வேண்டுகோள்கள்
  • ஆபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க மற்றும் உணவு ,அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்துதல்
  • ஆபத்து மீட்பு நடவடிக்கைள் வேக படுத்த மேலும் அதிக ஆட்களை ஈடுபடுத்தவும்
ராணுவத்தின் உதவி மற்றும் மத்திய அரசின் உதவியை கோரிக்கை
  • வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களை நியமித்தல் .
கண்ணீர் அஞ்சலி

இந்த பேராபத்தில் சிக்கி இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கு என் சார்பிலும் ,இந்த அதிர்வை படிக்கும் அன்பு நெஞ்சங்கள் சார்பிலும்,என் நண்பர்கள் சார்பிலும்,எல்லா நல்ல உள்ளங்கள் கொண்ட மக்கள் சார்பிலும் ,இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம் .எங்கள் கண்ணீரை அஞ்சலியாக காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்
மீளா துயரில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கிறோம்.


மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும், பாடுபடும் ,அனைவர்க்கும் கோடான கோடி நன்றிகள் பல .

Nov 8, 2009

முதியவர்கள் மேல் கோபம்


முதுமை என்பது தவிர்க்க இயலாத ஒன்று .இறப்பு என்பதும் தவிர்க்க இயலாத ஒன்று.ஆனால் முதுமையில் தற்கால முதியவர்கள் படும்பாடு காண இயலாத ஒன்றாக உள்ளது .இன்றைய பிள்ளைகள் பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து பலர் தவறி வருகின்றனர் .இதற்கு உதாரணம் பெருகி வரும் வர்த்தக மற்றும் சமுக நல முதுமை காப்பகங்கள்.மற்றும் முதுமை காரண தற்கொலைகள் அடிக்கடி பத்திரிகை செய்திகளில் காண நேர்கிறது .
முதியவர்களை பார்த்துக்கொள்வது என்பது சற்று கடினம் ஏனென்றால் அவர்களது உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ,ஒத்துழையாமை .அதற்கு நமக்கு தேவை மிக மிக பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை .பொதுவாக இளையவர்கள் (சிலர்) திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தவுடன் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று தனியாக சென்று விடுகின்றனர் .இதற்காக தான் பெற்றோர் தோளிலும்,மார்பிலும் ,சுமந்தார்களா !!!!!!

எனக்கும் என் நபருக்கும் கடந்த வாரம் நடை பெற்ற ஒரு உரையாடல் :

நான் :என்ன நண்பரே நலமா ?
நண்பர்:நலம் நீங்க எப்படி இருக்கீங்க ?
நான்: நானும் நலம் .
நண்பர்:நான் தனியாக வீடு பார்த்து இருக்கேங்க
(நண்பரை பற்றிய சிறு தகவல் அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை உடன் பிறந்தோர் யாரும் இல்லை .நண்பரின் பெற்றோர் எழுபதை கடந்தவர்கள் ,அதிலும் நண்பரின் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு விபத்தில் முதுகெலும்பு உடைந்து சிகிச்சை பெறுபவர் .இனிமேல் நண்பரின் தந்தை தான் அவரால் முடிந்தோ ,முடியாமலோ அவர் உழைத்து தான் அவர் குடும்பம் நடத்த வேண்டும் .அதுவும் அவர் தினசரி கூலி தொழிலாளி.)
நான் :(அதிர்ச்சியுடன்)என்னங்க உங்க அப்பா ,அம்மாவை ,யார் பார்த்துக்குவாங்க
நண்பர் :அப்பா அம்மாவ பார்த்துக்குவாங்க, அம்மா அப்பாவ பார்த்துக்குவாங்க

நான்:என்னங்க இந்த வயசான காலத்துல தனியா எப்படிங்க வாழமுடியும் !
நண்பர்:என்னங்க புரியாம பேசறிங்க. நான் என் குடும்பத்தை பார்க்க வேண்டாமா .அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது .என் வாழ்க்கை நான் வாழவேண்டாமா .அவர்களை பார்த்தால் போதுமா .என்ன ஒரு மாதத்திற்கு ஒரு முறை அவர்களை பார்த்து விட்டு வந்தால் போயிற்று .
நான்:(கனத்த மனதுடன் ) பெற்றோரை பார்த்துகொள்ளுங்கள் என்ற கேள்வியே தவறோ என்ற மன பாரத்துடன் விடைபெற்றேன் .

இப்போது சொல்லுங்கள் சமுதாயம் எங்கு செல்கிறது என்று .இந்த பதிவில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரை தாய் ,தந்தைக்கும் மேல் தாங்கள் விரும்பும் குழந்தைகளாக ஏற்றுகொள்ளும் மனபக்குவம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .
இந்த பதிவில் நான் யாரையும் குறிப்பிட்டோ ,புண்படுத்தவோ எழுதவில்லை .என் மனதில் உள்ள ஆதங்க பதிவு.
முதியவர்களை காப்போம் !
இயன்ற உதவி செய்வோம் !

Oct 19, 2009

மீனவ நண்பர்களின் அவல நிலைவணக்கம் ,
நமது மீனவ நண்பர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவதும் கொல்லபடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது .கடந்த தீபாவளி அன்று கடலுக்குள் சென்ற நமது மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கபட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியா இலங்கை அரசுக்கு ஈழ தமிழர் பகுதிகள் மேம்படுத்தவும், ஈழ தமிழர் உதவிக்கு என்று கூறி ரூ.500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது.இந்த நிதி உதவி சரியான முறையில் ஈழ தமிழர்களுக்கு சென்றடைகிறதா ?என்று ஒரு கேள்வி அடுத்து தொடர்கதையாக நடத்த பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் இலங்கை , இன்னொரு பக்கம் பங்களாதேஷ் ,இப்படி எல்லா பக்கமும் அடி வாங்குகிறோம் .இதற்கு பதிலாக நமது மதிப்பிற்குரிய பிரதமர் ஐயாவோ அல்லது மதிப்பிற்குரிய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரோ பத்திரிகை மற்றும் தொலைகாட்சியில் "இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது இந்தியா இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது "என்கின்ற அறிக்கை மட்டும் காணலாம் .இந்நிலைமை என்று மாறும் ??????????
http://www.newkerala.com/nkfullnews-1-133360.html

Apr 3, 2009

வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு


சாலையின் நிறம் சிவப்பு
பெருகி வரும் வாகனங்களும் ,ஆனால் அதை விட பெருகி வரும் வாகன விபத்துகளும் நெஞ்சில் தினம் ஈட்டி போல் பாய்கிறது .ஏன் இந்த அவசரம்,யாருக்காக அவசரம் ,அவசரத்தினால் நாம் செல்லும் இலக்கை அடைவோமா என்பது கேள்விகுறி ???? வாகன ஓட்டிகள் குறிப்பாக லாரி ,பஸ்,வேன்,ஓட்டுனர்கள் பலர் வாகனம் ஓட்டும்போது தாறுமாராக ஓட்டுகிறார்கள்.கன ரக வாகனமா அல்லது எம வாகனமா என்பது புரியவில்லை .வாகன ஒட்டுனர்களுக்கும் குடும்பம் ,மனைவி ,குழந்தைகள் ,இருப்பார்கள் அல்லவா .அவர்களும் அதே சாலையில் நடக்க கூடும் .அவர்களும் அதே விபத்து நேர வாய்ப்பு உள்ளது அல்லவா .அதை மனதில் வைத்து எதிரில் உள்ளவர்கள் நமது சகோதரர்கள் ,நமது குடும்பத்தினர் ,என்று வாகனம் ஓடினால் சாலை விபத்து குறைய வாய்ப்பு உள்ளது .
ஒட்டுனர்களுக்கு ஒரு அஜாக்கிரதை உண்டு அதாவது விபத்து நேர்ந்தாலும் ஒன்று கடுமையான சட்டங்கள் இல்லை .இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பிடு தொகை வழங்கி விடும் ,சட்டங்கள் மிக கடுமையாக்க படவேண்டும் .லைசென்ஸ் நிரந்தர ரத்து ,கடும் சிறை தண்டனை வழங்க படவேண்டும் .
இன்றைய காலகட்டதில் ஒருவர் வீட்டை விட்டு சென்று திரும்ப வரும் வரை உறுதி இல்லாத நிலை உள்ளது.எனவே சாலை உபயோகிப்போர் எல்லோரும் எச்சரிக்கை உணர்வுடன்,பாதுகாப்பாக உபயோகிக்கவும்.


Tamilish

Mar 31, 2009

வங்கி துறையினருக்கு ஒரு வேண்டுகோள்


கடந்த ஞாயிறு அன்று எனது நண்பரின் பர்சு சென்னையில் திருடப்பட்டு விட்டது .அதில் SBI
வங்கியின் டெபிட் கார்டு இருந்தது .அவருடைய கணக்கில் பணம் இருந்ததால் திருடர்கள் அந்த கார்டை உபயோகித்து பணம் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் அந்த கார்டில் குறிப்பிடபட்டு இருத்த இரு தொலைப்பேசிகலையும் தொடர்பு கொண்ட போது இரண்டும் உபயோகத்தில் இல்லை .கோவை மெயின் SBI தொடர்பு கொண்ட வங்கி காவலாளி மட்டும் இருந்தார் .அவர் இன்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாது .திங்கள்கிழமை தான் எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிட்டார் .எனவே வங்கிகள் விடுமுறை நாட்களில் தக்க அதிகாரிகளில் ஒருவரையோ அல்லது தக்க காவல் துறை அதிகாரிகளிடம் வங்கி கணக்கை முடக்கும் பொறுப்பை ஒப்படைத்து செல்லவேண்டும் .இது பொது மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் .அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???????

Mar 23, 2009

புதிய பதிவு குழந்தை


கொங்கு கோவையில் இருந்து தவழும் முதல் தவழல்