Sep 13, 2011

சிறை பிடிக்கப்பட்ட 110 இந்தியர்களை மீட்டார் -உயர்திரு .Dr .சைலேந்திர பாபு


பெங்களுரை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் செயல்படுகிறது, இந்நிறுவனம் தாய்லாந்து சென்று வர நபர் ஒருவருக்கு ரூபாய் 10000 ,தங்கும் இடம் ,உணவு ,சுற்றிபார்க்க எல்லாம் இலவசம் என்று அறிவித்தது .


இந்த விளம்பரத்தை பார்த்து கோவையை சேர்ந்த தம்பதியினர் இருவரும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 110 பேரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு கடந்த 8 ம் தேதியன்று புறப்பட்டு சென்றனர் .


அங்கு இவர்களை வரவேற்ற ஏஜென்ட் ஒரு ஹோட்டலில் எல்லோரையும் தங்கவைத்தனர் .மறுபடியும் ஏஜென்ட் வரவில்லை.தங்கி இருந்தவர்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டபோது இந்தியாவில் இருந்து எங்களுக்கு பணம் வரவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் தலா ரூ .30000 / = தரவேண்டும் இல்லாவிட்டால் உங்களை விடமாட்டோம் என்று எல்லோரின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டு 110 பேரையும் சிறை பிடித்தனர் .


இந்த தகவலை கோவையை சேர்ந்த நபர் தனது மகளான கல்லூரி பெண்ணிடம் நடந்தவற்றை போனில் தெரிவித்து காப்பாற்றும்படி கூறிவுள்ளார் .

உடனடியாக அப்பெண் தனது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பட்ட அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார் .கனிவுடன் விசாரித்த தற்போதைய வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு.Dr.சைலேந்திர பாபு உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.


ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் தொடர்பு கொண்டபோது அவர்கள் சுமார் பத்து லட்ச ருபாய் பெற்று கொண்டு தலை மறைவானது தெரிய வந்தது .
தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள ஏஜெண்டுகளிடம் தொடர்புகொண்ட திரு .Dr.சைலேந்திர பாபு 110 பேரும் ஏமாற்றப்பட்ட விசயமும் அவர்களை உடனடியாக இந்தியா அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுத்து "உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை அனுப்பிவைக்கிறோம் "என்று உறுதியளித்தார் .


.ஜி.திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உறுதியளிப்பை ஏற்றுகொண்ட ஏஜெண்டுகள் அனைவரையும் ஹோட்டல் அறையில் இருந்து விடுவித்தனர் .அவர்களின் பாஸ்போர்ட்டும் திருப்பி வழங்கப்பட்டு 110 பேரும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட்டும் வழங்கப்பட்டது .இன்று அவர்கள் சென்னை அடைவார்கள் . அனைத்து பயணிகளும் தாங்கள் காப்பற்றபட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சியும் நிம்மதி பெருமூச்சும் அடைந்தனர் .


பொது மக்கள் இனிமேலாவது இலவசங்களை நம்பி
ஏமாறாமல் தீர விசாரித்து பயணங்கள் தொடரவும்வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உடனடியான அதிரடி நடவடிக்கையால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் . 110 இந்தியர்களை கடல்கடந்து இருந்தாலும் எல்லைகளை கடந்து மீட்ட உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் பாராட்டுகளும் ,நெஞ்சார்ந்த நன்றிகளும் ,தொடர்ந்து இது போன்ற பல சாதனைகள் தொடரவும் வாழ்த்துக்கள் .

ஜெய் ஹிந்த்

Sep 5, 2011

ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்இன்று ஆசிரியர்கள் தினம் .எல்லா ஆசிரியர்களுக்கும் என் மனமார ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ,உங்கள் சேவை ,தியாகம் ,அர்பணிப்பு எல்லாவற்றிற்கும் தலை வணங்கி நன்றிகள் கூறிக்கொள்கிறேன் . .இவ்வுலகில் ஈடு இணையற்ற செல்வம் கல்வி செல்வம் கோடி கோடியாய் செல்வம் இருந்தும் கல்வியற்ற செல்வம் பயனற்றது .

ஆசிரியர்கள் தமது வாழ்க்கையை ஏணியாகவும்,ஒரு மெழுகுவர்தியாகவும் , ஜோதியாய் இருந்து நம் எல்லோர் வாழ்விலும் ஒளி ஏற்றுகின்றனர் .மாசற்ற ஆசிரியர்கள் தியாகம் வாழ்க !


அய்யன் வள்ளுவர் வாக்கு :

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம் ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

விளக்கம் எண்ணும் எழுத்தும் எனப்படும்

அறிவுக்
கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

விளக்கம் அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

விளக்கம் கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை..
இத்தகைய பெருமை மிக்க ஆசிரியர் தினமானது ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது பாரத நாட்டின் முதல் ஜனாதிபதியும் , கல்வியின் தியாக சுடரான மறைந்த உயர்திரு Dr. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான
செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாட படுகிறது.

ஆகவே நம் பதிஉலகம்எல்லோர் சார்பில் ,முன்னால் ஜனாதிபதி உயர்திரு கல்வி செம்மல் Dr. அப்துல் கலாம் அவர்களுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்Sep 1, 2011

தங்கம் ஜாக்கிரதை -அபாயம்

தங்கம் தங்கமாய் விலையிலும் ,மதிப்பிலும் ஜொலிக்கிறது .கூடவே தங்கத்தின் ஆபத்தும் அதிகமாய் வளர்கிறது இதற்கு நாளேடுகளில் பெருகி வரும் கொள்ளை கொலை செய்திகளே சாட்சி . .தங்கம் கைக்கு எட்டா கனியாக விலை உயர்ந்து வருகிறது .விலை உயர உயர நாளுக்கு நாள் கொலைகளும் , கொள்ளைகளும் அடுக்கடுக்காக நடந்தேறி வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சிறிய தங்க சங்கிலிக்காக கழுத்தை அறுத்து உயிரை பலியாக்கவும் கொள்ளைகாரர்கள் தயங்குவதில்லை .காரணம் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் இன்று ரூபாய் 2600 .

பொது நிகழ்ச்சிகள்,கல்யாண வைபவங்கள் செல்லும்போது தமது ஆடம்பரத்தை காட்டும் வகையில் தங்க ஆபத்தை எதிர்கொள்ள வேண்டமே !

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் பெண்கள் அணியும் தங்கத்தின் சராசரியான விலை பட்டியல் இதோ :

செயின் -3 பவுன்
ஆரம்-5 பவுன்
கம்மல் -அரை பவுன்
வளையல் -3 பவுன்
மோதிரம் -அரை பவுன்
ஆக மொத்தம் குறைவாக 12 பவுன் விலை 12 * 21000 =252000 .

ஆபத்து புரிகிறதா .

திருமண நிகழ்ச்சியில் தனியாக விளையாடும் நகை அணிந்துள்ள சிறு குழந்தைகளை கண்காணிக்கும் கும்பல் உண்டு ஆபத்து நகைக்கு என்றால் தாங்கிகொள்ளலாம் குழந்தைக்கென்றால் ?


ஆபத்தை தவிர்க்க சில ஆலோசனைகள் !!!!
காலை வேளைகளில் அதிகாலை எழுந்து தனியாக வாசல் கூட்டுவதை பெண்மணிகள் தவிர்க்கவும் .ஆள் நடமாட்டம் தொடங்கியவுடன் வெளியே வரலாம் .


தமது கை பையில் பெப்பர் ஸ்ப்ரே அவசியம் வைத்து கொள்ளவும்

வாகனத்தில் நம்மை யாராவது பின் தொடர்வது தெரிந்தால் அருகில் உள்ளவர்களுடன் தயங்காமல் உதவி கேட்கவும் .அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் .

வாகனத்தில் வந்து நகை பறிக்க கழுத்தில் கைவைப்பது தெரிந்தால் இரு கைகளால் நகை பிடித்துகொண்டு டக்கென்று கீழே அமர்ந்து விடவும் வாகனத்தில் வருபவர்கள் தடுமாறிவிடுவர்கள்.

இதையும் மீறி தாக்க வரும் கொள்ளைகாரர்களை தைரியமாக தொடர்ந்து தமது கையாலோ ,கை பையாலோ ,குடையாலோ ,கண் பகுதியோ அல்லது கழுத்து உணவு குழாய் பகுதியையோ தாக்கவும் எவ்வளவு பெரிய பலசாலியானாலும் கீழே வீழ்வது நிச்சயம் (மிகுந்த வேகமாக தாக்கிவிட வேண்டாம் ஜாக்கிரதை )

பலமாக அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடவும் .

தனியாக ஆட்டோ அல்லது டாக்சியில் பயணிக்கும் போது நமக்கு வேண்டியவர்களுக்கு பயணிக்கும் வாகன எண் மற்றும் பயணிக்கும்,கடக்கும் பகுதியை sms மூலம் தொடர்ந்து அனுப்பலாம் .

சரி பெண்களுக்கு நகை தான் அழகு .அது இல்லாமல் எப்படி நிகழ்சிக்களுக்கு செல்வது என்று கேட்பது புரிகிறது ?

இன்றைய சந்தைகளில் 1 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் கலை நயம் மிக்க வேலை பாடுகளுடன் கிடைகிறது இந்த நகைகள் அசல் தங்க நகைகளுக்கும் 1 கிராம் தங்க நகைகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை .கவரிங் நகைகளை போல் 1 கிராம் நகைகள் கறுப்பதில்லை .யாராலும் தங்க நகை இல்லை என்ற வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் .ஆபத்தும் இல்லை .

நகைகள் வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கர்களில் வைப்பது சிறந்தது தேவை உள்ளபோது உபயோகித்து கொள்ளலாம் .

முதலீடாக தங்கம் சேமிப்போர் ஆபரணம் வாங்குவதை விட 24 கேரட் காயின் வாங்கலாம் அல்லது தங்கம் எலக்ட்ரானிக் பண்டுகளில் மாதா மாதம் முதலீடு செய்யலாம் .

தங்கத்தால் ஆபத்தில்லாமல் பயனடையுங்கள் வாழ்த்துக்கள்


அளவான ஆடம்பரமா? அல்லது ஆபத்தை காத்திருந்து வரவேற்பதா முடிவு உங்கள் கையில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,