Jan 24, 2014

புலிக்கு என் கவிதாஞ்சலி




ஊட்டியில் கடந்த 20 நாட்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டை இறுதியில் புலியின் மரணத்தில் நிறைவுற்றது .

புலியை சுட்டு கொள்ளப்பட்டது சரியா ? தவறா ? என்ற விவாதங்களும் ,வாதங்களுக்கும் மத்தியில் காடுகளை அழித்து வன விலங்குகளின் வாழ்விடத்தை கைப்பற்றியதன் பின் விளைவே இது போன்ற வன விலங்குகளின் உயிர் மாய்ப்பு.இத்தனைக்கும் காடுகளை அழித்த பேராசை பிடித்த மனிதனே பொறுப்பாவான்.அரசு காடுகளை காக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் . 

இறந்த நம் தேசிய சின்னமான புலியிற்க்கு நெஞ்சார்ந்த அனுதாபங்களும் ,இரங்கலுக்கும் ,அர்பணிக்கிறேன் .

 இறந்த நம் தேசிய சின்னமான புலியிற்க்கு என் கவிதாஞ்சலி !

காடுகளை காப்போம் ! வன விலங்குகளை காப்போம் !

தொலைந்த காடு
காடுகள் பரந்து விரிந்த சிறகுகளாய் !
தொலைகின்ற தூரம் ,
வானம் தொட்ட மரங்கள் ,
விழுந்து பரந்த விழுதுகள் ,
கனிகின்ற காய்கள்  !
பறவைகள் சுவைத்த கனிகள் ,
விரிகின்ற மலர்கள் ,
தேன் சுவைத்த வண்ணத்து பூச்சிகள்,
தலைமை வகித்த சிங்கங்கள் ,
பாய்கின்ற புலிகள் ,
பரிகசிக்கும் நரிகள் ,
துள்ளி பாயும் மான்கள் ,
நர்த்தனமாடும் மயில்கள் ,
ராகம் பாடும் பறவைகள் ,
நாங்கள் வளர்ந்த காடு !

மனிதன் வளர நாங்கள் அழிந்து ,
தந்தோம் நகரங்களை !
நெஞ்சை பிளந்து , சதுரங்களாய் ,
கட்டிடம் கட்டின ,ஆசிரமங்களும் ,
கல்லூரிகளும் ,வீடுகளும் !

காடுகள் மனிதனின் தோழனாய் ,
மனிதனோ காடுகளின் எமனாய் !
காடுகள் அளித்த பரிசுக்கு,
மனிதன் அளித்த பரிசு காடுகள் அழிப்பு !

மலையரசியிடம் குண்டுகள் பாய்ந்து ,
வீழ்ந்தது தேசிய விலங்கு   புலி அல்ல !
எங்களை அழித்து வீழ்ந்தது ,
மானிட சமுதாயமான ,

நீ !!!!!!!!!!!!!!!
கோவை சக்தி