தொலைதூர கல்வியில் படிப்பது பாவமா? சாபமா? என்று கேள்வி எழ காரணம் தொலைதூர கல்வியில் படித்தவர்களை பல வேலை வாய்ப்புகளிலும் ,பல இடங்களிலும் தரம் தாழ்த்தி மதிப்பிட படுவதும், correspondence ல முடிச்சிங்களா?என இழுத்து கேள்வி கேட்கபடுகிறது .வேலை வாய்ப்பு விளம்பரங்களில் (regular) என்று குறிப்பிடுகிறார்கள் .போதாகுறைக்கு தமிழக அரசும் தொலைதூர கல்வியில் படித்தல் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இல்லை என்று அறிக்கை வெளி இட்டுள்ளது .ஏன் இந்த பகுபாடு ?ரெகுலர் கோர்ஸில் படிப்பவர்களுக்கு எந்த விதத்திலும் வேறுபாடு இல்லாமல் திறமையுடன் தொலைதூர கல்வியில் படிக்கிறார்கள் .எத்தனை பேர் தொலைதூர கல்வியில் படித்து பெரிய பதவி பொறுப்புகளில் உள்ளார்கள் .அவர்கள் திறமையற்றவர்களா .?தொலைதூர கல்வியில் படிப்பவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் படிக்கிறார்கள் .தன்னுடைய குடும்ப சூழ்நிலை ,பொருளாதார சூழ்நிலை,போன்ற பல காரணங்களால் ரெகுலர் கோர்ஸில் படிக்காமல் தொலைதூர கல்வியில் ஆயிரமாயிரம் இன்னல்களுக்கு மத்தியில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் படிக்கிறார்கள்.
தொலைதூர கல்வியில் போதிக்க வரும் ஒரு சில ஆசிரியர்களுக்கு பொறுமையும் ,போதிய திறமையும் ,இருப்பதில்லை .வேக வேகமாக சிலபஸ் முடித்தால் போதும் என்ற எண்ணத்துடன் மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ராக்கெட் வேகத்தில் பாடம் நடத்தி முடித்துவிடுகிறார்கள் .
பல்கலைகழகங்கள் தொலைதூர கல்வியில் போதிக்க நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் .அதேபோல பல்கலைகழகங்களை அணுகினால் சரியான பதில் கூறுவது இல்லை.மாணவர்கள் அலைகழிக்க படுகிறார்கள் .விதிவிலக்காக ஓரிரு பல்கலைகழகங்கள் சரியான பதில் கூறுகிறார்கள் .
ஒரு பல்கலைகழகத்தில் பரீட்சை எழுதினாலும் ரிசல்ட் தருவது இல்லை .ஒரே பாடத்தை ரிசல்ட் கிடைக்காமல் பல முறை எழுத வேண்டிய அவல நிலையும் உள்ளது .இதற்க்கு பொறுப்பற்ற நிர்வாக் திறமை படைத்த அலுவலர்களும் ,இயக்குனரையுமே சாரும் .
இந்த பதிவை ஏதேனும் பல்கலைகழகத்தில் பணிபுரிபவர் படித்தால் தயவு செய்து மாணவர்களிடம் அன்பான முறையில் சரியான வழிக்காட்டும்படி அன்புடன் வேண்டி கொள்கிறேன் .நீங்கள் கடமையை செய்யுங்கள் சலுகை காட்ட வேண்டாம் .இப்பதிவு யாரையும் புண்படுத்த அல்ல தொலைதூர கல்வியில் படிப்பவர்களின் அவல நிலையில் மிக சிலவற்றை சுட்டிக்காட்டி உள்ளேன் .
|
Tweet |
உங்கள் ஆதங்கம் சரிதான்.... ஆனாலும் என்னதான் படித்தாலும் திறமைக்கு கண்டிப்பாக் மதிப்பு இருக்கின்றது.... தோலைதூரத்தில் படித்த என் நண்பார் சிங்கப்பூரில் நல்ல வேலையிலும் நல்ல வருமானத்திலும் இருக்கின்றார்.... எத்தனை பேர்கள் நேரடியாக படித்திருந்தும் வேலைவெட்டியில்லாமல் இருக்கின்றார்கள்.. இப்படி நீங்களே பார்த்திருப்பீர்கள்..... உண்மை திறமைக்கும் மதிப்பு எப்போழுதும் உண்டு என்பதை நான் நம்புகின்றேன்
ReplyDeleteஅன்புள்ள தங்கதுரை ,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நண்பர் ஞானம் ,
ReplyDeleteவருக ,நீங்கள் கூறுவது சரி ,சிலர் மட்டுமே நல்ல வாய்ப்பை பெறுகிறார்கள் .அதாவது ஏற்கனவே ஒரு பணியில் இருந்து PG correspondence முடித்தால் சிரமம் இல்லை .அதுவே UG correspondence முடித்து புதிய வேலை தேடி போகும் போது அனேக நிராகரிப்புக்கு ஆளாக வேண்டி உள்ளது .
நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !
ReplyDeleteநன்றி தங்கம் ,
ReplyDeleteநீங்களும் தொடர்ந்து அதரவு தாருங்கள் .இப்போது font சரியாக உள்ளதா?
வணக்கத்துடன் ,
கோவைசக்தி