Nov 17, 2012

மடிந்ததோ மனித நேயம் ?



                             

மடிந்ததோ மனித நேயம் ?

கை கொடுத்த ஈர நெஞ்சம் அமைப்பு 

மனிதனை சக மனிதனாய் பார்க்கும் நிலை மாறி வருகிறது .மனிதனிடம் பணம் இல்லாவிட்டால் அவன் குப்பைக்கு சமமோ ?

உயிர் காக்கும் மருத்துவர்களே உங்களை தெய்வமாக பார்க்கிறோம் நாங்கள் .அரசு மருத்துவமனைகளில் பணமற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களே சிகிச்சைக்கு வருகிறார்கள் .தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து லட்ச கணக்கில் பணம் செலவு செய்ய இயலாத நிலையில் அரசு மருத்துவமனைகளை தேடி  சிகிச்சை பெற வருகிறார்கள் மக்கள் .

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும்  சில மருத்துவர்கள் தன்னிடம் தனியாக பார்க்கும் நோயாளிகளுக்கும்  , அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பாரபட்சம் பார்ப்பதாகவும் , மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது .

ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இந்த தராதர வித்தியாசம் ? ஏன் இந்த பிரிவினை ? பணம் படைத்தவன் மட்டுமே மனிதனா ?

இந்நிலை முற்றிலும் அகற்றப்படவேண்டும் .

கோவையில் இன்று நடந்த ஒரு சம்பவம் :

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு சிறுநீரகமும் இழந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு . தீரன் சிங் என்ற நோயாளி ஆதரவு யாருமற்ற நிலையில் மனிதாபம் இல்லாமல்  தனது மனைவியான திருமதி .லட்சுமியுடன்  அதிரடியாக சிறுநீரக பையும் அகற்றபடாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற்றபட்ட நிலையில்,

சிலர்  ஆட்டோவிற்க்கு பணம் தந்து உதவ அந்த ஆட்டோ நண்பரோ ரத்தினபுரியில் அனாதையாக இறக்கிவிட்டு செல்ல அந்த நோயாளி மற்றும் அவரது மனைவி இருவரும் இரவு முழுவதும் கடும் குளிரில் பனியில் நடுங்கியபடி இரவை  கழித்துள்ளார்கள் .இந்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .


நல்லெண்ணம் கொண்ட சிலர் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு ( 98433 44991 ) எண்ணில் தொடர்பு கொண்டு ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் அவர்களிடம்  விஷயத்தை தெரிவிக்க அவர் உடனடியாக திரு . தீரன் சிங்கை மீட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து மேல் சிகிச்சை மேற்கொள்ள  நடவடிக்கை மேற்கொண்டார் .

இந்த செய்தி கோவை மாலை நாளிதழ்களிலும் , தொலைகாட்சி செய்திகளிலும் வெளியானது . வலைதளங்களிலும் வெளியானது .


நன்றி : தமிழ் முரசு நாளிதழ் 








ஈர நெஞ்சம் அமைப்பிற்க்கும் ,  ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் ,மற்றும் சம்பவ தகவல் தெரிவித்த நல்லெண்ணம் கொண்ட நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் .






6 comments:

  1. திரு மகேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ஈர நெஞ்சம் மகேந்திரன் சார் பணி சிறக்க வாழ்த்துவோம் !

      Delete
  2. மகேந்திரன் அவர்களின் தொடர்ந்த
    மக்கள் சேவையால் மனம் பெருமை கொள்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ,பாராட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார் .
      சுயநலம் பாராமல் உதவும் மகேந்திரன் சார் ,எல்லோருக்கும் ஒரு முன் மாதிரி மனிதர் .நாம் அவரை நினைத்து பெருமை கொள்ளலாம் மட்டுமன்றி நாமும் பிறருக்கு உதவ முன் வருவோம் !

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்