May 19, 2015

36 வயதினிலே-திரை கண்ணோட்டம்

      நாம் உணவு என்கின்ற பெயரில் இரசாயனங்கள் கலந்த உணவுகளை ,காய்கறிகளை பயன்படுத்தி மெல்ல கொல்லும் ஆட்கொல்லி விஷத்தை ,நம் உடல் உறுப்புகளை சீரழிக்கும் நஞ்சை ,நாம் உணவாக உட்கொள்கிறோம் என்ற உண்மை கருத்தை வலியுறுத்தி உள்ளார்கள் .
      முடிவு : இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட உணவை பயன்படுத்த வேண்டும் .பெருகிவரும் கான்கிரிட் மரங்களால் விளை நிலங்களை வேகமாக இழந்து வரும் நிலையில் ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடிகளையும் ,வீட்டை சுற்றி உள்ள நிலங்களை பயன்படுத்தி ரசாயனமற்ற காய்கறிகளை பயிர்வித்து பயன்படுத்தவும்,இதனால் நம் உடல் ஆரோக்கியம் காப்பாற்றபடும்,விலை கொடுத்து விஷம் வாங்கும் செலவும் மிச்சம் .
      ஏற்கனவே பலரால் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் ,இத்திரைப்படம் மூலம் கருத்தை மக்களுக்கு உணரும்படி வலியுறுத்தி இருக்கும் “ நடிகர் சூர்யா ”( தயாரிப்பாளர் )வின் முயற்சி பாராட்டிற்குரியது .    
       நடிகை ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ளார்.அதே எதார்த்தமான துடுக்கான நடிப்பு- நேர்த்தி .பெண்களால் எதையும் சாதிக்க முடியும் ,பெண்களின் இலட்சியங்களை அடைய தடைகளை தகர்க்கும் ஆயுதமாக இலட்சிய கனவு,விடாமுயற்சி என்பதே“ YOUR DREAM IS YOU SIGNATURE " என்று நிறைவு செய்து முத்திரை பதித்துள்ளார்கள்.
   நாமும் இது போல வீட்டு தோட்டம் அமைத்து நம் ஆரோக்கியத்தையும் ,சமுதாயத்தின் ஆரோக்கியத்தையும்,காக்க விரும்புபவர்கள் ,நிஜ வாழ்வில் சமுதாய மாற்றத்திற்காக பாடுபடும் வாழ்த்துக்கும் ,பாராட்டிற்க்கும்,உரிய அண்ணன் திரு.வின்சென்ட் பால்ராஜ் அவர்களை தொடர்பு கொள்ளலாம் .


வலைதள முகவரி : http://maravalam.blogspot.in/

தொலைபேசி : 98940 66303