May 10, 2011

தந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் !--மறு பதிப்புஇன்று தந்தையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி--அவரின் நினைவும் பிரிவிலும் மீளாமல் கண்ணீர் மலர்களால் சமர்பிக்கும் கவிதாஞ்சலி

அப்பா !

அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .

நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
அனேக விசயங்களை என் தோழனாய்
என் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .

காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
நடை பயில கற்று கொடுத்த கைகளை !
என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !

ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
என் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது என் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .
என்னை மன்னிப்பீர்களா தந்தையே !

வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
என்னை மன்னிக்கவும் ,
என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,


May 8, 2011

இன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்உலகத்தில் உள்ள அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .என் தாய்க்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.எல்லா அன்னையரையும் என் இரு கரம் கூப்பி நிகரில்லாத உங்களை வந்தனம் செய்கிறேன் .உலகத்தில் பெண்ணாய் பிறந்து அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் போது அவள் பெரும் இன்பம் உலகத்தில் எந்த விதத்திலும் ஈடு இணை செய்ய முடியாத பேரின்பத்தை அடைகிறாள் .குழந்தை பெற்றெடுத்த நிமிடம் முதல் அன்னையின் அரவணைப்பு துவங்குகிறது .
(
சொல்லபோனால் கருவிலேயே அவள் அரவணைப்பு துவங்கி விடுகிறது ) .

பால் கொடுக்க துவங்கியது முதல் அன்னை எத்தனை விதமான பங்களிப்பை நமக்கு தருகிறாள் .தனது வாழ்கையின் சுகம், துக்கம் எல்லாமுமாக தன் குழந்தையை தான் பார்க்கிறாள் .அன்னை என்பவள் முதல் ஆசிரியராகவும் ,குருவாகவும் திகழ்கிறாள் .அன்னையை விட உற்ற தோழி இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது .
அநேகம் பேர் தன் காரியம் சாதித்து கொள்ள அன்னையின் முந்தானையை தான் முதலில் பிடித்து கெஞ்சவும், கொஞ்சவும், ஆரம்பிப்போம் சரியா .? எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் .

நம் ஒவ்வொரு அசைவிலும் அன்னையின் பிரதிபலிப்பு இருக்கும் .நம் வாழ்வில் எது சரி? எது தவறு? என்று முடிவு செய்து நமக்கு சரியான பாதையை காட்டுகிறாள் .எதிர்பார்ப்பு இல்லாத ஒரே அன்பு அன்னையிடம் மட்டுமே பெற முடியும் .அன்னையை பாராட்ட
வார்த்தைகள் இல்லை .


தன் இளமை பருவத்தை தன் வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் தாயை வயதானவுடன் தயவு செய்து ராணி போல் பார்த்து கொள்ளாவிட்டாலும் குப்பையாய் நினைத்து அவள் மனம் நோகும்படி அவளை குப்பையில் வீசி விடாதீர்கள்.மூத்த அன்னையரின் முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும் போது தா
ன் அன்னையர் தினம் முழுமையடையும் .

இன்று அன்னைக்கு எல்லோரும் அவருக்கு பிடித்த இனிப்பை வாங்கி கொடுக்கலாம் இல்லாவிட்டால் வாழ்த்தாவது கூறலாம் .அவர் அடையும் மகிழ்ச்சி பாருங்கள் .நான் என் தாயாருக்கு ஐஸ் வாங்கிகொடுத்து ஐஸ் வைத்து விட்டேன் .மகிழ்ச்சி .