Nov 25, 2012

ரயில் பயணம் செய்பவரா ? டிசம்பர் 1 முதல் கவனம் !


மறவாதீர் ! மறவாதீர் ! மறவாதீர் ! 

         


 டிசம்பர் 1ம் தேதியில்  முதல்  முன்பதிவு வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் பயணத்தின்போது புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதன் அடையாள அட்டைகளாக :

            

  • வாக்காளர் அடையாள அட்டை, 
  • பாஸ்போர்ட், 
  • பான் கார்டு, 
  • டிரைவிங் லைசென்ஸ்,
  • வரிசை எண்களுடன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள், 
  • பென்ஷன் பே ஆர்டர், 
  • புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு,
  • சீனியர் சிட்டிசன் கார்டு, 
  • பிபிஎல் கார்டு, 
  • போட்டோவுடன் கூடிய இஎஸ்ஐ கார்டு, 
  • சிஜிஎச்எஸ் கார்டு 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, 
  • கல்லூரிகளில் இருந்து வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை, 
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ் புத்தகம், 
  • லேமினேட் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய வங்கிகளின் கிரடிட் கார்டு,
  •  ஆதார் அடையாள அட்டை, 
  • வரிசை எண்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை
ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

               

ஒரே டிக்கெட்டில் பலர் குழுவாக பயணித்தாலும் அனைவரிடமும் செல்லுபடியாகக்கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


குடும்ப சகிதமாக பயணம் மேற்கொண்டால், ஒருவர் மட்டும் அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது என்றும், மற்ற எந்த பிரிவில் சென்றாலும், தனித்தனி அடையாள அட்டைகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டும், விபத்து நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளர் கண்டறியும் நோக்கத்தோடும், இந்த புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Nov 21, 2012

பங்கு வர்த்தகம் மலர் -163


                                     

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5611.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5616.65 வரை உயர்ந்தது 5555.55 வரை கீழே சென்று 5583.85 -ல் முடிவடைந்தது.

  • பொது துறை வங்கிகளிடையே  போட்டி அதிகரித்துள்ளதால் வீடு ,வாகன கடன்களுக்கான வட்டி மேலும் குறையும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன .
  • வீட்டு வசதிக் கடன் பெற்றவர்கள், அக்கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தி வருவதால், இப்பிரிவில், பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அளவும் குறைந்து வருகின்றது .
  • நம் நாட்டின் நிலக்கரி பற்றாகுறை 18.50 கோடி டன்னாக இருக்கும் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன .நிலக்கரி மூலம் எடுக்கப்படும் மின் உற்பத்தி பற்றாக்குறைக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவன தலைவர் திரு நரஸிங்  ராவ் தெரிவித்துள்ளார் .
  • சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொண்டு வந்த அந்நிய முதலீடிற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது .



இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5594 STAYED ABOVE 5605 TARGETS ,,5617,,5630,5646,,

THEN 5661,,5680,,,,,,

SUPPORT LEVELS 5563,5553.,,,


SELL BELOW 5542 STAYED WITH VOLUME -5531,TARGETS 5518,5502,,5488,,


THEN 5467,,5446,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                   




Nov 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -162


                          
                                 

நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5588.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5603.60 வரை உயர்ந்தது 5561.55 வரை கீழே சென்று 5589.65 -ல் முடிவடைந்தது.


இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5599 STAYED ABOVE 5610TARGETS ,,5622,,5636,5651,,

THEN 5669,,5689,,,,,,

SUPPORT LEVELS 5567,,5556.,,,

                  
SELL BELOW 5545 STAYED WITH VOLUME -5533,TARGETS 5519,5503,,5487,,


THEN 5470,,5450,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     



Nov 18, 2012

பங்கு வர்த்தகம் மலர் -161



 நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  வெள்ளியன்று சரிந்து முடிவடைந்தது .நேற்று   5648.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5664.00 வரை உயர்ந்தது 5568.00 வரை கீழே சென்று 5580.55 -ல் முடிவடைந்தது.

  • பொருளாதார நிலை மோசமாக இருப்பது குறித்த பல்வேறு புள்ளிவிவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது இதன் பின் தொடர்ச்சியாகவும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்காதது போன்ற காரணங்களால் பங்குச் சந்தையில் சரிவு தொடர்கிறது
  • கடந்த இரு மாதங்களாக தற்போது உள்ள நிபிட்டி நிலையே தாழ்வு ஆகும் .
  • கடந்த வாரம் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.984 கோடி நம் சந்தையில் முதலீடு செய்துள்ளனர் .
  • சமாஜ்வாதி கட்சி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெள்ளிக்கிழமை திடீரென வெளியிட்டது. தேசிய அரசியல் சூழலில் குழப்பமான நிலை நிலவுவதையே  இது குறிப்பதாகக் கருதப்படுகிறது .
  •  2ஜி அலைக்கற்றைக்கு நடத்தப்பட்ட புதிய ஏலம் எதிர்பார்த்த அளவுக்கு மத்திய அரசுக்கு வருவாயை ஈட்டித் தரவில்லை. இதுவும்  பங்குச் சந்தையின் சரிவிற்கு ஒரு  காரணமாயிற்று.
  •  

  •   வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் பிரதமர் திரு .மன்மோகன் சிங் தலைமயிலான ஐக்கிய

    முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார் .

  • இந்த சம்பவங்கள் பங்கு வர்த்தகத்தில் ஒரு ஸ்த்திர தன்மை இல்லாத போக்கையும் ,சரிவிற்கும் காரணமாக அமையும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5590 STAYED ABOVE 5600TARGETS ,,5614,,5626,5640,,

THEN 5670,,5696,,,,,,

SUPPORT LEVELS 5570,,5560.,,,


SELL BELOW 5552 STAYED WITH VOLUME

-5535,TARGETS 5520,5505,,5490,,


THEN 5470,,5450,,,

DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

 

 

 

                     

Nov 17, 2012

மடிந்ததோ மனித நேயம் ?



                             

மடிந்ததோ மனித நேயம் ?

கை கொடுத்த ஈர நெஞ்சம் அமைப்பு 

மனிதனை சக மனிதனாய் பார்க்கும் நிலை மாறி வருகிறது .மனிதனிடம் பணம் இல்லாவிட்டால் அவன் குப்பைக்கு சமமோ ?

உயிர் காக்கும் மருத்துவர்களே உங்களை தெய்வமாக பார்க்கிறோம் நாங்கள் .அரசு மருத்துவமனைகளில் பணமற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்களே சிகிச்சைக்கு வருகிறார்கள் .தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து லட்ச கணக்கில் பணம் செலவு செய்ய இயலாத நிலையில் அரசு மருத்துவமனைகளை தேடி  சிகிச்சை பெற வருகிறார்கள் மக்கள் .

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும்  சில மருத்துவர்கள் தன்னிடம் தனியாக பார்க்கும் நோயாளிகளுக்கும்  , அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் பாரபட்சம் பார்ப்பதாகவும் , மக்களிடையே பரவலான கருத்து நிலவுகிறது .

ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இந்த தராதர வித்தியாசம் ? ஏன் இந்த பிரிவினை ? பணம் படைத்தவன் மட்டுமே மனிதனா ?

இந்நிலை முற்றிலும் அகற்றப்படவேண்டும் .

கோவையில் இன்று நடந்த ஒரு சம்பவம் :

கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு சிறுநீரகமும் இழந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு . தீரன் சிங் என்ற நோயாளி ஆதரவு யாருமற்ற நிலையில் மனிதாபம் இல்லாமல்  தனது மனைவியான திருமதி .லட்சுமியுடன்  அதிரடியாக சிறுநீரக பையும் அகற்றபடாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற்றபட்ட நிலையில்,

சிலர்  ஆட்டோவிற்க்கு பணம் தந்து உதவ அந்த ஆட்டோ நண்பரோ ரத்தினபுரியில் அனாதையாக இறக்கிவிட்டு செல்ல அந்த நோயாளி மற்றும் அவரது மனைவி இருவரும் இரவு முழுவதும் கடும் குளிரில் பனியில் நடுங்கியபடி இரவை  கழித்துள்ளார்கள் .இந்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .


நல்லெண்ணம் கொண்ட சிலர் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு ( 98433 44991 ) எண்ணில் தொடர்பு கொண்டு ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் அவர்களிடம்  விஷயத்தை தெரிவிக்க அவர் உடனடியாக திரு . தீரன் சிங்கை மீட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து மேல் சிகிச்சை மேற்கொள்ள  நடவடிக்கை மேற்கொண்டார் .

இந்த செய்தி கோவை மாலை நாளிதழ்களிலும் , தொலைகாட்சி செய்திகளிலும் வெளியானது . வலைதளங்களிலும் வெளியானது .


நன்றி : தமிழ் முரசு நாளிதழ் 








ஈர நெஞ்சம் அமைப்பிற்க்கும் ,  ஈர நெஞ்சம் அமைப்பாளர் திரு .மகேந்திரன் ,மற்றும் சம்பவ தகவல் தெரிவித்த நல்லெண்ணம் கொண்ட நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும் .






Nov 11, 2012

வாங்க ! தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் !


வணக்கம் ,

நண்பர்களே ,எல்லோருக்கும் இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள் ,தீப ஒளி போல் எல்லோர் வாழ்வும் ஒளியுடன்  இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன் .


நாங்க இந்த வருடம் தீபாவளி கொண்டாட ஈர நெஞ்சம் மகி அவர்களுடன் வடவள்ளியில் இயங்கும் அன்பாலயம் காப்பகத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மன நலம் பாதித்த சில ஆண்கள்   குழந்தைகளுக்காக புத்தாடைகளை வழங்கினோம் .


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஈர நெஞ்சம் மகி ஐயா அவர்களுக்கும் , அன்பாலயம் காப்பகத்தினருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல .











நம் எல்லோருக்கும் உதவ நம் உறவுகள்  பலர் உள்ளனர் .ஆதரவற்றோருக்கு உதவ நாம் முன் வரவேண்டும் .நம்முடன் இந்த உலகத்தில் பிறந்த யாரும் ஆதரவற்றோர் இல்லை .

அவர்கள் சிரிப்பில் நாம் இன்பம் காண்போம் !

எல்லோர் வாழ்விலும் இருளை அகற்றி  ஒளியும் ,சிரிப்பும் காணும் ஈர நெஞ்சம் மகி அவர்கள் ,

                                       

உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் மகி  சார் !



Nov 5, 2012

பங்கு வர்த்தகம் மலர் -160




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5709.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5747.95 வரை உயர்ந்தது 5700.00 வரை கீழே சென்று 5739.55 முடிவடைந்தது.

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5749 STAYED ABOVE 5760TARGETS ,,5772,,5785,5801,,

THEN 5819,,5839,,,,,,

SUPPORT LEVELS 5718,,5708.,,,

           

SELL BELOW 5697 STAYED WITH VOLUME -5685,TARGETS 5672,5658,,5643,,


THEN 5625,,5605,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Nov 2, 2012

கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு




கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவையை மற்றுமன்றி உலகையே உலுக்கிய  ரித்திக் ( 3 ம் வகுப்பு, 8-வயது சிறுவன்  )  ,முஸ்கின் ( 5ம் வகுப்பு ,11-வயது  சிறுமி  ) குழந்தைகள் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டனர் .

சம்பவம் பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :


இரு குற்றவாளிகளாக  மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் பிடிபட்டனர் ,இதில் மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டான் .

இது பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :

                                           
                                       

மனோகரனின் வழக்கு கோவை மகளிர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது .இரண்டு ஆண்டுகளில் நீண்ட தீர விசாரணைக்கு பின் தீர்ப்பு திரு .நீதிபதி அவர்கள் தீர்ப்பு கூறினார் .
இந்த தீர்ப்பில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.1000 அபராதமும் , இரட்டை தூக்கு தண்டனையும் வழங்கினார் .
இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாகும் .மேலும் இந்த உலகிற்கே இந்த தண்டனை ஒரு முன் உதாரணமாக அமையும் .

                                                 

இறந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்கவும் , இந்த வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்ட  நமது தற்போதைய A.D.G.P உயர்திரு .Dr.சைலேந்திர  பாபு ஐயா அவர்களுக்கும் , காவல் துறை சார்ந்த நண்பர்களுக்கும் ,நீதிமன்ற நண்பர்களுக்கும் ,இந்த வழக்கிற்கு உதவிய அனைத்து நல்  உள்ளங்களுக்கும் நன்றிகளும் ,பாராட்டுகளும் தெரிவித்துகொள்கிறோம் .

                              ஜெய் ஹிந்த் 






பங்கு வர்த்தகம் மலர் -159






நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5637.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5684.80 வரை உயர்ந்தது 5628.90 வரை கீழே சென்று 5676.00 முடிவடைந்தது.

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5695 STAYED ABOVE 5712TARGETS ,,5726,,5740,5751,,

THEN 5765,,5784,,,,,,

SUPPORT LEVELS 5676,,5664.,,,


SELL BELOW 5652 STAYED WITH VOLUME -5642,TARGETS 5631,5620,,5607,,


THEN 5580,,5556,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Nov 1, 2012

பங்கு வர்த்தகம் மலர் -158



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5629.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5651.80 வரை உயர்ந்தது 5613.2 வரை கீழே சென்று 5646.10 முடிவடைந்தது.

  • அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசியலுக்கும் - பெரும் தொழிலதிபர்களுக்கும் உள்ள அந்தரங்க உடன்பாடுகளையும் ,தொடர்புகளையும் , கடுமையாக சாடியுள்ளார் .
  • அரசியல் கட்சிகள் பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ,குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு .முகேஷ் அம்பானியை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.KG D6BASIN -  ஒப்பந்தத்தில் மத்திய அரசு திரு .முகேஷ் அம்பானிக்கு சாதகமாக நடந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
  • ,தற்போது மத்திய அரசை எரிவாயு விலையை அதிகரிக்க கூறி நிர்பந்திப்பதாகவும் ,தனது எரிவாயு உற்பத்தியை ஏறகுறைய நிறுத்தும் நிலையில் மத்திய அரசுக்கு எரிவாயு விலையை உயர்த்த மறைமுக அழுத்தம் தருவதாகவும் கூறி உள்ளார் .
                     

  • மத்திய் மந்திரி சபையில்  முன்னால் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த திரு .ஜெயபால் ரெட்டியின் மாற்றத்தின் பின்னணியில்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்ததாக அனைத்து செய்திகளிலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
  • KG D6 BASIN -  ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்து அரசே எரிவாயு உற்பத்தியை  மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிவாயுவை தர ஆவன செய்யுமாறு தெரிவித்துள்ளார் .
  • இதன் தாக்கமாக இன்று சந்தையில் எதிரொளிக்கும் என்று எதிபார்க்கலாம் .கவனம் தேவை .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5655 STAYED ABOVE 5665TARGETS ,,5678,,5693,5708,,

THEN 5738,,5760,,,,,,

SUPPORT LEVELS 5633,,5623.,,,


SELL BELOW 5612 STAYED WITH VOLUME -5598,TARGETS 5586,5572,,5560,,


THEN 5530,,5510,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது