Apr 14, 2010

செந்தமிழ் மாநாடு வருது எங்களை காப்பாத்துங்க

அச்சச்சோ,,
செந்தமிழ் மாநாடு வருது நம் இனத்துகாரங்க எல்லாரையும் அழிக்க
கோவை அதிகாரங்க வராங்க .எல்லோரும் நம் இனத்தவரை காப்பாற்றிக்கொள்ள ஆண்டவனை வேண்டுங்க.நாம் எத்தனை ஆண்டுகளாக இந்த மக்களை காப்பாற்றி நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தோம் .ஆனால் இவர்கள் நம்மை காப்பாற்றாமல் நம்மை அழிப்பதாக நினைத்து தங்கள் வருங்கால சந்ததியினருக்கு பெரும் ஆபத்து விதைக்கிறார்கள் என்று தன சக நண்பருடன் கூறி அழுதது சாலையோர மரங்கள்



எங்களை காப்பாற்ற யாராவது வருவார்களா????

கண்களுக்கு விருந்தாக சாலையை அலங்கரிக்கும் என் அழகை பாருங்கள்



கடுமையான வெயிலிலும் உங்களை பாதுகாக்க நாங்கள் குடையாய் அணிவகுத்து நிற்பதை காணுங்கள்


தற்சமயம் எங்கள் நிலைமை இதுதான்
சமூக விரோதிகள் ஒருபுறமும்,நகர்புற வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள் கட்ட காடுகளை அழித்து வரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மறுபுறமும் ,சாலை மேம்பாடு
என்ற பெயரில் அரசு அதிகாரிகளாலும் பல முனை தாக்குதலாலும் நாங்கள் அழிக்கப்பட்டு வருகிறோம்.



வெட்டப்பட்ட எங்களை இது போல் உருவாக்க உங்களால் முடியுமா.ஒருவேளை இன்று எங்களை மீண்டும் நீங்கள் விதைத்தால் நிச்சயமாக சில ஆண்டுகளில் நாங்கள் உங்களை பாதுகாப்போம்,,உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமடைதலில் இருந்து உங்களை காப்போம்


உங்களை காக்க எங்களை காப்பாற்றுவீர்களா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



3 comments:

  1. மரங்களை அழித்து நானாடு நடத்தும் கொடுமையை கண்டித்ததற்கு நன்றி. ஆனால் உள்ளூர்காரன்களோ, பிற அரசியல் கட்சிகளோ, இயற்கை ஆர்வலர்களோ யாராவது எதிர்த்து நீதி மன்றத்தில் தடை வாங்கி இருந்தால் சில மரங்கள் பிழைத்திருக்கும்.

    எனது எதிர்ப்பை இங்கே பதிவு செய்து இருக்கிறேன் http://www.virutcham.com/?p=1889

    ReplyDelete
  2. வலிக்க செய்கின்றன படங்களும் கருத்துக்களும் ..............மேட்டுபாளையம் ரோட்டில் அடையாள சின்னங்களாக இருந்த மரங்களை தொலைத்த சாலை பாலைவனம் போல காட்சியளிக்கிறது .............என்ன செய்வது அரசை எதிர்க்க திராணியில்லை ஆனாலும் புதிய விருச்சதிர்கான விதை விதைக்க சக்தி இருக்கு புறப்படுவோம் இன்றே ...................பதிவு அருமை

    ReplyDelete
  3. தங்கள் முதல் வருகை நல்வரவாகுக !

    ""புதிய விருச்சதிர்கான விதை விதைக்க சக்தி இருக்கு புறப்படுவோம் ""
    சரியான கருத்து .
    நன்றி மேடம்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்