Apr 3, 2009

வாகன ஓட்டுனர்கள் கவனத்திற்கு


சாலையின் நிறம் சிவப்பு
பெருகி வரும் வாகனங்களும் ,ஆனால் அதை விட பெருகி வரும் வாகன விபத்துகளும் நெஞ்சில் தினம் ஈட்டி போல் பாய்கிறது .ஏன் இந்த அவசரம்,யாருக்காக அவசரம் ,அவசரத்தினால் நாம் செல்லும் இலக்கை அடைவோமா என்பது கேள்விகுறி ???? வாகன ஓட்டிகள் குறிப்பாக லாரி ,பஸ்,வேன்,ஓட்டுனர்கள் பலர் வாகனம் ஓட்டும்போது தாறுமாராக ஓட்டுகிறார்கள்.கன ரக வாகனமா அல்லது எம வாகனமா என்பது புரியவில்லை .வாகன ஒட்டுனர்களுக்கும் குடும்பம் ,மனைவி ,குழந்தைகள் ,இருப்பார்கள் அல்லவா .அவர்களும் அதே சாலையில் நடக்க கூடும் .அவர்களும் அதே விபத்து நேர வாய்ப்பு உள்ளது அல்லவா .அதை மனதில் வைத்து எதிரில் உள்ளவர்கள் நமது சகோதரர்கள் ,நமது குடும்பத்தினர் ,என்று வாகனம் ஓடினால் சாலை விபத்து குறைய வாய்ப்பு உள்ளது .
ஒட்டுனர்களுக்கு ஒரு அஜாக்கிரதை உண்டு அதாவது விபத்து நேர்ந்தாலும் ஒன்று கடுமையான சட்டங்கள் இல்லை .இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பிடு தொகை வழங்கி விடும் ,சட்டங்கள் மிக கடுமையாக்க படவேண்டும் .லைசென்ஸ் நிரந்தர ரத்து ,கடும் சிறை தண்டனை வழங்க படவேண்டும் .
இன்றைய காலகட்டதில் ஒருவர் வீட்டை விட்டு சென்று திரும்ப வரும் வரை உறுதி இல்லாத நிலை உள்ளது.எனவே சாலை உபயோகிப்போர் எல்லோரும் எச்சரிக்கை உணர்வுடன்,பாதுகாப்பாக உபயோகிக்கவும்.


Tamilish

8 comments:

  1. இன்னும் நன்றாக வளர்ச்சி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அன்பு சந்திரன் அண்ணா,
    தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்களுக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  3. நல்ல எச்சரிக்கை பதிவு!

    வாழ்த்துக்கள் சக்தி!

    இன்னும் எதிர் பார்க்கிறேன் !

    ReplyDelete
  4. கோவைசக்திApril 05, 2009 10:47 PM

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஜீவன் ,
    பதிவை மேம்படுத்த உங்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் உதவி வேண்டுகிறேன் .நீங்கள் யாஹூ முகவரியில் இருப்பிர்களா ? யாஹூ முகவரி தரவும் .

    ReplyDelete
  5. அதிகமாக விழிப்புணர்வு பற்றி எழுதறீங்க... மாஸ்டர் இது வேண்டும்,,, ஆனால் மழைக்காலத்தில் கிடக்கும் சூடான மிளகாய் பஜ்ஜி எப்படி இருக்கும். அது போல் இது தேர்தல் சீசன். ஆகவே தாங்கள் சூட தேர்தல் செய்திகள் மற்றும் சில வெற்றி வாய்ப்பு அலசல்களை பதிவுடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  6. கோவை சக்திApril 08, 2009 1:42 AM

    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிம்பா,
    உங்கள் வழிகாட்டல் நாடுகிறேன் .நிறை குறைகளை சுட்டி காட்டவும் சரி செய்து கொள்கிறேன் .

    ReplyDelete
  7. நல்ல எச்சரிக்கை பதிவு!

    வாழ்த்துக்கள் சக்தி!

    ReplyDelete
  8. அன்புள்ள முருகன்,
    உங்கள் வருகைக்கு நன்றி .

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்