Jan 29, 2013

யானைகள் -மனித இன மோதல்                                    
                                                http://www.greenosai.org/

ஓசை சுற்று சூழல் அமைப்பு கடந்த ஜனவரி- 2000 வருடம் ,முதல்  உயர்திரு கே .காளிதாஸ் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டு இன்று வரை 13 வருடங்களாக பல நல்ல செயல்கள் புரிந்து வருகின்றனர் .காடுகளின் பாதுகாவலனாகவும் ,வனவிலங்குகளின் நண்பர்களாகவும் ,வன விலங்குகள் ,பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாகவும் ,மலைவாழ் மக்களின் மேம்பட்டிற்காகவும் ,பல ஆய்வுகளுக்கு மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுடன்   ,இன்று சுற்று சூழலினால்  அழிந்து வரும் நிலையை காக்கவும் ,பல முயற்சிகளில் வெற்றி கண்டும் ,சுற்று சூழல் பாதுகாக்க மேலும் பல  முயற்சிகள் செய்து வருகின்றனர் .

கடந்த ஞாயிறு   28/01/2013 அன்று மாலை   கோவையில் தமிழ்நாடு ஹோட்டலில் ஓசை சுற்று சூழல் அமைப்பு சார்பாக   யானைகள் மற்றும் மனித மோதல்கள் ஏன் அடிக்கடி நடக்கிறது ?,இதனை எவ்வாறு தடுப்பது ?என்பது குறித்த ஒரு கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது .

                              

இந்த கருத்தரங்கில் திரு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் " யானைகள் மற்றும் மனித மோதல்கள் " குறித்து   WWF அமைப்பின்  "துணை மேலாளர் " திரு .ஜி.சிவசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
                             
                              

உடன் எழுத்தாளர் திரு ,ஞானி ஐயா ,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .அழியும் காடுகள் 
 • காடுகள் பெரும்பான்மையான அளவு அழிக்கபட்டு ,நகர்புற மயமாக்கல் என்ற பெயரில் புதிய புதிய வீட்டு மனைகளும் ,சாலைகளும் ,வீடுகளும் ,தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வருவதே காரணமாகும் .
           
 • புற்றீசல் போல பல கல்வி நிறுவனங்கள் மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் இங்கு மலிவான விலையில் விவசாயிகளிடமிருந்தும் ,காட்டை அடுத்துள்ள நிலங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர் .

 • மனதை புண்படுத்தும் விஷயம் என்னவென்றால் பாதுகாவலர்களான சில தவறான அதிகாரிகளும் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் ,துணை போவதே இத்தனை அவலங்களுக்கும் முக்கிய காரணமாகும் .

 • காட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை  பாயும் வரை இந்த ஆக்கிரமிப்புகள் தொடரும் .

 • நாளடைவில் காட்டு விலங்குகள் அழிவதோடு மட்டும் அல்லாமல் ,வன விலங்குகள் நகர் புறம் நோக்கி நகரும் அபாயம் அதிகம் உள்ளது .

 • இந்த பிரச்சனை யை தவிர்க்க ,தடுக்க அரசு தீவிர அவசர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் .ஒரு நிபுணர் குழு அமைக்கபட்டு ஆக்கிரமித்துள்ள காடுகளையும் ,நிலங்களையும் ,மீட்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் .

 •  யானைகள் -மனித மோதல்கள் ஏன் ?

 • மலைவாழ் மக்கள் பல வருடங்களாக காடுகளில் வசித்து வருகின்றனர் அந்த காலகட்டங்களில் யானைகள் இந்த அளவு மனிதர்களை தாக்கியதாக தெரியவில்லை காரணம் அன்று யாரும் யானைகளை துன்புறுத்தியதில்லை .மலைவாழ் மக்களுக்கும் விலங்குகள் பற்றிய அறிவு இருந்தது .

 • ஆனால் நகர்புற  மனிதனுக்கு விலங்குகள் பற்றிய அறிவு இல்லாததும் ,தீவிர பயமும் ஒரு காரணம் இவர்கள் யானைகளை தாக்குவதும் யானைகள் இவர்களை தாக்குவது இயல்பாகிவிட்டது .

 • இன்றோ  யானைகளின் இடங்களை மனிதர்கள் பிடித்ததோடு மட்டும் அல்லாமல்  யானைகளை ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் ,பல வகைகளில் யானைகளை துன்புறுத்துவதால் மனிதர்களை கண்டாலே துரத்துகின்றன .

 •  காடுகள் அழிக்கபடுவதால் விலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பறிக்கபடுகின்றன .ஆகவே யானைகள் உணவு,நீர் தேடி நகர்புறம் வருகின்றன .

 • யோசித்து பார்த்தால் கடந்த 5 முதல் 10 வருடங்களாக  தான் இந்த மோதல்கள் நிகழ்கின்றன .இதற்க்கு முக்கிய காரணம் காடுகளை அழித்த மனிதன் ,மனிதன், மனிதன் மட்டுமே .

 • யானைகளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் ?

 • மலையோர கிராம விவசாயிகள் யானைகள் விரும்பும் பயிர்களை தவிர்த்து ,அதற்க்கு பிடிக்காத பயிர் வகைகளை பயிரிடலாம் .(அப்படிப்பட்ட  அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட விவசாய ஆய்வு கழகங்கள் உதவ வேண்டும் )

 • யானைகள் சுற்றி வரும் இடங்களில் மனிதர்கள் மாலை இருட்டிய பிறகும் ,அதிகாலை நேரங்களில் நடமாடுவதை  தவிர்க்க வேண்டும் .

 • யானைகளை விரட்ட வன அலுவலர்கள்  துணையுடன் தனி நபராக செல்லாமல் குழுவாக செல்லவேண்டும் .

 • யானைகள்   நீண்ட தூரம் தொடர்ந்து துரத்தாது  அதிக பட்சம் 100மீ முதல் 150 மீ வரை துரத்தலாம் .

 • யானைகளுக்கு கண் பார்வை குறைவு .மோப்ப சக்தி அதிகம் .

 • யானைகளை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கலாம் .ஒரு வேளை சாலைகளில் துரத்தினால் அதன் கண்களில் படும்படி நேராக ஓடாமல் மறைவில் பதுங்கி கொள்வது நல்லது .

 • முடிவு :-

 • யானைகளுக்கு மனிதனை தாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை மாற்றாக அவைகள் உணவு மற்றும் குடிக்க நீர் தேடி மட்டுமே வருகின்றன .
                                

 • நாம் யானைக்கு எதிரியா ? அல்லது யானை நமக்கு எதிரியா ? என்று  பார்த்தால் காடுகளை அழித்த வகையில் நாமே அதன் எதிரிகள் .
 • ஒரு வகையில் பார்த்தால் யானைகள் இருப்பதால் தான் அதன் மீது கொண்டுள்ள பயம் காரணமாக , மேலும் காடுகள் அழிவை நோக்கி செல்லாமல் மனிதர்களிடமிருந்து  காக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை .

 • இனி வரும் காலங்களில் யானைகள் மனித மோதலை தடுக்க காடுகள் காக்க  படவேண்டும் .
மேற்கண்ட தகவல்களை பகிர்ந்த ஓசை சுற்று சூழல் அமைப்பின் தலைவர் திரு.கே. காளிதாஸ்  அவர்களுக்கும் , WWF திரு .ஜி.சிவசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள் .

விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு அழைத்த கோவை பதிவர் சகோதரி எழில் அவர்களுக்கும்  ,முகநூல் நண்பர் திரு .சசி குமார் அவர்களுக்கும் நன்றி .

25 comments:

 1. தெளிவூட்டும் பயனுள்ள அருமையான
  அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
  தகவல்களுடன் கூடிய பதிவுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வெங்கட் சார் ,
   பொதுமக்களுக்கு , யானைகள்- மனித மோதல்கள் ஏன் ? என்ற விளக்கம் அறிய இந்த பதிவு உதவும் என்ற நோக்குடன் எழுதி உள்ளேன் .

   தங்களின் மதிப்பு மிக்க கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார் .

   Delete
 2. Replies
  1. prakash sir ,

   Thanks a lot for your comments

   Delete
 3. //நாமே அதன் எதிரிகள்//

  கும்கி படத்தில் கூட ஒரு வசனம் உண்டு

  ReplyDelete
  Replies
  1. அண்ணா அப்படியா ? வருகைக்கு நன்றி அண்ணா

   Delete
 4. உங்களின் ஆர்வமே உங்களை ஓசைக்கு அழைத்து வந்திருக்கிறது சக்தி. நீங்கள் கூறியபடி மனிதர்க்கு பிரச்சனை என்றால் ஏதோ ஒரு விதத்தில் சரி செய்து கொள்ள முடியும் விலங்குகள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை எங்கே சொல்லி தன்னைக் காத்துக்கொள்ளமுடியும். நாம்தான் அவற்றிற்காக குரல் எழுப்ப வேண்டும்.உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமையுண்டு. அதைக் தடுக்க யாருக்கும் அதிகாரமுமில்லை,உரிமையுமில்லை. ஒரு விதத்தில் நம் சுய நலத்திற்காகவேனும் காடுகள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு யானைகள் கண்டிப்பாக காக்கப்பட வேண்டும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ""உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் வாழ உரிமையுண்டு. அதைக் தடுக்க யாருக்கும் அதிகாரமுமில்லை,உரிமையுமில்லை.""

   மிக்க நன்றிங்க ,

   தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி எழில் ,

   நீங்கள் கூறுவது சரி .நாம் தான் பேச இயலாத விலங்குகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் .கொடுப்போம் !

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. True fact..Mr.Sakthi..Well done..nice article..Nowadays lot of people mostly teenage guys go for outgoing to forest areas, they tease the elephants when they travel through forest areas even though the elephants cross the road without disturbing them. More and more they do this for fun and enjoyment, more the elephants feel irritated and they start attacking people so as to protect themselves before we harm them..This is one of the major reason for human-elephant conflict. Forest conservation department should take necessary steps to save forest and protect elephants from humans and vice versa.. Thank you for bringing an awarness of this among people.

  ReplyDelete
  Replies
  1. THANKS A LOT MRS.JAMUNA ,

   WELL SAID BY YOU IN EACH LINE .THANKS AGAIN FOR YOUR VALUABLE COMMENT .

   Delete
 7. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு. இயற்கை மீதான முதல் உரிமை விலங்குகளுத்தான் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. ""இயற்கை மீதான முதல் உரிமை விலங்குகளுத்தான் உண்டு""

   வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி குமரன் சார்

   Delete
 8. முதலில் , தங்களின் ஓசை சுழல் நிகழ்ச்சியின் வருகைக்கு நன்றி . மேலும் , தங்களின் தொகுப்பு மிக அருமை . அனைவருக்கும் இத்தொகுப்பு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன் .இன்றைய சூழ்நிலையில் கோவை மக்களுக்கு கடந்த 5 வருடங்களாக இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகம் ஆகிருக்கும் சூழ்நிலையில் , தங்களின் தொகுப்பு மேலும் பயனுலதாக இருக்கும் . வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திரு SRSK அவர்களே ,

   தங்களின் பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ! ஓசை போன்ற ஒரு நல்ல அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து பல நல்ல விசயங்கள் அறிந்துகொள்ள பயனுள்ளதாக இருந்தது .

   இந்த பதிவின் முழு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் அண்ணன் திரு . ஓசை காளிதாஸ் அவர்களுக்கும் ,ஓசை சுற்று சூழல் அமைப்பிற்கும் ,அமைப்பில் ஈடுபட்டுள்ள தன்னார்வ நண்பர்களையும் தான் சாரும் .

   வரும் காலங்களில் பொது மக்களும் விழிப்புடன் இருப்பார்கள் என நம்புகிறேன் .

   Delete
 9. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி வணக்கம் ,
   தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க

   Delete
 10. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
  தகவல்களுடன் கூடிய பதிவுக்கு மனமார்ந்த நன்றி !

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும்,மேலான கருத்துக்கும் மிக்க நன்றி நிஜாம் சார் ;-)

   Delete
 11. பெப்சி கோகோ கோலா ,பர்கர் ,இன்னும் பல தீனிகளை சாப்பிட்டு பல யானைகள் நாட்டிலும் உள்ளது ..அதனால் காட்டில் உள்ளதே நாட்டிலும் உள்ளது நண்பரே ...

  ReplyDelete
  Replies
  1. அருமை டாக்டர் சார் ,நன்றி

   Delete
 12. அருமையான பகிர்விகுக்கு நன்றிகள் ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் நன்றிங்க தியாகு சார்

   Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்