Apr 3, 2011

மசினகுடி -ஒரு திகில் பயணம்கடந்த வெள்ளி அன்று விடியலின் கொஞ்சும் உதயத்துடன் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து ஊட்டி மழை அன்னையின் மடியில் தவழ இரு வாகனத்தில் பயணித்தோம் .செல்லும் வழியில் மேட்டுபாளையம் சாலை புகை மண்டலத்தை பல இருமல்களை தாண்டி மழை அரசியின் பாதமான கல்லார் அடைந்தோம் .

(என் புதல்வன் அவர் மாமாவுடன் உற்சாகமாக )

சற்று நேர ஓய்வுக்கு பின் மீண்டும் எங்கள் வாகனம் எங்களை சுமந்து வேகமான மூச்சு இரைச்சலுடன் மேல் நோக்கி பயணித்தது .செல்லும் வழியில் பள்ளத்தாக்குகளை ரசித்துகொண்டே மதியம் ஊட்டி சென்றடைந்தோம் எங்கள் வருகையை வரவேற்கும் விதமாக மேகங்கள் கறுத்து மழையை எங்கள் மேல் பொழிய இடிகளால் மிரட்டிகொண்டிருந்தது.குளிருந்த காற்றும்,பனிபோலிவும் எங்கள் மேல் படர்ந்து நனைத்துகொண்டிருந்தது.


சேரிங் கிராஸ் பகுதியில் இருந்து 1 கி .மீ தூரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தோம் .அங்கு முகம மலர்ந்த சிரிப்புடன் வனத்துறை அதிகாரி உயர்திரு .ஹாலன் அன்புடன் வரவேற்றார் .ஐயா அவர்கள் மிக்க கனிவான ,அன்பாக எங்களை உபசரித்தார் .நாங்கள் தங்க இருக்கும் மசினகுடி அபயாரண்யம் விடுதியின் ரசிதுகளை பெற்றுக்கொண்டு விடைபெற தயாரானோம் .

முக்கிய குறிப்பாக நாங்கள் மசினகுடி செல்ல இருக்கும் தலைகுந்தா ,கல்லட்டி ,பாதை மிக பயங்கரமான பள்ளத்தாக்கு என்றும் சரிவான பாதை என்றும் வாகனத்தை முதல் அல்லது இரண்டாம் கியரில் செல்ல எச்சரிக்கப்பட்டோம் .

எங்கள் வாகனங்கள் சந்தோசத்துடன் மழை சரிவை நோக்கி அதிக பட்ச எச்சரிகையுடன் மெதுவாக சரிந்துகொண்டு சென்றது .100 மீ இடைவெளியில் பல எச்சரிக்கை பலகைகள் (கவனமாக செல்லவும் ,மிக சரிவான ,ஆபத்தான பள்ளத்தாக்கு ,விபத்து பகுதி ,) என்று நம்மை எச்சரித்தன .36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி மசினகுடி கிராமத்தை அடைந்தோம் .

மிகுந்த திகில் மற்றும் ஆபத்து எங்கள் எதிரே மசினகுடி காட்டில் ஒளிந்து காத்திருப்பது அறியாமல் நாங்கள் சந்தோசத்துடன் சிரித்துகொண்டிருந்தோம்
அப்பா நான் ரெடி

நானும் ரெடி ஜூட்

தொடரும் .....,

17 comments:

 1. pls gv me ur contact no in my mail., coz., talk about this tour matter

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே ,
  கோவை சக்தி -9894014145
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
  Replies
  1. hi sir...know me...im chandrakumar sir friend...rajesh...i already spoked with u..do u remember?

   Delete
 3. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்....

  ReplyDelete
 4. மாஸ்டர் முழுசா 2 நிமிஷம் கூட இல்ல. தடால்னு தொடரும் போட்டுடீங்க. Waiting for ur next Article. சீக்கிரம் பதிவிடவும்.

  ReplyDelete
 5. வணக்கம் ஜீவா ,
  நலமா ?தங்கள் முதல் வருகைக்கு நன்றி .அடுத்த பதிவு விரைவில் எதிர்பாருங்கள் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 6. வாங்க சிம்பா ,
  நலமா ?.அடுத்த பதிவு விரைவில் எழுதுகிறேன் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 7. டிவி தொடர் ஏதும் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கின்றீர்களா, டைட்டில் கார்ட் போட்டதுமே தொடரும் என்று போட்டுவிட்டீர்களே...தொடருங்கள்...தொடர்கின்றோம்பயணங்கள்..படங்கள் அருமை..
  வாழ்க வளமுடன்.
  வேல்ன.

  ReplyDelete
 8. மாஸ்டர் முழுசா 2 நிமிஷம் கூட இல்ல. தடால்னு தொடரும் போட்டுடீங்க. nice na.....

  ReplyDelete
 9. அன்புள்ள வேலன் அண்ணா வா..........ங்க, வா................ங்க .,
  எல்லாம் ஒரு ஸ்டார்டிங் தான் அண்ணா ,எப்படி இருக்கு திகில் தொடர் ?அப்போ நேர்ல அனுபவிச்ச எனக்கு எப்படி இருந்து இருக்கும் .!!!!!!!!
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 10. சந்த்ரன்னா வணக்கம் ,
  விரைவில் அடுத்த நியூ ரிலிஸ் ரெடி .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 11. Ennanga thirumba replay va?

  ReplyDelete
 12. interesting we r heading to thr next week, via ooty to masinagudi.. how long time it will take frm ooty to masinagudi on a car!!? if we know it would b really use full for us.!

  ReplyDelete
 13. Fine travelogue... but concluded succinctly...

  ReplyDelete
 14. commentators may visit my blog also regarding Masinagudi
  Pay a visit to www.sattaparvai.blogspot.com
  Thank you,
  Advocate Jayarajan..

  ReplyDelete
 15. அருமை! மசினகுடி பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்