Apr 14, 2010

செந்தமிழ் மாநாடு வருது எங்களை காப்பாத்துங்க

அச்சச்சோ,,
செந்தமிழ் மாநாடு வருது நம் இனத்துகாரங்க எல்லாரையும் அழிக்க
கோவை அதிகாரங்க வராங்க .எல்லோரும் நம் இனத்தவரை காப்பாற்றிக்கொள்ள ஆண்டவனை வேண்டுங்க.நாம் எத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை காப்பாற்றி நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தோம் .ஆனால் இவர்கள் நம்மை காப்பாற்றாமல் நம்மை அழிப்பதாக நினைத்து தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் ஆபத்து விதைக்கிறார்கள் என்று தன சக நண்பருடன் கூறி அழுதது சாலையோர மரங்கள்எங்களை காப்பாற்ற யாராவது வருவார்களா????

கண்களுக்கு விருந்தாக சாலையை அலங்கரிக்கும் என் அழகை பாருங்கள்கடுமையான வெயிலிலும் உங்களை பாதுகாக்க நாங்கள் குடையாய் அணிவகுத்து நிற்பதை காணுங்கள்


தற்சமயம் எங்கள் நிலைமை இதுதான்
சமூக விரோதிகள் ஒருபுறமும்,நகர்புற வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள் கட்ட காடுகளை அழித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மறுபுறமும் ,சாலை மேம்பாடு
என்ற பெயரில் அரசு அதிகாரிகளாலும் பல முனை தாக்குதலாலும் நாங்கள் அழிக்கப்பட்டு வருகிறோம்.வெட்டப்பட்ட எங்களை இது போல் உருவாக்க உங்களால் முடியுமா.ஒருவேளை இன்று எங்களை மீண்டும் நீங்கள் விதைத்தால் நிச்சயமாக சில ஆண்டுகளில் நாங்கள் உங்களை பாதுகாப்போம்,,உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதலில் இருந்து உங்களை காப்போம்


உங்களை காக்க எங்களை காப்பாற்றுவீர்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Apr 3, 2010

நிஜ ஹீரோ Dr.c.சைலேந்திரபாபு


உயர் திரு மதிப்பிற்குரிய Dr.c.சைலேந்திரபாபு அவர்கள் விவசாய கல்லூரி மாணவராக இருந்து இன்று சிறப்பு அதிரடி படை தலைவராகவும் மற்றும் பல உயர்ந்த பதவிகள் வகித்து நமது மாநிலத்திற்கும் ,நமது தேசத்திற்கும், பேறும் புகழும் பெற்று தந்து உள்ளார் என்பதில் நாம் எல்லோரும் பெருமை படவேண்டிய ஒரு உயர்ந்த மனிதர் . .


பொதுவாக எல்லோரும் வீரம் ,மிடுக்கு ,கம்பீரம்,தைரியம்,திறமை ,எல்லாவற்றிற்கும் சினிமா ஹீரோ போல வாழவேண்டும் என்று நினைப்போம் ஆனால் மேற்கண்ட எல்லா திறனும் ஒருங்கே பெற்று நமது தேசத்தின் ஒரு தலை சிறந்த முன்னோடியாகவும் (A Inspiration person) நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போகும் சிறந்த I.P.S அதிகாரிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார் .
சுவிடன் நாட்டு மாணவர்களுடன் கருத்தரங்கத்தில்
மக்கள் எல்லோரிடத்தும் எளிமையாகவும், நண்பரை போல் நட்பாகவும் பழகுபவர் ,சிறந்த சமுதாய முன்னேற்ற எழுத்தாளர்,வருங்கால சமுதாயத்தை நிர்ணயிக்க போகும் மாணாக்கர்களின் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் . சத்தியமங்கல பயிற்சியில்
ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில்

மேதகு முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாமுடன்
தற்போது எங்களது கோவை மாவட்டத்தின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .நடக்கவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகிறார் .தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ஜெய் ஹிந்து
படங்கள் உதவி :http://www.sylendrababu.com/