Nov 8, 2009

முதியவர்கள் மேல் கோபம்


முதுமை என்பது தவிர்க்க இயலாத ஒன்று .இறப்பு என்பதும் தவிர்க்க இயலாத ஒன்று.ஆனால் முதுமையில் தற்கால முதியவர்கள் படும்பாடு காண இயலாத ஒன்றாக உள்ளது .இன்றைய பிள்ளைகள் பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து பலர் தவறி வருகின்றனர் .இதற்கு உதாரணம் பெருகி வரும் வர்த்தக மற்றும் சமுக நல முதுமை காப்பகங்கள்.மற்றும் முதுமை காரண தற்கொலைகள் அடிக்கடி பத்திரிகை செய்திகளில் காண நேர்கிறது .
முதியவர்களை பார்த்துக்கொள்வது என்பது சற்று கடினம் ஏனென்றால் அவர்களது உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ,ஒத்துழையாமை .அதற்கு நமக்கு தேவை மிக மிக பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை .பொதுவாக இளையவர்கள் (சிலர்) திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்தவுடன் தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று தனியாக சென்று விடுகின்றனர் .இதற்காக தான் பெற்றோர் தோளிலும்,மார்பிலும் ,சுமந்தார்களா !!!!!!

எனக்கும் என் நபருக்கும் கடந்த வாரம் நடை பெற்ற ஒரு உரையாடல் :

நான் :என்ன நண்பரே நலமா ?
நண்பர்:நலம் நீங்க எப்படி இருக்கீங்க ?
நான்: நானும் நலம் .
நண்பர்:நான் தனியாக வீடு பார்த்து இருக்கேங்க
(நண்பரை பற்றிய சிறு தகவல் அவர் வீட்டிற்கு ஒரே பிள்ளை உடன் பிறந்தோர் யாரும் இல்லை .நண்பரின் பெற்றோர் எழுபதை கடந்தவர்கள் ,அதிலும் நண்பரின் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு விபத்தில் முதுகெலும்பு உடைந்து சிகிச்சை பெறுபவர் .இனிமேல் நண்பரின் தந்தை தான் அவரால் முடிந்தோ ,முடியாமலோ அவர் உழைத்து தான் அவர் குடும்பம் நடத்த வேண்டும் .அதுவும் அவர் தினசரி கூலி தொழிலாளி.)
நான் :(அதிர்ச்சியுடன்)என்னங்க உங்க அப்பா ,அம்மாவை ,யார் பார்த்துக்குவாங்க
நண்பர் :அப்பா அம்மாவ பார்த்துக்குவாங்க, அம்மா அப்பாவ பார்த்துக்குவாங்க

நான்:என்னங்க இந்த வயசான காலத்துல தனியா எப்படிங்க வாழமுடியும் !
நண்பர்:என்னங்க புரியாம பேசறிங்க. நான் என் குடும்பத்தை பார்க்க வேண்டாமா .அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது .என் வாழ்க்கை நான் வாழவேண்டாமா .அவர்களை பார்த்தால் போதுமா .என்ன ஒரு மாதத்திற்கு ஒரு முறை அவர்களை பார்த்து விட்டு வந்தால் போயிற்று .
நான்:(கனத்த மனதுடன் ) பெற்றோரை பார்த்துகொள்ளுங்கள் என்ற கேள்வியே தவறோ என்ற மன பாரத்துடன் விடைபெற்றேன் .

இப்போது சொல்லுங்கள் சமுதாயம் எங்கு செல்கிறது என்று .இந்த பதிவில் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களது பெற்றோரை தாய் ,தந்தைக்கும் மேல் தாங்கள் விரும்பும் குழந்தைகளாக ஏற்றுகொள்ளும் மனபக்குவம் வளர்த்துக்கொள்ள வேண்டும் .
இந்த பதிவில் நான் யாரையும் குறிப்பிட்டோ ,புண்படுத்தவோ எழுதவில்லை .என் மனதில் உள்ள ஆதங்க பதிவு.
முதியவர்களை காப்போம் !
இயன்ற உதவி செய்வோம் !

6 comments:

 1. அருமையான ...! அவசியமான பதிவு....!

  ReplyDelete
 2. அன்புள்ள ஜீவன் ,
  உங்கள் வருகைக்கும் ,பின்னுடதிற்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 3. dear sakthi,
  congrats,Your article is very nice.and write this good articles without gap.

  ReplyDelete
 4. பாசம்மிக்க சந்திரண்ணா ,
  உங்கள் வருகைக்கும் & பாராட்டுகளுக்கும் நன்றி .இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

  ReplyDelete
 5. நல்ல பதிவு மாஸ்டர். இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். அதனை உணர்ந்தால் இது பெரிதும் தவிர்க்கப்படும்.

  என்னை கேட்டால் மேலை நாடுகளில் உள்ளது போல், source of income ஒன்று எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்படி ஆனால் முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா விரைவில் கிடைக்கும்.

  ReplyDelete
 6. வணக்கம் சிம்பா,
  வருகைக்கு மகிழ்ச்சி .நீங்கள் கூறுவது சரி source of income என்று ஒன்று இருந்தாலும் .இயலாத முதுமையில் மனிதாபமுடன் கைதாங்களும் சக மனித உதவியும் மட்டுமே தேவை .சில நல்ல உள்ளங்கள் தவிர நீங்கள் கூறுவது போல் மனித உதவியும் பணம் கொண்டு மட்டுமே விலைக்கு வாங்க வேண்டிய கீழ் தர நிலையில் உள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை .கருத்துக்கு நன்றி நண்பா,,,,,

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்