Apr 28, 2013

சத்தமின்றி ஒரு சமூக சீர்திருத்தம்--ஈர நெஞ்சம்




சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி செய்து வரும் ஈர நெஞ்சம் அமைப்பும் ,அதன் நிறுவனரான ஈர நெஞ்சம் மகி எனும் மகேந்திரன் அவர்களை வாழ்த்துவோம் .

இன்று முதலாம் ஆண்டு நிறைவடைந்து ,இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு வாழ்த்துக்கள் ,

இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கோவை மாநகராட்சி காப்பகத்தில் எல்லோர்க்கும் தலை முடி வெட்டியும் ,நகங்கள் வெட்டியும் ,அவர்களை சுத்தபடுத்தியும் ,காப்பத்தில் உள்ள சுமார் 100 பேருக்கும் அறுசுவை உணவளித்தும் ,மர கன்றுகளை நட்டும் விழாவை கொண்டாடினர் .


இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக !












கடமையை செய்பவர்கள் கடமையை செய்தால் உலகில் யாரும் ஆதரவற்றோராக இருக்கமாட்டார்கள் .

அங்கு உள்ள எல்லோரும் வாழ்வில் நல்ல நிலையில் இருந்து காலத்தின் (சில மனிதர்களின் சுயநலத்தால் ) கட்டாயத்தால் இது போன்ற காப்பகத்தில் தன்  வாழ் நாட்களை கடத்திகொண்டுள்ளனர் .

ஈர நெஞ்சம் போன்ற நெஞ்கில் ஈரம் சுமக்கும் சிலரால் தான் இவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .ஈர நெஞ்சத்தின் ஈரமான செயல்கள் அநேகம் அதில் சில, சாலைகளில் பைத்தியங்களாக, சக சமூகத்தினரால் ஒதுக்கபட்டோரை காப்பகங்களில் சேர்த்துள்ளனர் .திரு நங்கைகளின் வாழ்வில் சுய தொழில் தொடங்கி சுய மரியாதையுடன் வாழ உதவி செய்துள்ளனர் .பல ஆதரவற்ற உடல் நலமின்றி இருந்த முதியோரை  மருத்துவனைகளில் சிகிச்சை பெற உதவி உள்ளனர் .பலருக்கு கல்வி மேற்கொள்ள கல்வி உதவி வழங்கி வாழ்வில் கல்வி விளக்கேற்றி உள்ளனர் ,இது போன்ற பல சாதனைகளை அடுக்கிகொண்டே செல்லலாம் .

இன்று ஈர நெஞ்சம் நிறுவனர் திரு .ஈர நெஞ்சம் மகி அவர்களை கௌரவித்து நேசம் அமைப்பு விருது வழங்கி உள்ளது .

                                          http://eerammagi.blogspot.in/



வாழ்க ! ஈர நெஞ்சம் மகி மற்றும் அமைப்பினர் ! தொடர்க உங்கள் சமூக சேவைகள் !