செந்தமிழ் மாநாடு வருது நம் இனத்துகாரங்க எல்லாரையும் அழிக்க
கோவை அதிகாரங்க வராங்க .எல்லோரும் நம் இனத்தவரை காப்பாற்றிக்கொள்ள ஆண்டவனை வேண்டுங்க.நாம் எத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை காப்பாற்றி நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தோம் .ஆனால் இவர்கள் நம்மை காப்பாற்றாமல் நம்மை அழிப்பதாக நினைத்து தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் ஆபத்து விதைக்கிறார்கள் என்று தன சக நண்பருடன் கூறி அழுதது சாலையோர மரங்கள்

எங்களை காப்பாற்ற யாராவது வருவார்களா????





தற்சமயம் எங்கள் நிலைமை இதுதான்
சமூக விரோதிகள் ஒருபுறமும்,நகர்புற வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள் கட்ட காடுகளை அழித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மறுபுறமும் ,சாலை மேம்பாடு என்ற பெயரில் அரசு அதிகாரிகளாலும் பல முனை தாக்குதலாலும் நாங்கள் அழிக்கப்பட்டு வருகிறோம்.

வெட்டப்பட்ட எங்களை இது போல் உருவாக்க உங்களால் முடியுமா.ஒருவேளை இன்று எங்களை மீண்டும் நீங்கள் விதைத்தால் நிச்சயமாக சில ஆண்டுகளில் நாங்கள் உங்களை பாதுகாப்போம்,,உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதலில் இருந்து உங்களை காப்போம்
