

இந்த கொடிய சீற்றம் இயற்கையின் சதி என்று கூறுவதா இல்லை. பணத்தாசையால் ஏற்பட்ட ஆபத்தா.?
பேராசையால் நேர்ந்த ஆபத்து

அழகிய காடுகளாகவும் ,பசுமை மரங்களுமாக இருந்த மலை அரசியை சிறு சிறு துண்டுகளாக கூறு போட்டு சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரிலும் ,பணக்காரர்களின் ஆடம்பர பூமியாகவும் ,காடுகளை அழித்து தோட்டங்களாகவும் ,விடுதிகளின் பணம் முட்டை இடும் வாத்தாகவும், ஊட்டி மாறியதின் விளைவு தான் இந்த பேராபத்து .நில மண் அரிப்பை தடுக்கும் மரங்களை ,காடுகளை வெட்டி எஸ்டேட் என்ற பெயரிலும் ,ஏராளமான ஹோட்டல்களும் ,வீடுகளும் ,காட்டை அழித்து சாலைகளுமாக மாற்றியதன் விளைவு தான் இந்த பேராபத்து.
குற்றவாளிகளா ? யார் காரணம்?

1) பேராசை பிடித்த சில மனிதர்கள்
2) பணத்தாசை கொண்ட சில வக்ர அதிகாரிகள்
3) (மரியாதைக்குரிய ) சில அரசியல்வாதிகள்
4 ) மனசாட்சியற்ற சில ______ துறைகள்
5 ) மனசாட்சியற்ற சில குத்தகைதாரர்கள்
6 ) பல ஆண்டுகளாக குற்றங்களை கண்டும் காணாமலும் விட்ட அரசுகள்
அரசிற்கு சில வேண்டுகோள்கள்
- ஆபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க மற்றும் உணவு ,அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்துதல்
- ஆபத்து மீட்பு நடவடிக்கைள் வேக படுத்த மேலும் அதிக ஆட்களை ஈடுபடுத்தவும்
- வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களை நியமித்தல் .

இந்த பேராபத்தில் சிக்கி இன்னுயிர் நீத்த அப்பாவி மக்களுக்கு என் சார்பிலும் ,இந்த அதிர்வை படிக்கும் அன்பு நெஞ்சங்கள் சார்பிலும்,என் நண்பர்கள் சார்பிலும்,எல்லா நல்ல உள்ளங்கள் கொண்ட மக்கள் சார்பிலும் ,இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம் .எங்கள் கண்ணீரை அஞ்சலியாக காணிக்கையாக சமர்ப்பிக்கிறோம்
மீளா துயரில் உள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கிறோம்.மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும், பாடுபடும் ,அனைவர்க்கும் கோடான கோடி நன்றிகள் பல .