Dec 29, 2010

என் இனிய சகோதர பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




ஒவ்வொரு வருடமும் நான் இறுதியில் என்னால் எத்தனை பேருக்கு உதவ முடிந்தது .அடுத்த வருடம் இன்னும் அதிகமானோருக்கு உதவ வேண்டும் என்றும் பிறரிடம் மனம் நோகாமல் நடந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டிகொள்வேன் .

நமக்கு நாடு என்ன செய்தது என்பதை விட
நாம் நாட்டிற்கு ,பிறருக்கு எவ்வளவு உதவிகரமாக இருந்தோம் என்பது முக்கியம் .
ஒவ்வொரு நாளும் நமது வாழ்நாளில் மைனஸ் இறுதியில் நம்மோடு வருவது ஒன்றும் இல்லை வெறுமை மட்டுமே .ஆகவே பிறருக்கு நம்மால் முடித்த வரை உதவுவோம் பிறருக்கு பயனுள்ளவர்களாய் இருப்போம் .

வரும் புதிய வருடம் 2011 எல்லோருக்கும் நல்ல ஆண்டாக,
எல்லோருடைய நல்ல விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வருடமாக ,
நாடும் ,காடும் செழித்து மும்மாரி மழைபொழிந்து,
விவசாயம் செழித்து ,உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ
மக்கள் கோபம் ,பொறமை ,வஞ்சகம் ,தவிர்த்து ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும்
மனதார வேண்டிகொள்கிறேன் .

எல்லா பதி உலக நண்பர்கள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nov 9, 2010

கோவை குழந்தைகள் கொடூர கொலைகாரன் போலீசால் சுட்டு கொலை


அதர்மம் தலை தூக்கும் கடைசியில் தர்மம் வெல்லும் .

கடந்த 10 நாட்கள் முன்பு கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கால்வாயில் வீசி கொன்ற கொலைகாரன் மோகன் ராஜ் மற்றும் மனோகர் பிடிபட்டனர் .இவர்களில் கொலைகாரன் மோகன்ராஜ் இன்று அதிகாலை என்கௌண்டேரில் சுட்டு கொல்லப்பட்டான் .

இவர்களை போன்ற குற்றவாளிகளுக்கு இதுவே சரியான தண்டனை .இந்த நாய்களுக்கு கோர்ட் ,கேஸ் ,இவர்களுக்கு 50 போலீஸ் பாதுகாப்பு ,பெட்ரோல் டீசல் செலவு, மணி அடித்தா சாப்பாடு,தங்க இடம்,இதை விட வேறு வசதி என்ன வேண்டும் .

தவறு
செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .இவர்களை போன்ற நரகாசுரர்கள் தினம் தினம் அழிக்க பட வேண்டும் .இப்போதாவது அந்த குழந்தைகளின் ஆன்மா சிறிது சாந்தி அடையும் .இது போன்ற தண்டனை தவறு செய்ய நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .


தமிழக
காவல் துறை வாழ்க !

என்றும் தமிழக காவல் துறை சிறந்தது என்று நிரூபணம் ஆகிவிட்டது . எங்கள் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ஐயா Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றியும் ,நீண்ட ஆயுளுடன் மற்றும் எல்லா இன்பங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணை புரிவார் .மறைந்த குழந்தைகள் ஆன்மா கண்டிப்பாக உங்களை வாழ்த்தும் சந்தேகமில்லை .

ஜெய் ஹிந்த் . WE REALLY PROUD OF YOU SIR

Nov 2, 2010

கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொடூர கொலை

கோவையில் பயங்கரமான கோரமான மோசமான சம்பவம் அரங்கேறி உள்ளது .கோவை டவுனில் துணிக்கடை நடத்தி வருபவரின் மகள் முஸ்கின் (5 ம் வகுப்பு ,வயது 11 ) மற்றும் மகன் ரித்திக் (3 ம் வகுப்பு ,வயது 8 ) இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள் .இவர்கள் பள்ளிக்கு தனியார் ஆம்னி வாகனத்தில் பள்ளிக்கு செல்கிறார்கள் சம்பவதன்று ஆக்டிங் டிரைவராக செயல்பட்ட மோகன்ராஜ் என்பவன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பொள்ளாச்சி சென்று உள்ளான்.அங்கு தன் நண்பனான மற்றொரு கால் டாக்ஸி டிரைவர் மனோகர் என்பவனையும் அழைத்துகொண்டு குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் பறிக்கும் எண்ணத்துடன் சென்றுள்ளனர் .
சிறுமியை தனியாக பார்த்த மோகன்ராஜ் காமம் தலைக்கு ஏறி சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கி உள்ளான் .இதை பார்த்த சிறுவன் ,சிறுமி கத்த சிறுவனின் கை ,கால் கட்டி பின் சீட்டின் கீழ் அமுத்திவிட்டு சிறுமியை துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளான் .உடந்தையாக டிரைவர் மனோகர் செயல்பட்டுள்ளான் .
ஒரு சமயத்தில் தாங்கள் சிக்கிவிடுவோமோ என்று யோசித்து இருவரையும் கொல்ல முடிவெடுத்து திருமூர்த்தி மலைக்கு மலை மீதிருந்து தள்ளிவிடும் எண்ணத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் பிஞ்சு கால்கள் வலித்து அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு கீழே அழைத்து வந்துள்ளனர் கொலைபாதகர்கள்.
பின்னர் அடுத்து உள்ள பி.கே .பி கால்வாய்க்கு அழைத்து வந்து அடுத்த திட்டமான பாலில் சாணி பவுடர் கலக்கி வாயில் ஊற்றி உள்ளனர் கசப்பாக இருந்ததால் துப்பி அழுததால் அத்திட்டத்தை கைவிட்டு முகத்தில் பிளாஸ்டிக் பை கட்டி கொலை முயற்சித்துள்ளனர் குழந்தைகள் மூச்சு திணறி கத்தியதால் பயந்து அத்திட்டத்தையும் கைவிட்டு உள்ளனர் .பிறகு டிரைவர்கள் இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டு இருகுழந்தைகளையும் மிரட்டி சாப்பிட வற்புறுத்தி சாப்பிட வைத்துள்ளனர்
அருகில் ஓடிய கால்வாயில் கை கழுவ கூறியுள்ளனர் பயந்த சிறுமி மறுத்து உள்ளால் "நாங்கள் ஒன்றும் தண்ணீரில் தள்ளிவிட மாட்டோம் உன் தம்பி கழுவிவிட்டு வரட்டும் என்று சிறுவனை அனுப்பிஉள்ளனர்.சிறுவன் திரும்பிவந்ததால் சிறுமி தன் தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு கால்வாயில் கை கழுவ சென்றுள்ளனர் கொலைபாதகர்கள் இருவரையும் இதுதான் சமயமென்று தண்ணீரில் தள்ளி விட்டனர் .தண்ணீரில் தத்தளித்தபடியே உயிர் நீத்து காலத்தின் பிடியில் சிக்கி தண்ணீரின் போக்கிற்கு அடித்து செல்லப்பட்டனர் .கொலையாளிகளுக்கு மனதில் சிறு ஈரம் கூட இருந்திருக்காதா ?
உயர்திரு காவல் துறை ஆணையர் திரு Dr.c.சைலேந்திரபாபு அவர்களின் தீவிர முயற்சியால் இருவரின் சடலங்களையும் மீட்டு கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இச்சம்பவம் சினிமாவை மிஞ்சும் சம்பவமாக நடந்துள்ளது இவ்வளவு ஒரு கேவலமான சம்பவங்களுக்கு விடை சொல்வது யார் ?

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் !
இது போன்ற சம்பவங்கள் "அஞ்சாதே'" மற்றும் சில திரைப்படத்திலும் "ஆசை" படத்தில் பிளாஸ்டிக் கவர் கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் திரை காட்சிகளாக வந்துள்ளன.இதை போன்ற வன்முறை தூண்டும் சினிமாக்களை பார்பவர்கள் சில சந்தர்பங்களில் இப்படிப்பட்ட யோசனைகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக உள்ளன.
திரைப்படங்கள் சமுதாயத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் திரைப்படங்கள் தயாரிக்க படவேண்டும் .தயாரிப்பாளர்களின் சுய லாபத்திற்காக இது போன்ற காமம் மற்றும் கொலை செய்ய வழி சொல்லி கொடுக்கும் திரைப்படங்கள் தவிர்க்க படவேண்டும் .

சட்டங்கள் கடுமையாக்கல்
சமீப காலத்தில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது .இது போன்ற குற்றங்களுக்கு காரணம் நம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் " எப்படியும் சிக்கினால் எதாவது ஒரு வழியில் வெளியே வந்துவிடலாம் " எனும் எண்ணம் மற்றும் மீறிபோனால் ஆயுள் தண்டனை என்ற தைரியம் .ஒரு குற்றத்திற்கு வழக்கு என்ற பெயரில் காலங்கள் வருட கணக்கில் நீண்டு செல்தல் .
சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான பொதுமக்கள் மத்தியில் "கல்லால் அடித்து கொள்தல் ,சிரசேதம் ,கை கால் வெட்டுதல் " போன்ற கடுமையான பயத்தை உண்டு பண்ணும் தண்டனைகளும் மரண தண்டனைகள் கொண்டுவரப்படவேண்டும் .
மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்
குறிப்பாக பணத்திற்காகவோ, பகை தீர்க்கவோ,அப்பாவி பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே என்ற அவசர சட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .

வழக்கறிஞர் நண்பர்களுக்கு வேண்டுகோள்
டிரைவர்கள் மோகன்ராஜ் மற்றும் மனோகர் போன்ற மனதில் ஈரமற்ற பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்யும் கொலைபாதக செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் வழக்கில் ஆஜராக கூடாது .நாளை நம் பிள்ளைகளும் பழி தீர்க்கவோ,பணம் பறிக்கவோ , இதே நிலைமைக்கு ஆளாக நேரலாம் .
காவல் துறைக்கு வேண்டுகோள்
  • எல்லா தனியார் வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் முடிந்தால் வி.ஐ.பி .வாகனம் தவிர மற்ற எல்லா வாகனத்திலும் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்
  • ஒவ்வொரு தனியார் வாகனங்களிலும் GPRS மூலம் வண்டி எங்கு சென்றுகொண்டிருகிறது என்பதை கண்காணிக்கும் கருவிகளை அவசியம் பொறுத்த வேண்டும் .
  • பள்ளி நுழை வாசல்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்படவேண்டும் அதன் மூலம் யார் அழைத்து செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும் .
  • ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள்ளும் உள்ள தனியார் ஓட்டுனர் புகைப்படத்துடன் கூடிய விவர குறிப்பேடு பெற்றிருக்க வேண்டும் .அதில் பழைய குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் .
  • பள்ளி வாகனங்களில் அதிவேக தடை கருவிகள் பொறுத்த செய்யவேண்டும்
  • சோதனை சாவடிகள் அதிக படுத்தப்பட வேண்டும் குறிப்பாக புற காவல் சோதனைசாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் பணியமர்த்த படவேண்டும் .இரவு நேரம் மட்டுமன்றி பகல் நேரங்களிலும் திடிர் வாகன சோதனைகள் செய்ய வேண்டும் .பகல் வாகன சோதனைகள் நடப்பதே இல்லை
  • போக்குவரத்து ரோந்து வாகனங்கள் ,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக படுத்த படவேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் குழந்தை கடத்தல் பற்றி குழந்தைகளுக்கு பயபடாமல் சமயோசிதமாக செயல்பட ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் .
  • எல்லா பள்ளிகளிலும் கட்டாய அவசிய தற்காப்பு கலை போதிக்க அறிவுறுத்த படவேண்டும்
கண்ணீர் அஞ்சலி
உயிர் நீத்த குழந்தைகளுக்கு பதிவர்கள் மற்றும் இப்பதிவை படிக்கும் எல்லா வாசகர்கள் சார்பாகவும் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டலாம் .
குழந்தைகளை பிரிந்து துயரால் வாடும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மன தைரியம் உண்டாகட்டும் .

தகவல் மற்று படங்கள் உதவி தின மலர் நாளிதழ் : நன்றி








கொலையாளி மனோகர்


Oct 26, 2010

வாங்க தீபாவளி கொண்டாடலாம்




அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் உலகத்தில் உள்ள சகோதர ,சகோதரிகள் ,அனைத்து பதிவர் நண்பர்கள்,குடும்பத்தினர் ,,, மற்றும் நான் எழுதும் கிறுக்கல் பதிவுகளை படித்து ஆதரவு தரும் உலக வாசகர்கள் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றுமொறு முறை என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நாம் எல்லோரும் தீபாவளி அன்று புதிய பட்டு ஆடை உடுத்தி நல்ல அறுசுவை உணவு உண்டு மகிழ்ச்சியாக கோலாகலமாக கொண்டாடும் வேலையில் நமக்கு நம் குடும்பத்தை தவிர நம் உடனேயே வாழும் எத்தனையோ ஆதரவற்றோர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவு அற்ற முதியோர் ,மற்றும் ஆதரவு அற்ற குழந்தைகள் ,மனநிலை பாதிக்கபட்டோர் வருடம் முழுவதும் உடுத்த துணிக்காகவும்,ஒரு வேளை நல்ல உணவுக்காவும் நம் ஆதரவை எதிர் பார்த்து காத்து இருகின்றனர் .


நாம் எல்லோரும் தனியாக அவர்களுக்கு உதவ இல்லங்கள் அமைக்காவிட்டாலும் அவர்களுக்கு அதரவு கொடுத்து நடத்தப்படும் இல்லங்களுக்கு உதவலாமே .அவர்களும் நம் சிறு உலகத்தில் நம்முடன் பிறந்தோர் தானே ! அவர்களும் நம் இனம் தானே மனித இனமாய் பிறந்த அவர்களுக்கு ஆதரவாய் இருப்போம் .

நமக்கு உதவ மனம் இருக்கும் ஆனால் பணம் இல்லை என்று நினைபவர்கள் தனியாக உதவாமல் தன் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து ஒரு ஆளுக்கு rs:50 போட்டு ஒரு நல்ல தொகையாக உதவலாம் .
நம் மகிழ்ச்சியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு கை கோர்த்து உண்மையான மன நிறைஉடைய ஆனந்தமாய் பண்டிகையை கொண்டாடலாம் வாங்க




(அவரவர் இல்லங்களுக்கு அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு முறை சொன்று பார்த்து வாருங்கள் பார்த்தால் நீங்களே உதவுவீர்கள் பலரை உதவும்படி கூறுவீர்கள் அவர்கள் சிரிப்பில் நாம் சிரிப்போம் )



Oct 24, 2010

ஆழியார்குரங்குநீர் வீழ்ச்சி செல்வோர் ஜாக்கிரதை


குரங்கு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா செல்வோர் மிக்க எச்சரிக்கையாக செல்லவேண்டும் .ஏனென்றால் பாதுகாப்பு நடவடிக்கை சுத்தமாக இல்லை .

நாங்கள் குரங்கு நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தோம் .வால்பாறை மலை அடிவாரத்தில் வன இலகாவால் சுங்க வசூல் செய்யபடுகிறது .(டிக்கட் வாங்காமல் செல்வோரிடம் நீர் வீழ்ச்சி முகப்பில் வன ஊழியர்கள் சிலரால் தனி வசூல் நடக்கிறது ஜரூராக மிரட்டலுடன் நடக்கிறது ).

விடுமுறை நாட்களில் சுற்றுலா வருவோரிடம் இவ்வளவு வசூல் செய்யும் வன இலாக்கா சுற்றுலா பயணிகளின் அக்கறை பற்றி சிறிதும் அக்கறை காட்டுவதில்லை .

.மேலே படத்தில் உள்ள DANGER என்ற இடத்தில் அதிகமானோர் விழுந்து அடிபடுகிறார்கள் .எங்கள் வண்டி சாவி தொலைந்து விட்டதால் அதை தேடி முதல் நண்பர் அந்த பறையில் தேடி சென்றார் மூன்றடி வைத்திருப்பர் ஒரே வழுக்காக வழுக்கி கீழே விழ்ந்தார் .அவரை காப்பாற்ற இரண்டாம் நபர் அமர்ந்த படியே நகர்ந்து சென்றார் அவரும் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து முகமெல்லாம் ரத்தம். அவரை காக்க மூன்றாம் நண்பர் ஒரு அடி வைத்தது தான் தாமதம் அவரும் விழுந்து பறை மோதி மண்டை அடிபட்டு தாடை கிழிந்தது .கோவை வந்த பிறகு எல்லோருக்கும் தையல் போடப்பட்டது அந்த அளவு அடி .

இவ்வளவு நடக்கும் பொழுது சிறிது தள்ளி ஒரு 10 வயது சிறுமி விழுந்து உதடு கிழிந்து பல் உடைந்து ஒரே ரத்த மாயம் .

இது குரங்கு நீர் விழ்ச்சியா ரத்த நீர் விழ்ச்சியா ?என்று புரியாமல் விரைவில் இடத்தை காலி செய்தோம் .

  • நீர் வீழ்ச்சியில் குளிப்போரிடம் குறிப்பாக பெண்களிடம் சரக்கு ஆசாமிகள் செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை .
  • குளிப்போருக்கு பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள் ஒன்றும் இல்லை .மழை அடித்து சென்றதா இல்லை மனிதரால் அடித்து செல்லப்பட்டதா புரியவில்லை .
  • மேற்படி பாறைமுதல் நீர் வீழ்ச்சி வரை இரும்பு தடுப்பு வேலி அமைப்பது அவசர ஒன்று .
  • மேலும் எச்சரிக்கை பலகை ஒன்றில் வழுக்கு பாறை யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தவேண்டும் .
  • பெண்கள் உடை மாற்ற சுத்தமான அறை தேவை .ஏற்கனவே உள்ள அறையில் பலான சமாச்சாரங்கள் அதிகம் கிடக்கிறது .
  • குளிக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் முதலுதவி பெட்டி கை வசம் வைத்திருக்க வேண்டும் .
  • போட்டோ எடுக்கிறேன் என்று சில பேர்வழிகளால் குளிக்கும் பெண்களை பல மாடல்களில் ரசித்து படம் எடுக்க படுகிறது .
சுற்றுலா என்பது மன நிம்மதிக்காகவும் ,மகிழ்ச்சிக்காகவே தவிர பிரச்னைகள் சந்திப்பதும் .துக்கபடவும் அல்ல .
சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ????????மிலியன் கேள்விகளுடன் ??????????????????

Oct 16, 2010

பதியுலக நட்பை இணைக்கும் கணிபொறிக்கு நன்றிகள்

myspace layouts

myspace layouts




கண்ணுக்கு
தெரியாமல் நண்பர்களாய், ஒரு குடும்பமாய் ,ஈகோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறி கொள்ளவும் .பாலமாய் திகழும் கணிபொறிக்கு பதியுலக சகோதரர்கள் சார்பாக எல்லா கணிப்பொறிக்கும் ஆயதபூஜை சார்பாக வணக்கங்கள் கோடான கோடி நன்றிகள்.

myspace layouts

myspace layouts

Oct 5, 2010

சென்னை தொலை தூர பல்கலைகழகமா ? கேவல பல்கலைகழகமா????



சென்னை தொலை தூர பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் .இவ்வளவு ஒரு கேவலமான பல்கலைகழக செயல்பாட்டை நான் சந்தித்தது இல்லை .நிர்வாகம் என்பது ஒரு எள் அளவும் கிடையாது .ஒரு முறை தேர்வு எழுதினால் result வெளியிடுவது இல்லை .அப்படியே result வெளிவரவில்லையே என்று நிர்வாகத்தினரை அணுகினால் மன்னிக்கவும் எப்படியெல்லாம் உங்களை அலைகழித்து பைத்தியம் பிடிக்க வைக்க முடியுமோ அப்படி பதில் அளிப்பார்கள் .நீங்கள் பதில் கிடைக்காமல் ஒரே தேர்வை 3 முறை 4 முறை எழுதினாலும் முடிவுகள் வெளிவராது .

தகவல் அறியும் சட்டம் வாழ்க ஒரே அஸ்திரம்
நீங்கள் கோடி முறை மாடி படி ஏறி இறங்கி பல அதிகாரிகளால் எட்டி உதைக்கப்பட்டு அலுத்து அழுது நிர்கதியாகி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொன்னான திட்டம் தகவல் அறியும் சட்டம் மூலம் பல முறையீடுகளுக்கு பிறகு அவர்கள் தவறை மறைக்க மழுப்பலான பதில் கொடுக்கப்பட்டு ஒருவழியாக இறுதியில் உங்களுக்கு நீங்கள் அலைந்ததற்கு விடை கிடைக்கும்.
இத்தனை கேவலமான சம்பவங்கள் எனக்கும் என்னை போன்ற பல மாணவர்களுக்கம் அரங்கேறுகிறது .


நிர்வாக செயல்பாட்டிற்கு ஒரு சம்பவம் கூறுகிறேன் கேளுங்கள்
ஒரு முறை மேற்கண்ட பிரச்சனைக்காக இயக்குனர் அவர்களை சந்தித்து குறை கூற சென்றேன் .அப்போது இயக்குனர் உதவியாளர் ( Director to PA ) அவர்களால் தடுக்கபட்டு controller of examination அவர்களை சந்திக்க கூறினார்கள்.
அவரிடம் என் கேவலத்தை கூறினேன் அவரோ நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சம்மந்தப்பட்ட section-ல் அணுக சொன்னார் அங்கே சென்றால் எல்லாம் கேட்டுவிட்டு அலுவலக உதவியாளரிடம் (office assistant ) சொல்லசொன்னார்கள் அவரும் கேட்டுவிட்டு security -யிடம் சொல்ல சொன்னார் .நானோ அவரையும் சந்தித்து நடந்தவற்றை சொன்னேன் அவரோ "நீங்கள் பாவம் தம்பி நீங்கள் போய்டு வாங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் .எதுக்கும் அந்த ஆண்டவன நெனச்சு வேண்டிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்று ஆறுதல் கூறி வெளியே செல்ல கேட் இருக்குமிடத்தை கையால் காட்டினார்.
இப்போ சொல்லுங்க நான் பட்ட கேவலங்கள் எவ்வளவு. ? எவ்வளவு காயமான வடுக்களை ஏற்படுத்தி இருக்கும் என்று !!


பல்கலைகழக இயக்குனருக்கு சில வேண்டுகோள்கள்


1, இவ்வளவு ஒரு பொறுப்பற்ற நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பவர் யார் ?
2,பல்கலைகழகத்தில் பணியாற்றுபவர்களும் கல்லூரி படிப்பை முடித்து தானே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வார்களா?

3 , தெரியாமல் ஒரு தகவலை கேட்டோ அல்லது ஒரு வழிகாட்டலுக்காக அணுகினலோ மாணவர்களை நாயை விட கேவலமாக நடத்தும் அணுகுமுறையை மாற்றிகொள்வார்களா?

4 ,ஒரு குறைக்காக ஒருவரிடம் அது இயக்குனரிடம் இருந்தாலும் மனு கொடுக்கபட்டால் please take needful action என்று எழுதுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் அந்த மனு மேல் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது, அம்மனுவிற்க்கு தீர்வு காணப்பட்டதா ,என்று கவனிக்காமல் விடுவதே இத்துணை சிக்கலுக்கும் காரணம் .

5 ,ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு தகவல் அறியும் சட்டம் மூலம் மட்டுமே அறிய வேண்டிய நிலைக்கு யார் காரணம் ??(அங்கு பணிபுரியும் சில நல் உள்ளங்கள் " சார் நீங்கள்
தகவல் அறியும் சட்டம் மூலம் கேளுங்கள் இல்லாவிட்டால் இவர்களிடம் மழுப்பலான பதில் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது " என்று கூறுகிறார்கள் அவ்வளவு ஒரு நிர்வாக கேவலம் ).

6 .இவர்களுடைய அலச்சிய போக்கு பல மாணவர்களுடைய வாழ்கையில் முன்னேறும் வாய்ப்பை தவற காரணமாகிவிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
.

7 , ஒவ்வொரு மாணவரும் பொருளாதாரமோ,அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ ,அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சிய கனவை கெடுக்கும் வகையில் அமைந்து விட வேண்டாம் .

8 .ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைகழகம் பற்றி மோசமான பதிவு எழுத வெட்கபடுகிறேன்.

இப்படி பல்கலைகழகம் தவறு செய்யும் போது யாரிடம்
பல்கலைகழகம் பற்றி
புகார் அளிக்க வேண்டும் என்று இந்த பதிவு படிக்கும் யாரவது தெரிந்தால் கூறவும் பயனுள்ளதாக இருக்கும் .

Sep 16, 2010

தொலைதூர கல்வியில் படிப்பது பாவமா? சாபமா?


தொலைதூர கல்வியில் படிப்பது பாவமா? சாபமா? என்று கேள்வி எழ காரணம் தொலைதூர கல்வியில் படித்தவர்களை பல வேலை வாய்ப்புகளிலும் ,பல இடங்களிலும் தரம் தாழ்த்தி மதிப்பிட படுவதும், correspondence ல முடிச்சிங்களா?என இழுத்து கேள்வி கேட்கபடுகிறது .வேலை வாய்ப்பு விளம்பரங்களில் (regular) என்று குறிப்பிடுகிறார்கள் .போதாகுறைக்கு தமிழக அரசும் தொலைதூர கல்வியில் படித்தல் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என்று அறிக்கை வெளி இட்டுள்ளது .ஏன் இந்த பகுபாடு ?ரெகுலர் கோர்ஸில் படிப்பவர்களுக்கு எந்த விதத்திலும் வேறுபாடு இல்லாமல் திறமையுடன் தொலைதூர கல்வியில் படிக்கிறார்கள் .எத்தனை பேர் தொலைதூர கல்வியில் படித்து பெரிய பதவி பொறுப்புகளில் உள்ளார்கள் .அவர்கள் திறமையற்றவர்களா .?தொலைதூர கல்வியில் படிப்பவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் படிக்கிறார்கள் .தன்னுடைய குடும்ப சூழ்நிலை ,பொருளாதார சூழ்நிலை,போன்ற பல காரணங்களால் ரெகுலர் கோர்ஸில் படிக்காமல் தொலைதூர கல்வியில் ஆயிரமாயிரம் இன்னல்களுக்கு மத்தியில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் படிக்கிறார்கள்.
தொலைதூர கல்வியில் போதிக்க வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு பொறுமையும் ,போதிய திறமையும் ,இருப்பதில்
லை .வேக வேகமாக சிலபஸ் முடித்தால் போதும் என்ற எண்ணத்துடன் மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ராக்கெட் வேகத்தில் பாடம் நடத்தி முடித்துவிடுகிறார்கள் .
பல்கலைகழகங்கள் தொலைதூர கல்வியில் போதிக்க நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் .அதேபோல பல்கலைகழகங்களை அணுகினால் சரியான பதில் கூறுவது இ
ல்லை.மாணவர்கள் அலைகழிக்க படுகிறார்கள் .விதிவிலக்காக ஓரிரு பல்கலைகழகங்கள் சரியான பதில் கூறுகிறார்கள் .
ஒரு பல்கலைகழகத்தில் பரீட்சை எழுதினாலும் ரிசல்ட் தருவது இல்லை .ஒரே பாடத்தை ரிசல்ட் கிடைக்காமல் பல முறை எழுத வேண்டிய அவல நிலையும் உள்ளது .இதற்க்கு பொறுப்பற்ற நிர்வாக் திறமை படைத்த அலுவலர்களும் ,இயக்குனரையுமே சாரும் .


இந்த பதிவை ஏதேனும் பல்கலைகழகத்தில் பணிபுரிபவர் படித்தால் தயவு செய்து மாணவர்களிடம் அன்பான முறையில் சரியான வழிக்காட்டும்படி அன்புடன் வேண்டி கொள்கிறேன் .நீங்கள் கடமையை செய்யுங்கள் சலுகை காட்ட வேண்டாம் .இப்பதிவு யாரையும் புண்படுத்த அல்ல தொலைதூர கல்வியில் படிப்பவர்களின் அவல நிலையில் மிக சிலவற்றை சுட்டிக்காட்டி உள்ளேன் .

Sep 7, 2010

தந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் !


அப்பா !

அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .

நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
அனேக விசயங்களை என் தோழனாய்
என் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .

காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
நடை பயில கற்று கொடுத்த கைகளை !
என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !
ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
என் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது என் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .
என்னை மன்னிப்பீர்களா தந்தையே !

வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
என்னை மன்னிக்கவும் ,
என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,

May 16, 2010

தனியார் பள்ளிகளின் கல்வி நிலை = அரசுக்கு வேண்டுகோள்


""மாதா பிதா குரு தெய்வம் ""
குரு என்பவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் .ஆனால் இன்றைய கால தனியார் கல்வி துறை சேவை மனபான்மையுடன் கல்வி போதிக்கபடுவதை விட முக்கியத்துவம் வியாபார நோக்கில் பெருகி வருகிறது என்பது வீதிக்கு 5 பள்ளிகூடங்கள் இருப்பது பறை சாற்றுகின்றன.பள்ளிகள் பெருகி வருவது மிக்க வரவேற்க தக்கது அதுவே பெற்றோர்களை கல்வி போதிக்கிறோம் என்ற நோக்கில் பணத்தால் சக்கையாக சாறு பிழிவது எந்தவிதத்தில் ஏற்கத்தக்கது.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்துடன் , அன்பளிப்பு ,வளர்ச்சி நிதி ,கட்டிட நிதி , மேசை ,நாற்காலி ,காற்றாடி,என்ற பெயரிலும் வசூலிக்கிறார்கள் .

அரசின் முடிவு
தனியார் கல்வி கட்டணத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக வரன் முறைபடுத்திய தமிழக அரசிற்கும், மதிப்பிற்குரிய ஐயா தமிழக முதல்வர் அவர்களுக்கும் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியும் ,வாழ்த்துகளும் தெரிவித்துகொள்கிறேன் .
1 .அதிரடியாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு யார் காரணம்?
தனியார் பள்ளிகளின் தணியாத பண தாகமே காரணம்
கோவையில் கடந்த வருடம் S.B.O.A.பள்ளி பள்ளி கட்டணத்தை 50% சதவித்திற்கும் மேல் உயர்த்தி பெற்றோர்களின் கடுமையான போராட்டதிற்கும்,வேண்டுகோளிற்கும், செவி சாய்க்காத பள்ளி நிர்வாகம் மெத்தன போக்கை கடை பிடித்து வந்தது என்பது ஊரறிந்த விஷயம் .இது போல் சில பள்ளிகள் ,,,,
இதையெல்லாம் பார்த்த அரசு தற்போது வரவேற்கத்தக்க கிடிக்கி பிடி போட்டுள்ளது .

தனியார் பள்ளிகளின் மிரட்டல் போக்கு
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்தில் குறைபாடுகள் இருப்பின் தக்க முறையில் ,நேர்மையான வழியில் மேல் முறையீடு செய்யலாம் அதைவிடுத்து நாங்கள் பள்ளிகள் திறக்க மாட்டோம் காலவரைன்றி மூடுவோம் அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை "பள்ளிகளை திறப்பதை காலவரையன்றி ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் " என்ற பத்திரிகை அறிவிப்புகள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் ,துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

அரசிற்கு வேண்டுகோள்
1.தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசிலித்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாற்றம் செய்யத்தக்க நியாயமான மாற்றங்களை மறு பரிசிலனை செய்யலாம் .
2.தனியார் பள்ளிகளின் மிரட்டல் போக்கிற்கு அடி பணியகூடாது.
3.தேவைப்படும் பட்சத்தில் மிரட்டல்களுக்கு கடுமையான சட்டம் கொண்டுவரலாம் .
4.தேவைப்படும் பட்சத்தில் பள்ளிகளை அரசு தன்வசபடுத்தி வேலையற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகைகளை பணிக்கு அமர்த்தி பள்ளிகளை நடத்தலாம் .
5.பெற்றோர் அமைப்புகள் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படலாம் .
6.அரசு பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்த முழு முயற்சி எடுக்க வேண்டும் .
7.அரசு பள்ளியின் ஆசிரியர்களுக்கு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற நவீன கல்வி திட்டத்தை போதிக்கும் முறையை பயிற்றுவிக்க வேண்டும்.
8 .இதன் மூலம் தனியார் பள்ளியின் மோகம் குறைந்து அரசு பள்ளிகளை நாடி வரும் நிலை கொண்டு வரலாம் .

Apr 14, 2010

செந்தமிழ் மாநாடு வருது எங்களை காப்பாத்துங்க

அச்சச்சோ,,
செந்தமிழ் மாநாடு வருது நம் இனத்துகாரங்க எல்லாரையும் அழிக்க
கோவை அதிகாரங்க வராங்க .எல்லோரும் நம் இனத்தவரை காப்பாற்றிக்கொள்ள ஆண்டவனை வேண்டுங்க.நாம் எத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை காப்பாற்றி நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தோம் .ஆனால் இவர்கள் நம்மை காப்பாற்றாமல் நம்மை அழிப்பதாக நினைத்து தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் ஆபத்து விதைக்கிறார்கள் என்று தன சக நண்பருடன் கூறி அழுதது சாலையோர மரங்கள்



எங்களை காப்பாற்ற யாராவது வருவார்களா????

கண்களுக்கு விருந்தாக சாலையை அலங்கரிக்கும் என் அழகை பாருங்கள்



கடுமையான வெயிலிலும் உங்களை பாதுகாக்க நாங்கள் குடையாய் அணிவகுத்து நிற்பதை காணுங்கள்


தற்சமயம் எங்கள் நிலைமை இதுதான்
சமூக விரோதிகள் ஒருபுறமும்,நகர்புற வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள் கட்ட காடுகளை அழித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மறுபுறமும் ,சாலை மேம்பாடு
என்ற பெயரில் அரசு அதிகாரிகளாலும் பல முனை தாக்குதலாலும் நாங்கள் அழிக்கப்பட்டு வருகிறோம்.



வெட்டப்பட்ட எங்களை இது போல் உருவாக்க உங்களால் முடியுமா.ஒருவேளை இன்று எங்களை மீண்டும் நீங்கள் விதைத்தால் நிச்சயமாக சில ஆண்டுகளில் நாங்கள் உங்களை பாதுகாப்போம்,,உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதலில் இருந்து உங்களை காப்போம்


உங்களை காக்க எங்களை காப்பாற்றுவீர்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



Apr 3, 2010

நிஜ ஹீரோ Dr.c.சைலேந்திரபாபு


உயர் திரு மதிப்பிற்குரிய Dr.c.சைலேந்திரபாபு அவர்கள் விவசாய கல்லூரி மாணவராக இருந்து இன்று சிறப்பு அதிரடி படை தலைவராகவும் மற்றும் பல உயர்ந்த பதவிகள் வகித்து நமது மாநிலத்திற்கும் ,நமது தேசத்திற்கும், பேறும் புகழும் பெற்று தந்து உள்ளார் என்பதில் நாம் எல்லோரும் பெருமை படவேண்டிய ஒரு உயர்ந்த மனிதர் . .


பொதுவாக எல்லோரும் வீரம் ,மிடுக்கு ,கம்பீரம்,தைரியம்,திறமை ,எல்லாவற்றிற்கும் சினிமா ஹீரோ போல வாழவேண்டும் என்று நினைப்போம் ஆனால் மேற்கண்ட எல்லா திறனும் ஒருங்கே பெற்று நமது தேசத்தின் ஒரு தலை சிறந்த முன்னோடியாகவும் (A Inspiration person) நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போகும் சிறந்த I.P.S அதிகாரிகளுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார் .
சுவிடன் நாட்டு மாணவர்களுடன் கருத்தரங்கத்தில்
மக்கள் எல்லோரிடத்தும் எளிமையாகவும், நண்பரை போல் நட்பாகவும் பழகுபவர் ,சிறந்த சமுதாய முன்னேற்ற எழுத்தாளர்,வருங்கால சமுதாயத்தை நிர்ணயிக்க போகும் மாணாக்கர்களின் வழிகாட்டியாகவும் திகழ்கிறார் . சத்தியமங்கல பயிற்சியில்
ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில்

மேதகு முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாமுடன்
தற்போது எங்களது கோவை மாவட்டத்தின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .நடக்கவிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து வருகிறார் .தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் .
ஜெய் ஹிந்து
படங்கள் உதவி :http://www.sylendrababu.com/