Apr 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -43

நண்பர்களே வணக்கம் ,

தேசிய MAY NIFTY (FUTURE) 5216.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5240 .00வரை உயர்ந்தது 5215 .00 வரை கீழே சென்று 5232 .20ல் முடிவடைந்தது.
  • சந்தையில் மனோரீதியாக GAAR -ன் குழப்பம் இன்னும் தெளிவாகாத நிலையில் FII'S இன்னும் நமது சந்தையில் முதலீடு செய்ய தயக்கத்தில் உள்ளனர் .
  • FII'S ன் முதலீடுகள் நமது சந்தையில் வராத வரை சந்தை மந்தமாகவும் ,பக்கவாட்டு நகர்வுகளையும் எதிர்பார்கிறோம் .


  • ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை ,பணவீக்கம் அதிகரிப்பு , மற்றும் வங்கிகளின் வாரா கடன் உயர்வு போன்ற நெருக்கடிகளின் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் நிலையற்ற தன்மை காணப்படுகிறது .இதன் பிரதிபலிப்பு உலக சந்தைகள் மற்றும் நம் சந்தைகளில் காணப்படுகிறது .
  • ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் ,கிரீஸ் நாடுகளில் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கப்படுகிறது அதுவும் ஒரு முக்கிய காரணியாகும் .  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5242 STAYED ABOVE 5255 TARGETS 5269,,5289 ,,5307,,,

  THEN 5329,,5355 ,,,  SUPPORT LEVELS 5210,,5174,,.  SELL BELOW 5171 STAYED WITH VOLUME -5160,TARGETS 5142,

  5127,5112 ,,,,,


  THEN 5101,,5090,,


  சந்தை வரும் செவ்வாய்கிழமை ( 1/5/2012 ) அன்று மகாராஷ்டிரா தினம் மற்றும் தொழிலாளர் தினம் முன்னிட்டு விடுமுறை  இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 29, 2012

  தந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் !--மறு பதிப்பு !!!!


  இன்று தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி--அவரின் நினைவும் பிரிவிலும் மீளாமல் கண்ணீர் மலர்களால் சமர்பிக்கும் கவிதாஞ்சலி

  அப்பா !

  அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
  வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
  மலராய் சமர்ப்பிக்கிறேன் !
  நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
  மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
  வாழ்ந்த தந்தையே !
  உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!

  ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
  வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
  நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
  என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .

  நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
  நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
  உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
  நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
  அனேக விசயங்களை என் தோழனாய்
  என் தோள்மீது
  கை போட்டு கற்றுகொடுத்த
  தந்தை எனும்
  என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .

  காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
  உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
  என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
  இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
  ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
  ஒரு நாளும்
  நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

  என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
  நடை பயில கற்று கொடுத்த கைகளை !
  என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
  குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
  குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !

  ஒளி நட்
  த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
  இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
  அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
  பூமி உருண்டை
  என் கால்களை விட்டு விலகி சென்றது !
  மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
  பெற்றுகொண்டபோது என் மனம்
  எரிமலையாய் அக்னி
  பிழம்பாய்
  வெடித்து சிதறியது .என்னை மன்னிப்பீர்களா தந்தையே ! வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
  என்னை மன்னிக்கவும் ,
  என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
  என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
  தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,

  இக்கவிதையின் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும்
  கடலின் அலைகள் போல ஒவ்வொரு வருடமும்
  மனதில் அலைகளால் ஒலித்துகொண்டுள்ளன .

  தந்தையே என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன் ,
  எல்லோரும் ,,,,,,,,,,,,,,,

  Apr 28, 2012

  பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-3  zwani.com myspace graphic comments


  நண்பர்களே வணக்கம் ,

  இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய

  முடிவுகள் இதோ :

  பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்.
  உங்கள் நல் ஆதரவும் ,தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


  உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .

  நன்றி


  Apr 27, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -42

  நண்பர்களே வணக்கம் ,


  தேசிய MAY NIFTY (FUTURE) 5223.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5246 .30வரை உயர்ந்தது 5206 .55வரை கீழே சென்று 5214 .70ல் முடிவடைந்தது.

  • இன்று மே மாத ஊக வணிக ஆரம்ப நாள் .
  • S & P நிறுவனம் இந்தியாவின் நீண்டகால முதலீட்டின் தர வரிசையை " BBB- " என்று தாழ்த்தி அறிவித்தது .ஆனால் மூடிஸ் தர குறியீட்டு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியில் எந்தவித மாற்றமும் இல்லை சீராக உள்ளது என்று அறிவித்துள்ளது .
  • நேற்று இந்த மாத EXPIRY ஆனதால் மிக குறுகிய எல்லைக்குள் வர்த்தகம் நடந்தது .

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5228 STAYED ABOVE 5241 TARGETS 5264,,5277 ,,5290,,,

  THEN 5312,,5324 ,,,

  SUPPORT LEVELS 5182,,5155,,.


  SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5140,TARGETS 5126, 5108,5090 ,,,,,


  THEN 5074,,,,  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 26, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -41  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5220 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5235 .40வரை உயர்ந்தது 5153 .40வரை கீழே சென்று 5198 .60ல் முடிவடைந்தது.

  நேற்று S & P நிறுவனம் இந்தியாவின் நீண்டகால முதலீட்டின் தர வரிசையை
  " BBB- " என்று தாழ்த்தி அறிவிக்க பட்டதன் காரணமாக சந்தை சரிவை சந்தித்தது .


  இன்று இந்த மாத EXPIRY ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தம் புரியவும் .இன்று OPERATORS கையில் சந்தை இருக்கும் வைப்பு உள்ளது .
  முடிந்த வரை வேடிக்கை பார்ப்பது சால சிறந்தது .

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5216 STAYED ABOVE 5228 TARGETS 5246,,5260 ,,5281,,,

  THEN 5301,,5316 ,,,

  SUPPORT LEVELS 5160,,5132.


  SELL BELOW 5122 STAYED WITH VOLUME -5108,TARGETS 5086, 5071,5053 ,,,,,

  THEN 5030,,5015,,,,


  DISCLAIMER :

  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 25, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -40
  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5199.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5238.90 வரை உயர்ந்தது 5186 .20 வரை கீழே சென்று 5224 .35 ல் முடிவடைந்தது.

  • தகவல் தொழில் நுட்ப துறை பங்குகளில் இன்று சிறப்பான வர்த்தம் நடந்தது .
  • TCS நிறுவனத்தின் வரவேற்கத்தக்க முடிவுகள் வெளியானதால் இந்நிறுவனம் 12 % தொட்டது .
  • உலோக துறை சார்ந்த பங்குகள் சீனாவின் '' FLASH " PMI DATA சாதகமாக வெளியிட்டதினால் உலோக துறை சார்ந்த பங்குகள் அதிகம் வாங்கினர் .
  • 2 G ஸ்பெக்ட்ரம் தொடர்பான டெலிகாம் ரெகுலேடரியின் அறிவிப்பில் "ஏலத்திற்கு அரசு கடந்த முறை நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமான விலை இருந்தது ." என்ற அறிவிப்பை தொடர்ந்து தொலைதொடர்பு துறை சரிவை சந்தித்தது .
  • இந்த மாத EXPIRY முன்னிருப்பதால் கவனமுடன் செயல்படவும் .

  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனம் :
  • INDIA CEMENTS

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5233 STAYED ABOVE 5246 TARGETS 5259,,5278 ,,5299,,,

  THEN 5318,,5331 ,,,

  SUPPORT LEVELS 5202,,5172.  SELL BELOW 5161 STAYED WITH VOLUME -5150,TARGETS 5136, 5120,5103 ,,,,,


  THEN 5090,,5074,,,,  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 24, 2012

  பங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-2
  funny gifs  நண்பர்களே வணக்கம் ,

  இந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :

  பெரிதாக்க படத்தை " க்ளிக் " பண்ணவும்

  உங்கள் நல் ஆதரவும் ,தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,


  உங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .

  நன்றி

  குறிப்பு : வெளியூர் பயணத்தில் இருந்ததால் கடந்த வார அறிக்கை வெளியிட காலதாமதமாகிவிட்டது


  பங்கு வர்த்தகம் மலர் -39

  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5297.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5314.65 வரை உயர்ந்தது 5182.25 வரை கீழே சென்று 5198.60 ல் முடிவடைந்தது.


  • ஏப்ரல் மாத EXPIRY வாரம் சரிவில் தொடங்கி உள்ளது . 52OO என்ற செண்டிமெண்ட் எண்ணை உடைத்து முடிவடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .
  • வலுவிழந்த மோசமான ஜெர்மனியின் PMI DATA .
  • பிரான்ஸ் நாட்டில் தேர்தலை நோக்கியுள்ள அரசியல் நிலவரம் நிலையற்ற தன்மை நிலவுகிறது . மற்றும் நெதர்லாந்திலும் நிலவும் அரசியல் குழப்பங்கள் .
  • மேற்கண்ட காரணங்களால் ஐரோப்பியன் சந்தை சரிவடைந்தது .இதன் தாக்கம் நமது சந்தையில் வேகமான சரிவுக்கு காரணமாக அமைத்தது .
  • இதற்கிடையில் ரூ .52.49 ல் வர்த்தமான அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 42 பைசா சரிந்தது .
  • உலக சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை நமது சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5210 STAYED ABOVE 5222 TARGETS 5237,,5253 ,,5264,,,

  THEN 5287,,5302 ,,,

  SUPPORT LEVELS 5170,,5156.  SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5131,TARGETS 5120, 5102,5087 ,,,,,


  THEN 5067,,,,,,  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 23, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -38


  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5310.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5353.55 வரை உயர்ந்தது 5000.00 வரை கீ
  ழே சென்று 5302.00 ல் முடிவடைந்தது.


  • கடந்த வெள்ளி அன்று மதியம் யாரும் எதிர்பாராத மின்னல் வேக சரிவு வர்த்தகம் நடந்து அதே மின்னல் வேகத்தில் சுமார் 300 புள்ளிகள் மீண்டது .NIFTY FUTURE LOW - 5000 .
  • என்ன நடந்தது / என்ன காரணம் ?ஒன்றும் புரிய வில்லை .NSE இதற்க்கு விளக்கம் தருமா ?
  • இதற்கான காரணம் ALGO TRADING எனப்படும் AUTOMATED TRADING SYSTEM -ஆல் நடைபெற்ற தவறா ?????என்பதும் ஆயிரம் கேள்விகுறி ????????????

  • SEBI - NSE யிடம் இந்த நேரத்தில் நடைபெற்ற மின்னல் வேக வர்த்தகத்தை தடை செய்ய கோருமா ???????பொறுத்து இருந்து பார்க்கலாம் .

  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :

  • ALSTOM PROJECTS INDIA
  • GEOMETRIC
  • MAHINDRA & MAHINDRA FINANCIAL
  • TATA CONSULTANCY
  • COROMANDEL INTERNATIONAL
  • ULTRA TECH CEMENT
  • RALLIS INDIA
  • NOIDA TOOLBRIDGE
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5310 STAYED ABOVE 5324 TARGETS 5337,,5352 ,,5371,,,

  THEN 5394,,,

  SUPPORT LEVELS 5372,,5244.  SELL BELOW 5235 STAYED WITH VOLUME -5221,TARGETS 5202, 5190,5178 ,,,,,


  THEN 5162,,,,,,  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 20, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -37

  Enjoy Graphic #7

  | ENJOY BULL DAY


  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5330.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5366.15 வரை உயர்ந்தது 5312.85 வரை கீழே சென்று 5356.20 ல் முடிவடைந்தது.


  • நேற்று அமெரிக்காவின் பொருளாதார அறிக்கை சாதகமாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நமது சந்தையில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் ( IT ), மேலே சென்றது ,மற்றும் வாகன துறை சார்ந்த பங்குகளையும் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் கட்டினர் .

  • இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவருவதை வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் .கடந்த காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முடிவுகள் தான் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரண கர்த்தாவாக இருக்கும் என்ற காலம் தற்சமயம் மாறிவிட்டது .
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
  • RELIANCE
  • CAIRN INDIA
  • MERCK
  • MASTEK
  • HONEYWELL AUTOMATION INDIA
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5365 STAYED ABOVE 5384 TARGETS 5404,,5427 ,,5446,,,

  THEN 5467,,,

  SUPPORT LEVELS 5328,,5292.  SELL BELOW 5282 STAYED WITH VOLUME -5267,TARGETS 5244, 5230,5212  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

  Apr 19, 2012

  பங்கு வர்த்தகம் மலர் -36

  Bear Graphic #17  | FOLLOW US  நண்பர்களே வணக்கம் ,

  தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5347.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5364.45 வரை உயர்ந்தது 5312.25 வரை கீழே சென்று 5322.70 ல் முடிவடைந்தது.


  • RBI யின் சாதகமான அறிவிப்பின் காரணமாக நேற்றைய சந்தை GAP UP ஆனது இருந்தாலும் தக்கவைக்க முடியாமல் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்றதால் சந்தை மேல் நோக்கிய பயணத்தை தொடர முடியாமல் சரிவை சந்தித்தது .
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
  • ACC
  • AMBUJA CEMENTS
  • HINDUSTAN ZINC
  • INDUSIND BANK
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .
  • குறிப்பாக சிமென்ட் நிறுவனங்களின் முடிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது

  இன்றைய NIFTY FUTURE LEVELS :

  BUY ABOVE 5331 STAYED ABOVE 5346 TARGETS 5362,,5377 ,,5396

  THEN 5424,,5457,

  SUPPORT LEVELS 5290,,5265.  SELL BELOW 5260 STAYED WITH VOLUME -5246,TARGETS 5230, 5215,5202


  THEN-5190,,5172


  DISCLAIMER :


  இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது