Jun 30, 2013

நீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் அய்யா அவர்களுக்கு  மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ,

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 59 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது குறுப்பிடத்தக்கது .இது தமிழக மக்களுக்கு பெருமையும் ,மகிழ்வையும் அளித்துள்ளது .

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அல்டமாஸ் கபீர், வரும் ஜூலை 18ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக  புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 

குடும்ப பின்னணி  

     நீதிபதி பி.சதாசிவம்  அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர் என்ற பெருமை பெற்றவர் .


கடந்து வந்த பாதை

  சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். 


அரசு போக்குவரத்து கழகங்களின் சட்ட ஆலோசகராகவும், நகராட்சிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆலோசகராகவும் பணியாற்றிள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

                                   

சில முக்கிய தீர்ப்புகள் 

                  பல முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்புகள் :
 • மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். 
  • டில்லியில் நடந்த, ஜெசிகா லால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். 
  • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.
  • ரிலையன்ஸ் வழக்கில், ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது என, தீர்ப்பளித்தார்.
  • பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
  • தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

பதவி காலம் 

வரும் 2014 ஏப்ரல் மாதம் 27 ம் தேதி அவர் ஓய்வு பெரும் வரை அவர்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி  வகிப்பார்.

முயற்சி திருவினையாக்கும் 

அரசு பள்ளிகளில் படிப்பதை விட கான்வென்ட்டில் படித்தால் மட்டுமே பெரிய மனிதராக முடியும் என்ற கூற்றை மாற்றும் வகையில் படிப்பு ,கவனம் ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை இருந்தால் சாதனைகள் பல செய்யலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம் ஆவார் .சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாதித்தது  படிப்பும் ,உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ளார் .

தாயார்  நாச்சாயி அம்மாள் கூறியதாவது  :

என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தியும் ,பற்றும்  கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என நினைத்தவர்களுக்கு  அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.Jun 21, 2013

மாணவ நட்சத்திரங்களுக்கு தீப அஞ்சலிஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக இன்று கோவையில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .கீதா அவர்கள் தலைமையில் ஈர நெஞ்சம் அமைப்பின்அறங்காவலர்  திரு.மகேந்திரன் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பினர் திரு.கோவை சக்தி மற்றும் திருமதி .பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர் .


 அப்பள்ளி மாணவர்களுக்கு ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது .
விழாவில் 19.06.13 அன்று  கோர விபத்தில் பலியான புதுக்கோட்டை, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு இரங்கலும் ,தீபம் ஏந்தி கண்ணீர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு , மற்றும் வாகன விபத்துக்கள் தொடர்பாகவும் ,வீட்டில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு சற்று முன்னதாக கிளம்பி பாதுகாப்புடன் வந்து செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.

                      

                      
                       
அதனை தொடர்ந்து அப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற N.கோகிலா (453) , இரண்டாம் மதிப்பெண் பெற்ற R. அருண்குமார் (438) அவர்களுக்கு பாராட்டுக்களும் ,பரிசுகளும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டன .

                       

                       

மேலும் அப்பள்ளி துவங்கப்பட்டு முதலாம் ஆண்டுலே 10 ம் வகுப்பு தேர்வில் 100 % தேர்ச்சிக்கும், மாணவர்களின் உயர்வுக்கும் அர்பணிப்புடன் பாடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு ஈர நெஞ்சம் சார்பாக வாழ்த்துக்களும் ,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன .


Apr 28, 2013

சத்தமின்றி ஒரு சமூக சீர்திருத்தம்--ஈர நெஞ்சம்
சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி செய்து வரும் ஈர நெஞ்சம் அமைப்பும் ,அதன் நிறுவனரான ஈர நெஞ்சம் மகி எனும் மகேந்திரன் அவர்களை வாழ்த்துவோம் .

இன்று முதலாம் ஆண்டு நிறைவடைந்து ,இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு வாழ்த்துக்கள் ,

இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கோவை மாநகராட்சி காப்பகத்தில் எல்லோர்க்கும் தலை முடி வெட்டியும் ,நகங்கள் வெட்டியும் ,அவர்களை சுத்தபடுத்தியும் ,காப்பத்தில் உள்ள சுமார் 100 பேருக்கும் அறுசுவை உணவளித்தும் ,மர கன்றுகளை நட்டும் விழாவை கொண்டாடினர் .


இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக !
கடமையை செய்பவர்கள் கடமையை செய்தால் உலகில் யாரும் ஆதரவற்றோராக இருக்கமாட்டார்கள் .

அங்கு உள்ள எல்லோரும் வாழ்வில் நல்ல நிலையில் இருந்து காலத்தின் (சில மனிதர்களின் சுயநலத்தால் ) கட்டாயத்தால் இது போன்ற காப்பகத்தில் தன்  வாழ் நாட்களை கடத்திகொண்டுள்ளனர் .

ஈர நெஞ்சம் போன்ற நெஞ்கில் ஈரம் சுமக்கும் சிலரால் தான் இவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .ஈர நெஞ்சத்தின் ஈரமான செயல்கள் அநேகம் அதில் சில, சாலைகளில் பைத்தியங்களாக, சக சமூகத்தினரால் ஒதுக்கபட்டோரை காப்பகங்களில் சேர்த்துள்ளனர் .திரு நங்கைகளின் வாழ்வில் சுய தொழில் தொடங்கி சுய மரியாதையுடன் வாழ உதவி செய்துள்ளனர் .பல ஆதரவற்ற உடல் நலமின்றி இருந்த முதியோரை  மருத்துவனைகளில் சிகிச்சை பெற உதவி உள்ளனர் .பலருக்கு கல்வி மேற்கொள்ள கல்வி உதவி வழங்கி வாழ்வில் கல்வி விளக்கேற்றி உள்ளனர் ,இது போன்ற பல சாதனைகளை அடுக்கிகொண்டே செல்லலாம் .

இன்று ஈர நெஞ்சம் நிறுவனர் திரு .ஈர நெஞ்சம் மகி அவர்களை கௌரவித்து நேசம் அமைப்பு விருது வழங்கி உள்ளது .

                                          http://eerammagi.blogspot.in/வாழ்க ! ஈர நெஞ்சம் மகி மற்றும் அமைப்பினர் ! தொடர்க உங்கள் சமூக சேவைகள் !