Dec 30, 2012

பங்கு வர்த்தகம் மலர் -171




நண்பர்களே வணக்கம் , 

தேசிய NIFTY FUTURE வெள்ளியன்று  5932.50 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5960.00 வரை உயர்ந்தது 5930.00 வரை கீழே சென்று 5954.55 -ல் முடிவடைந்தது.

  • நமது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த நிறைவடைந்த வாரத்தில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .
  • உலக நாடுகளின் சந்தை மந்த நிலை மற்றும் பிற காரணங்களை தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ருபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது ,
  •  இந்த நிலையில் மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் சில சலுகைகளை தொடர்ந்து அந்நிய முதலீடு நம் நாட்டில் குவிய துவங்கி உள்ளது .
  • இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் என ஆய்வு நிறுவனங்களின்  அறிவிப்புகளை தொடர்ந்து  உலக வர்த்தகர்களின் பார்வை நம் சந்தைகளில் குவிந்துள்ளது .


இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :


BUY ABOVE 5964 STAYED ABOVE 5978 TARGETS ,5994,,6010,6024,,

THEN 6040,,6071,,,,,,

SUPPORT LEVELS 5937,5921.,,,


SELL BELOW 5910 STAYED WITH VOLUME -5898,TARGETS 5886,5876,,5858,,


THEN 5840,,5821,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது




Dec 28, 2012

பங்கு வர்த்தகம் மலர் -170





நண்பர்களே வணக்கம் , 

தேசிய NIFTY (JANUARY FUTURE)  5971.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5977.60 வரை உயர்ந்தது 5925.10 வரை கீழே சென்று 5930.30 -ல் முடிவடைந்தது.



  • பொது துறை நிறுவனமான ( R C F ) ராஷ்ட்ரிய கெமிகல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் -ன் 12.5 % பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது .
  • இந்த பங்கு விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.360 கோடி நிதி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது .
                                    
  • கடந்த 5 நாட்களாக அமெரிக்காவில் பேசப்பட்டு வரும் ( AMERICAN FISCAL CLIFF ) வரி உயர்த்துவது தொடர்பான  முடிவுகள்  நிலுவையில் உள்ளதால் இதன் பிரதிபலிப்பு கமாடிட்டி ,உலகம் மற்றும் நம் பங்கு சந்தைகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் .
  • http://www.youtube.com/watch?v=z0_OYeE-FAw&feature=player_detailpage

                       


இன்றைய NIFTY FUTURE LEVELS   :


BUY ABOVE 5944 STAYED ABOVE 5956 TARGETS ,5969,,5983,5996,,

THEN 6019,,6050,,,,,,

SUPPORT LEVELS 5914,5906.,,,


SELL BELOW 5894 STAYED WITH VOLUME -5882,TARGETS 5872,5858,,5846,,


THEN 5816,,5797,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

Dec 27, 2012

பங்கு வர்த்தகம் மலர் -169



நண்பர்களே வணக்கம் , 

தேசிய NIFTY (FUTURE)  5871.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5926.45 வரை உயர்ந்தது 5864.50 வரை கீழே சென்று 5913.75 -ல் முடிவடைந்தது.

  •   இன்று இந்த மாத ஊக வணிகத்தின் நிறைவு நாளானதால் லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5924 STAYED ABOVE 5937 TARGETS ,5947,,5960,5974,,

THEN 5992,,6014,,,,,,

SUPPORT LEVELS 5896,5884.,,,


SELL BELOW 5875 STAYED WITH VOLUME -5863,TARGETS 5851,5838,,5820,,,


THEN 5805,,5783,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Dec 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -168




நண்பர்களே வணக்கம் , 

தேசிய NIFTY (FUTURE) வெள்ளியன்று  5900.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5905.00 வரை உயர்ந்தது 5847.40 வரை கீழே சென்று 5853.40 -ல் முடிவடைந்தது.

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5% மாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது. 
    • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிஇந்த ஆண்டில் 5.4 % உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது.
                                              

      • இந்த சரிவிற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் மந்த நிலையும்  ஒரு  காரணமாக கூறப்படுகின்றன. 
        • மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது. 
          • ஆகவே இந்த வளர்ச்சி கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பது கணிப்பு.
            • நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரித்துள்ளது .
              • ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்.
                • வாராக்கடன் சீரமைப்பு நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூலாகாத கடன்களை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அவற்றை வசூலிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கிகளின் நிதி ஆதாரம் வலுவடையும் என செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன .

                இன்றைய NIFTY FUTURE LEVELS 
                                               

                BUY ABOVE 5869 STAYED ABOVE 5882 TARGETS ,5894,,5910,5926,,

                THEN 5946,,5964,,,,,,

                SUPPORT LEVELS 5826,5812.,,,


                SELL BELOW 5801 STAYED WITH VOLUME -5787,TARGETS 5777,5759,,5746,,

                THEN 5727,,5704,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.




                                     

                Dec 11, 2012

                பங்கு வர்த்தகம் மலர் -167



                நண்பர்களே வணக்கம் , 


                தேசிய  NIFTY (FUTURE) நேற்று  5944.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5955.00 வரை உயர்ந்தது 5923.80 வரை கீழே சென்று 5942.55 -ல் முடிவடைந்தது.

                • வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் தன் கால் பதிக்க செலவிட்ட தொகையை பற்றி எதிர் கட்சிகள் கேள்விகள் எழுப்பியதால் மாநிலங்களவையில் கூச்சல்களும் ,குழப்பமும் நிலவியது .
                • மாநிலங்களவையின் கேள்விநேரத்துக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் வெளியிட்ட நிதி நிலை அறிக்கை பற்றி பா.ஜ.க.கேள்விகளை எழுப்பியது .
                • அப்போது வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை இந்தியாவில் அமைக்க ரூ.125 கூடி செலவிட்டதாக பா.ஜ.க. கூறியது .
                • மேலும் வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை இந்தியாவில் அமைக்க லஞ்சம் வழங்கி உள்ளதாகவும் குற்றம் சாட்டியது ,இந்த பணம் யார், யாருக்கு தரப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியது .
                                          
                • மத்திய அரசு வரும் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் அலைக்கற்றை விலையில் உள்ள வேறுபாடுகள் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் கட்டணம் மற்றும் சுங்கவரியில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றைத் ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

                இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

                BUY ABOVE 5960 STAYED ABOVE 5973 TARGETS ,5984,,5995,6008,,

                THEN 6034,,6060,,,,,,

                SUPPORT LEVELS 5928,5914.,,,


                SELL BELOW 5902 STAYED WITH VOLUME -5890,TARGETS 5878,5865,,5851,,


                THEN 5831,,5811,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                                     

                Dec 9, 2012

                பங்கு வர்த்தகம் மலர் -166


                நண்பர்களே வணக்கம் , 


                தேசிய  NIFTY (FUTURE) வெள்ளியன்று   5979.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5979.95 வரை உயர்ந்தது 5921.75 வரை கீழே சென்று 5944.90 -ல் முடிவடைந்தது.

                • சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ராஜ்ய சபை  நம்பிக்கை ஓட்டெடுப்பில்  ஆளும் மத்திய அரசு வெற்றி பெற்றது .
                • இதனால் ஆளும் கட்சிக்கு நிலவி வந்த நம்பிக்கை அற்ற தன்மை ,குழப்பம் மற்றும் பயம் முடிவுக்கு வந்தது .
                • கடந்த  மாதம் 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு, 47 கோடி டாலர் (2,585 கோடி ரூபாய்) குறைந்து, 29,451 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.
                • இது முந்தைய 16ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 29,498 கோடி டாலராக (16.22 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என்று ரிசர்வ் வங்கியின்செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


                • பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான பாரதி இன்ப்ராடெல் நிறுவனம் பங்குகளை வெளியிட உள்ளது .
                •  விரிவாக்க பணிகளுக்காக ரூ.18.89 கோடி பங்குகளை வெளியிட உள்ளது .
                • இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.210-240 என நிர்ணயிக்க பட உள்ளது .இதன் பங்கு வெளியீடு இந்த மாதம் 10 ம்  தேதி முதல் 14 தேதி நிறைவடைகின்றது .
                • இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.4000-4500 வரை திரட்ட உள்ளது .

                இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

                BUY ABOVE 5960 STAYED ABOVE 5973 TARGETS ,5984,,5995,6008,,

                THEN 6034,,6060,,,,,,

                SUPPORT LEVELS 5928,5914.,,,


                SELL BELOW 5902 STAYED WITH VOLUME -5890,TARGETS 5878,5865,,5851,,


                THEN 5831,,5811,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது.








                Dec 7, 2012

                பங்கு வர்த்தகம் மலர் -165




                                         



                நண்பர்களே வணக்கம் , 

                தேசிய  NIFTY (FUTURE) நேற்று   5953.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5984.65 வரை உயர்ந்தது 5870.10 வரை கீழே சென்று 5970.65 -ல் முடிவடைந்தது.
                •  நாளை ராஜ்ய சபாவில் விவாததிற்கு பிறகு நடைபெறவுள்ள ஓட்டெடுப்பில் ஆளும் அரசு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நாம் கருதுகிறோம் .
                • ஆளும் மத்திய அரசு வெற்றி பெரும் பட்சத்தில் நாம் நேற்று தெரிவித்தது போல இன்றும் சந்தை மேல் நோக்கிய பயணம் செய்ய அதிக வாய்ப்புகள்உள்ளன . 
                • ஓட்டெடுப்பு விவரங்கள் சந்தை முடிவிற்கு பின்பு தெரிய வரும் .
                • ஓட்டெடுப்பின் பிரதிபலிப்பு நம் சந்தையில் திங்கள் அன்று தெரியவரும் .
                                                                   குறிப்பு :
                                               

                • position carry over செய்பவர்கள்  hedging உடன் தொடர்வது நல்லது 


                இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

                BUY ABOVE 5980 STAYED ABOVE 5995 TARGETS ,,6008,,6018, 6034,,

                THEN 6064,,6092,,,,,,

                SUPPORT LEVELS 5951,5944.,,,


                SELL BELOW 5935 STAYED WITH VOLUME -5924,TARGETS 5914,5901,,5885,,


                THEN 5870,,5855,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                                     


                Dec 6, 2012

                பங்கு வர்த்தகம் மலர் -164


                                       

                நண்பர்களே வணக்கம் , 
                தேசிய  NIFTY (FUTURE) நேற்று   5945.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5958.85 வரை உயர்ந்தது 5928.10 வரை கீழே சென்று 5940.45 -ல் முடிவடைந்தது.
                •  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மீதான ஓட்டெடுப்பில் லோக்சபாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் வெற்றி பெறுவோம் என பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .
                • நாட்டின் பொருளாதார சீர்ததிருத்தத்திற்காக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் பா.ஜ. உள்ளிட்ட எதிர்‌கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அன்னிய முதலீட்டினை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.
                •  இதையடுத்து தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துடன் ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி இன்று பாராளுமன்ற லோக்சபாவில் நடந்த ஓட்டெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. 
                                                         
                • பா.ஜ. கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ஓட்டெடுப்பில் முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்தன. இரு கட்சிகளின் 43 எம்.பி.க்கள் ஓட்டளிக்கவில்லை.
                • ஆளும் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை  சந்தை மேல் நோக்கி பயணிக்கும் .ஆனால் ராஜ்ய சபை வோட்டெடுப்பில் வெற்றி பெறுமா என்பது?????????????????????

                இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

                BUY ABOVE 5956 STAYED ABOVE 5970 TARGETS ,,5995,,6005,6015,,

                THEN 6040,,6083,,,,,,

                SUPPORT LEVELS 5915,5905.,,,


                SELL BELOW 5890 STAYED WITH VOLUME -5880,TARGETS 5869,5955,,5942,,


                THEN 5825,,5804,,,


                DISCLAIMER:


                இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                                     
                நன்றி :தினமலர் 

                Dec 4, 2012

                மனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்??????



                நண்பர்களே , எங்கே செல்கிறது இன்றைய நம் சமுதாயம் ஏன் இவ்வளவு கேவலமான எண்ணங்களும் ,கேவலமான மனநிலைகளும் உள்ளது நம் மனித சமுதாயத்தில் ??????

                நேற்று நடந்த ஒரு உண்மை சம்பவம் மிகவும் மனதை நெருடுவதாகவும் ,மனித சமுதாயத்தின் மேல் கோபமும் பட வைத்துவிட்டது .மிருகங்களுக்கு உள்ள மனிதாபமும் இல்லாமல் ,இந்த சமுதாயம் மிருகத்தை விட கேவலமான திகழ்கிறது .

                நேற்று நடந்த ஒரு சம்பவம் பற்றி உங்களுடன் பகிர்கிறேன் !


                அழகிய மரங்களும் ,பூக்களும் ,வயல்களும் நிறைந்த கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு சாலை ஓரத்தில் ஒரு இளம் பெண் சற்று மன நிலை பாதித்த நிலையில் மரத்தின் அடியில் தன்  உடலில் ஒரு ஒட்டு துணி கூட இல்லாத நிலையில் ,தன் உடலில் துணி இல்லை என்ற உணர்வும் அற்ற  நிலையில் நிர்வாணமாக அமர்ந்துள்ளார் .

                                                        

                அந்த இளம் பெண்ணை சுற்றி காமுகர்கள் கூட்டம் அருகில் நின்று ரசித்துக்கொண்டும் ,கண்களால் ருசித்துகொண்டும் ,,ஏன் சிலர் தன் கைப்பேசியில் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டும் உள்ளனர் .

                அருகில் உள்ள வீட்டினரோ " நமக்கேன் " என்றும், எனக்கு என்ன தேவை ? என்ற நிலையில் தன்  வேலைகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர் .

                அந்த அப்பாவி பெண்ணோ சமுதாயத்தினர் யாரும் உதவி செய்யாத நிலையில் அந்த நிர்வாண அபலை பெண் கூடி நின்று  வேடிக்கை பார்ப்பவர்களை கண்டு திரு திரு வென முழித்து கொண்டுள்ளாள் ,,,.தெய்வமே !

                இந்நிலையில் அந்த சாலை வழியாக இரு இளைஞர்கள் அவர்கள் வாகனத்தில் கடக்கிறார்கள் .அந்த கூட்டத்தை கண்டு   நின்ற இருவரும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்த இருவரும் அந்த இளம் பெண்ணின் அவல நிலையை கண்டு திகைப்பும் ,பதறி துடித்து போகிறார்கள் .



                உடனே அங்கு கூடி நின்று வேடிக்கை பார்த்த அனைவரையும் திட்டி துரத்தி விட்டு அருகில் உள்ள வீட்டினரிடம் அப்பெண்ணை பற்றி விசாரிகின்றனர் .அப்போது ,அந்த இளம் பெண்  அந்த பகுதியிலேயே வசிப்பவர் என்றும் மன நிலை பாதித்த நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்கின்றனர் .

                உடனே அருகில் உள்ள ஒரு வீட்டில் உள்ள பெண்ணிடம் உடைகளை வாங்கி அந்த பெண்ணின் மானம் காத்து அப்பெண்ணின் வீட்டில் விட்டு விட்டு அந்த பெண்  வீட்டாரிடம் அறிவுரையும் கூறிவிட்டு மன நிறைவுடன் நகர்கிறார்கள் .

                அந்த பெண்ணின் மானம் காத்த நண்பர்களில் ஒருவர் திரு .அருண்குமார் ,மற்றோரு நண்பர்  திரு .மகி.மகேந்திரன்  .நமது நண்பர்கள் இருவரும் இந்த சம்பவம் பற்றியோ ,பெயரோ எழுத வேண்டாம் என வேண்டிகொண்டனர் . ஒரு விழிப்புணர்வுக்காகவே உங்களுடன் இந்த பகிர்வை பகிர்கிறேன் .



                சமுதாயத்திற்கு முன் மாதிரியாக திகழம் இந்த  இளைஞர்களை நாம் மனதார வாழ்த்துவோம் !

                நண்பர்களே ,இது போன்ற சம்பவங்களை பார்ப்பவர்கள் ,நமக்கேன் என்று வேடிக்கை பார்க்காமல் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் !



                பெண் என்பவள் தெய்வம் ! நம்மை ஈன்றவரும் பெண் தான் ! நம் உடன் பிறந்த சகோதரியும் பெண் தான் !

                                                  

                பிறகு ஏன் சமுதாயமே ! நம் மனித சமுதாயத்தில் பிறந்த சக பெண்ணிடம் இவ்வளவு வக்கிரம் !


                அந்த இளம் பெண்ணின் வருங்காலத்தை கருதி அந்த இடத்தையோ ,அந்த பெண்ணை பற்றியோ நான் எழுதவில்லை .